சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்

சந்திரயான்-2 விண்கலம்

திடீரென தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் – 2

கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் -3 ஏவுகணை மூலம் சந்திரயான் – 2 ஏவப்படவிருந்தது. நிலவின் தென் பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் – 2 ஏவப்படவிருந்தது. ஒரு மாதத்துக்குப் பின்பே சந்திரயான் -2 ஏவப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ராக்கெட் ஏவுகணையில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரயான் -2 விண்ணில் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏவுகணை ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கையில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Please follow and like us: