சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை கூட்டும்!

சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை கூட்டும்!

சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 1,00,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான், இதற்குக் காரணம் என்று பாரிஸ் பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது. இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்றும் இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

சர்க்கரை மிகுந்த பானம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? 5 சதவீத அளவுக்கும் மேல் சர்க்கரை உள்ள பானங்களை, சர்க்கரை மிகுந்த பானங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர். பழரச பானங்கள் (கூடுதல் சர்க்கரை சேர்க்காதவையும்), குளிர்பானங்கள், இனிப்பாக்கப்பட்ட மில்க்சேக், சத்து பானங்கள், சர்க்கரை கலந்த டீ அல்லது காபியும் இதில் அடங்கும்.

சர்க்கரைக்குப் பதிலாக பூஜ்யம் கலோரி செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த சத்து பானங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. சர்க்கரை மிகுந்த பானங்களை, தினமும் 100 மில்லி கூடுதலாகக் குடித்தால், வாரத்துக்கு இரண்டு கேன்கள் அதிகமாகக் குடித்தால்- புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 18% அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

Please follow and like us: