ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள்

ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்க கைக்கவசங்கள்

போடி:தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த் தங்கத்துரை, திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் 6 கிலோ தங்கத்தாலான கை கவசங்களை வழங்கினார்.போடியில் இலவம் பஞ்சு பேட்டை உரிமையாளர் தங்கத்துரை. இவர் ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு தோறும் பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலையானுக்கு 6 கிலோ தங்கத்தில் வலது, இடது கைகளுக்கான தங்க கவசம் தயாரித்து தேவஸ்தான பட்டாச்சார்யார்கள் மூலம் சிறப்பு பூஜை செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமலைக்கு கொண்டு சென்று அங்கு நேற்று ஏழுமலையானுக்கு வழங்கினார்.

Please follow and like us: