இந்தியாவில் கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின்  IIRSI 2019 – ஐ  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

இந்தியாவில் கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின்  IIRSI 2019 – ஐ  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

  • உலகெங்கிலுமிருந்து வருகை தந்திருக்கும் 20 பிரபல நிபுணர்களோடு 2000-க்கும் அதிகமான கண் மருத்துவர்கள் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர் 

சென்னை 6, ஜுலை, 2019: 34-வது உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை மாநாட்டின் தொடக்க விழாமாநாட்டை (IIRSIமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.  நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் மேம்பட்ட திறனை கொண்டிருக்க வேண்டுமென்பதற்காக உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் நிபுணர்களிடமிருந்து சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உத்திகளை கண் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் கற்றுக்கொள்வதை ஏதுவாக்குகின்ற ஒரு செயல்தளமாக இந்நிகழ்வு இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் அமைச்சர் டாக்டர்.   சி. விஜயபாஸ்கர்IIRSI 2019நிகழ்வின் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். IIRSI – அறிவியல் குழு தலைவர் டாக்டர் மஹிபால் சச்தேவ் அவர்கள், பொதுசெயலாளர் பேராசிரியர் அமர் அகர்வால் அவர்கள், IIRSI தலைவர் டாக்டர் அமித் தரஃப்தர் அவர்கள், IIRSI முன்னாள் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் ஆகிய பிரபல ஆளுமைகளும் இத்தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடக்கவிழா நிகழ்வில் உரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், “சுகாதாரம் இந்திய அரசாங்கத்திற்கு எப்போதும் பிரச்சனைக்குரிய மற்றும் சவாலுக்குரிய பகுதியாக இருந்து வந்திருக்கிறது. எனினும், கண் மருத்துவ சிகிச்சையில் தமிழ்நாடு மாநிலம் எப்போதும் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஒரு முன்னோடியாகவே இருந்து வருகிறது. மேம்பட்ட மருத்துவ திறன்களையும் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அறிவையும் பெற்று நாட்டின் பல பல்வேறு பகுதிகளில்அளப்பரிய சேவையாற்றி வரும் பலர், தமிழ்நாட்டிலுள்ள முதன்மையான கண் மருத்துவ  கல்லூரிகளில் கல்வி பயின்றவர்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன். கண்புரைநோய், கண்அழுத்த நோய், விழித்திரை மற்றும் கருவிழி நோய்கள் போன்ற கண் கோளாறுகளால் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பதால், இத்தகைய மாநாடும்,மேம்பட்ட பயிற்சிகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.  பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நம்நாடு தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது.  இந்நாட்டில் 12 மில்லியன் பார்வை திறனற்றவர்கள் வாழ்கின்றனர் மற்றும் 450 மில்லியன் நபர்களுக்கு பார்வைக் கோளாறுகளை சரிசெய்யும் சிகிச்சை அவசியப்படுகிறது.  இந்த மாபெரும் சவாலை எதிர்கொள்வதற்கு இந்திய கண் மருத்துவர்களின் சிகிச்சை திறன்களை மேம்படுத்துவதில் IIRSI போன்ற மாநாடுகள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன,” என்று கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும் IIRSI – ன் பொது செயலருமான புரொஃபசர் அமர் அகர்வால் பேசுகையில்“உலகளவில் கண் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்துகிற IIRSI –வருடாந்திர மாநாடானது, இந்தியாவின் கண் மருத்துவவியல் தளத்தின் நாட்காட்டியில் மிக முக்கிய நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது.  இந்த ஆண்டு நடைபெறும் இம்மாநாட்டில் இத்துறையில் நிகழ்ந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இந்திய கண் அறுவைசிகிச்சையாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அமெரிக்க ஐக்கிய நாடு, துருக்கி, பிரேசில், ஜெர்மனி, எகிப்து மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து 20 முதன்மையான கண் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.  பங்கேற்பாளர்களுக்கு சிறப்பான ஆதாயத்தை வழங்கும் வகையில் பல்வேறு புத்தாக்கங்களை இந்த நிகழ்வு வெளிப்படுத்தும்.  இந்தியாவில் கண் மருத்துவ நிபுணர்கள் பெருமளவில் பங்கேற்கும் இந்த வருடாந்திர மாநாடானது, இந்திய கண் அறுவைசிகிச்சை மருத்துவர்களின் கண் பராமரிப்பு திறன்களை இன்னும் பெருமளவு உயர்த்தவும் மற்றும் அவர்களது மேற்கத்திய சகாக்களுக்கும்,தங்களுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப இடைவெளியை நிரப்பவும் மிகப்பெரிய அளவில் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.  ஒட்டுமொத்த அளவில், நோய் பாதிப்பை கண்டறிதல் மற்றும் அவைகளுக்கு சிகிச்சை வழங்கல் ஆகிய அம்சங்களில் இந்தியாவின் கண் பராமரிப்பு துறையின் திறன்களையும் மற்றும் சேவை வழங்குனர்களையும் கணிசமாக அதிகரிப்பதில் IIRSI மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது,” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் அவர்கள் பேசுகையில்“இந்தியாவிலிருந்தும்  மற்றும் உலகெங்கிலுமிருந்தும் வருகை தரும் கண் மருத்துவ நிபுணர்களின் இத்தகைய கௌரவம் மிக்க மாநாட்டு நிகழ்வை சென்னை ஏற்பாடு செய்து நடத்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  ஆயிரக்கணக்கான கண் மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்றிருப்பதை காண்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்புரைநோய், கண்அழுத்தநோய் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்திய கண் மருத்துவர்கள் மேம்பட்ட திறனை கொண்டிருப்பதை இத்தகைய தேசிய அளவிலான செயல்தளம் நிச்சயமாக ஏதுவாக்கும்.  தமிழ்நாட்டில் தற்போது இருக்கின்ற கண் பராமரிப்பு துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் உலகத்தரம் வாய்ந்தது.  கட்டுபடியாகக்கூடிய மிதமான கட்டணத்தில் தரம்வாய்ந்த சிகிச்சையை இம்மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.  மிகசிக்கலான கண் குறைபாடுகளினால் அவதியுறுகின்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உலகளவில் மருத்துவ சுற்றுலா வரைபடத்தில் பொதுமக்கள் விரும்பித்தேடும் முதன்மையான அமைவிடங்களுள் ஒன்றாக நமது தமிழ்நாடு மாநிலமும் உருவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறும் IIRSI 2019 மாநாடானதுஆர்வமூட்டும் பல அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்தால்மிக் ப்ரீமியர் லீக்என்பதில் கண்புரைநோய்க்கான சிகிச்சையில் தங்களது அதிக சவால்மிக்க நேர்வுகளை பங்கேற்பாளர்கள் வீடியோக்கள் வழியாக காட்சிப்படுத்துவார்கள்.  “மீட் அண்டு கிரீட்” என்ற பெயரிலான நிகழ்ச்சிஒரு பிரத்யேக கலந்துரையாடலுக்காக அனுபவம் மிக்க கல்வியாளரின் மேஜையில் உடன் அமர்ந்து உரையாட பங்கேற்பாளர்களை அனுமதிக்கும். “கோர்ட் மார்ஷ்யல் என்ற நிகழ்வுகண் மருத்துவியலில் அறுவைசிகிச்சையாளர்களால் எதிர்கொள்ளப்படும் அறிவியல் சவால்களின் பல்வேறு நிலைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறது மற்றும் இதில் இடம்பெறுகின்ற தீவிரமான முடிவெடுத்தல் செயல்பாட்டையும் மற்றும் அதன் விளைபயனையும் விவாதிக்கிறது.  நேரடி செயல்முறையான வெட்லேப் கோர்ஸ்கண் மருத்துவயியல் சார்ந்த நிழற்பட போட்டிதிரைப்பட திருவிழா மற்றும் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுபலருக்கும் காட்டப்படுகின்ற அறுவைசிகிச்சை ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் பங்கேற்கும் கண் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். அறுவைசிகிச்சை அமர்வுகள்நேரலையாக டாக்டர் அகர்வால்ஸ் கண்மருத்துவமனையிலிருந்து ஒளிபரப்பப்படும்.

ஜுலை 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்கள் நிகழ்வான இம்மாநாடு, சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதன் விவரங்கள் மற்றும் அட்டவணையை, www.iirsi.com  என்ற வலைதளத்தில் காணலாம்.

TN Chief Minister Edappadi K.Palaniswami inaugurates IIRSI 2019

Please follow and like us: