எஸ்ஆர்எம் மாணவர்கள் உருவாக்கிய செற்கைகோள்- புவி வட்ட பாதையை 40 ஆயிரம் முறை சுற்றி சாதனை

எஸ்ஆர்எம் மாணவர்கள் உருவாக்கிய செற்கைகோள்- புவி வட்ட பாதையை 40 ஆயிரம் முறை சுற்றி சாதனை- எஸ்ஆர்எம் தலைவர் டாக்டர் சத்தியநாரயணன் பாராட்டு

புவியிலிருந்து வெளியேறும் கார்பண்டை ஆக்சைடு மற்றும் நீராவியின் அளவு பற்றி ஆராய எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்கள் வடிவமைத்து விண்னில் செலுத்திய செயற்கை கோள் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக புவி வட்ட பாதையில் 40 ஆயிரத்துக்கும் மேலாக சுற்றி வந்து சாதனை படைத்து வருகிறது. இந்த சாதனைக்காக எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மாணவர்களுக்கு உலக தரத்தில் உயர் கல்வி வழங்கி வருவதுடன் மாணவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக உருவாகும் வகையில் நிறுவனத்தில் மாணவர் ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆராய்ச்சி பணிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி மாணவர்களை ஊககபடுத்தி வருகிறது.அந்த வகையில் இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்( ISRO ) துணையுடன் புவியிலிருந்து வெளியேறும் கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீராவி அளவை ஆராய செயற்கை கோள் ஒன்றை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். செயற்கை கோளுக்கான சோலார் பேனல் மற்றும் மின்கலத்தை இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியது.அதனை மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள்( SRM SAT )2011ம் ஆண்டு அக்டோபர் மாதம்12ந்தேதி  ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் சேலுத்தப்பட்டது.

SRMSAT-1 COMPLETES 40,000 ORBITS

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக புவி வட்ட பாதையில் சுற்றவரும் இந்த செயற்கை கோள் புவி வட்ட பாதையை 40 ஆயிரம் தடவைக்கு மேலாக சுற்றி வருகிறது. பெரிய சாதனையாக கருதப்படும் இது பற்றி எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி துறை இணை இயக்குனர் முனைவர் எஸ்.ஆர். எஸ். பிரபாகரன் கூறியதாவது:

எஸ்ஆர்எம் மாணவர்கள் வடிவமைத்து விண்ணில் செலுத்திய செயற்கை கோளின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் தான் ஆனால் அது 8 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வருவது சாதனையாகும்.பொதுவாக மாணவர்கள் வடிவமைக்கும் இது போன்ற செயற்கை கோள் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் அதிலும் வெற்றி அடையாது.ஆனால் எஸ்ஆர்எம் மாணவர்களின் செயற்கை கோள் இவ்வளவு காலம் நீடித்து வருவதுடன் அதிக அளவில் புவி வட்ட பாதையில் சுற்றி வருவதுசாதனைக்குரிய முதல் தடவையானது.

மேலும் எஸ்ஆர்எம் நிறுவனம் ஆராய்ச்சி மாணவர்கள் மூலமாக புவி வட்டத்துக்கும் மேலாக செல்லும் செயற்கை கோள்,செயற்கை கோளில் பழுதடைந்த பாகங்களை ரோபாட் மூலமாக சரி செய்வதற்கான உள்ளிட்ட 3 புதிய செயற்கை கோள்கள் வடிவமைக்க இந்திய விண்வெளி நிறுவனத்தின் அனுமதி கோரப்படுகிறது என்றார்.

எஸ்ஆர்எம் மாணவர்கள் அனுப்பிய செயற்கை கோள் 40 ஆயிரம் புவி வட்டத்திற்கு மேலாக 8 ஆண்டுக்கும் சுற்றி வருவதற்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாரயணன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

SRMSAT-1 COMPLETES 40,000 ORBITS

Please follow and like us: