சந்திரயான்2 பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம் – ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து

சந்திரயான்2 பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

கடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் – 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

“வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம்”

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.எதிர்ப்பார்த்ததை விட 6000கி.மீ. வேகமாக அடைந்தது. இதனால் எரிபொருள் கூடுதலாக கிடைத்துள்ளது. இது வரலாற்று பயணத்தின் மிக சிறப்பான துவக்கம் ஆகும். இதன் மூலம் அறிவியல்/ஆய்வுகள் மேலும் விரிவடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திராயன் 2 விண்கலம் புவியின் சுற்றுவட்டப்பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும்,இது வரலாற்று பயணத்தின் துவக்கம் என பெருமிதத்துடன் கூறினார்.

‘சந்திரயான்-2’ வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சாதனையால் 130 கோடி இந்தியர்களும் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்2

‘சந்திரயான்-2’ ஏவப்பட்ட காட்சியை டெல்லியில் உள்ள தனது அலுவலக அறையில் இருந்தவாறு கண்டு மகிழ்ந்த மோடி, கரவொலியால் வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் சிவனை தொலைபேசியில் தொடர்புகொண்டும் இந்த வெற்றிக்காக உழைத்த அனைவரையும் வாழ்த்தினார்.

GSLV MkIII-M1 Successfully Launches Chandrayaan-2 spacecraft

‘சந்திரயான்-2’ விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம் நமது மகிமைக்குரிய வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இதன் மூலம் நமது விஞ்ஞானிகளின் ஆற்றலும் அறிவியல் யுகத்தின் முன்னேற்றத்தை அடைய துடிக்கு 130 கோடி இந்தியர்கள் ஊக்கமும் வெளிப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று ’சந்திராயன்2’ ஏவப்பட்டது, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்தியாவின் இந்த சிறப்பு விண்வெளி திட்டத்துக்காக உழைத்த நமது விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

சந்திரனின் தென் துருவத்துக்குள் மிக நெருக்கமாக தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சிறப்பை இன்னும் 50 நாட்களில் சந்திராயன்2 அடைந்து விடும். பின்னர் நடைபெறும் ஆய்வுகளின் மூலம் நமது அறிவுக்கு செறிவூட்டும் புதிய கண்டுபிடிப்புக்களை நாம் பெறலாம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த சாதனைக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவித்த சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கயா நாயுடு, ‘இந்த பெருமைக்குரிய சாதனைக்காக நமது விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாதனை பயணத்தின் மூலம் ‘இஸ்ரோ’விஞ்ஞானிகள் நமது நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளனர்’ என குறிப்பிட்டார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் ஆகியோரும் இந்த சாதனையை வாழ்த்தியுள்ளனர்.

GSLV MkIII-M1 Successfully Launches Chandrayaan-2 spacecraft

Please follow and like us: