சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்பு 2019

சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்பு 2019

சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்பு 2019ன் மூலம் நடக்கவிருக்கும் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி ஓர் சர்வதேச அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் போட்டியாகும். இந்தப் போட்டி முற்றிலுமாக சிறப்புத்திறன் உடைய மாற்றுத்திறனாளி வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்காக நடத்தப்படும் சர்வதேச அளவிலான நிகழ்வாகும். சிறப்பு ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இணைந்து சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத், சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஆசிய பசுபிக் ஆகியவை இணைந்து வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது.

Special olympics International Football Championship 2019

17.07.2019 அன்று துணை குடியரசு தலைவர் திரு.எம்.வெங்கய்யநாயுடு அவர்களை சிறப்பு  ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து 2019 போட்டியின் குழு உறுப்பினர்கள் டாக்டர். அமர்பிரசாத்ரெட்டி (தலைவர் எஸ்.ஓ.ஐ.எஃப்.சி.), திரு. சில்வின்ஜெயக்குமார் (இவோக் மீடியா & ஹோஸ்டிங் பார்ட்னர்), டாக்டர். எம்.எஸ்.நாகராஜன் (மூத்த விளையாட்டு மேலாளர் & எஸ்.ஓ.ஏ.பி.)  ஆகியோர் சந்தித்தனர். வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் கால்பந்தில், அவர்கையெழுத்து இட்டு குழு உறுப்பினர்களிடம் கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Please follow and like us: