இந்தியன் டெரைன்-ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்

Mahendra Singh Dhoni signed as brand ambassador for apparel brand Indian Terrain, with Venky
Rajgopal, Founder-Chairman, Indian Terrain Fashions Ltd & Charath Narsimhan, MD, Indian Terrain
Fashions Ltd.

இந்தியன் டெரைன்- ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்

சென்னை, 20 மே, 2019: ஆண்களுக்கான ஆடைகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான இந்தியன் டெரைன், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியை அதன் பிராண்டு தூதராக ஒப்பந்தம் செய்திருக்கிறது.  இந்த பிராண்டின் ஒரு துடிப்பான புதிய முகமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் தோனியை அறிமுகம் செய்வதன் மூலம் அர்ப்பணிப்புணர்வுடன் முழுமையை எட்டுவது மற்றும் உயர்நேர்த்தி நிலையை விடாமுயற்சியுடன் அடைவது என்ற நோக்கத்திற்கான பேரார்வத்தை இந்நிறுவனம் வலுவாக வெளிப்படுத்துகிறது.  இந்த பண்பியல்புகள், இந்த பிராண்டுக்கும் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான தோனிக்கும் பொதுவானவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியான் டெரைன் ஃபேஷன்ஸ் லிமிடெட் – ன் நிறுவனர் மற்றும் தலைவரான திரு. வெங்கி ராஜகோபால் இந்நிகழ்வின்போது பேசுகையில், இந்தியன் டெரைன் குடும்பத்திற்கு மகேந்திர சிங் தோனியை மனமார வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.  ஸ்பிரிட் ஆஃப் மேன்என்ற இலச்சினையை எங்களது பிராண்டு கொண்டிருக்கிறது.  எமது பிராண்டு பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து பண்பியல்புகள் மற்றும் அம்சங்களில் மகேந்திர சிங் தோனி உண்மையிலேயே நிஜ வாழ்க்கையில் எடுத்துக்காட்டாக பிரதிபலிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.  உத்வேகமளிக்கும் அவரது செயலிருப்பு, மிக முக்கியமான நேரங்களில் மிகச்சிறப்பாக சிந்திக்கும் திறன், அமைதியான மனஉறுதி மற்றும் கிரிக்கெட் மைதானதிற்குள்ளேயும் மற்றும் வெளியேயும் ஆற்றலை வெளிப்படுத்தும் செயல்திறன் என்ற தோனியின் பண்பியல்புகள் தான் எமது நுகர்வோர்களுக்கும் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் இந்த பிராண்டின் மிக பொருத்தமான பிரதிநிதியாக அவரை நிலைநிறுத்துகிறது. நாடெங்கிலும் அவருக்கு இருக்கின்ற பிரபல்யமும் மற்றும் புகழும் இந்த பிராண்டை இன்னும் உயரே அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும்,” என்று கூறினார்.

இந்தியன் டெரைன் ஃபேஷன்ஸ் லிமிடெட் – ன் பிராண்டு தூதரான மகேந்திர சிங் தோனி, இந்நிகழ்வின்போது பேசுகையில், “இந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக இருப்பதில்  நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  சென்னையும் மற்றும் அதன் மக்களும் கடந்த பல ஆண்டுகளாக என் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பு மற்றும் தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டிருக்கும் பாச உணர்வு ஆகியவற்றால் எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பான இடத்தை கொண்டிருக்கின்றனர் என்பது நன்கு அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.  இதனால், சென்னையில் பிறந்த பிராண்டான இந்தியன் டெரைன்  உடன் இணைந்து செயல்படுவது இயற்கையானதாகவும் மற்றும் அதிக ஈர்ப்பு கொண்டதாகவும் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். விளையாட்டு மைதானத்திற்கு வெளியே எனது ஸ்டைலை இந்த பிராண்டு மிக நேர்த்தியாக, அப்படியே பிரதிபலிக்கிறது.  இந்த பிராண்டுடன் ஒரு அற்புதமான இன்னிங்ஸை கொண்டிருப்பதை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்,” என்று கூறினார்.

குளிர்ச்சியான, அதேவேளையில் சௌகரியமான ஆடைகளை அணிந்து பணிக்கும் மற்றும் பொழுதுபோக்கு கேளிக்கைக்கும் இடையே சாதுர்யமாக சவாரி செய்யும் இளம் நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்தியன் டெரைன் – ன் இலக்காகும்.  கிரிக்கெட் மைதானத்திலும் மற்றும் அதற்கு வெளியேயும் தனது ரசிகர்களுக்கு எண்ணற்ற தருணங்களில் உத்வேகமும், உற்சாகமும் அளித்திருப்பதை கருத்தில் கொள்ளும்போது, இந்தியன் டெரைன் – ன் நடப்பு பிராண்டு கோட்பாடான “மேக்ஸ் யூ ஃபீல் குட்” (உங்களை சிறப்பானவராக உணரச் செய்கிறது) என்பது, மகேந்திர சிங் தோனியுடன் நேர்த்தியாகப் பொருந்துகிறது.

இந்தியன் டெரைன் ஃபேஷன்ஸ் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் திரு. சரத் நரசிம்மன் பேசுகையில்,மிக கச்சிதமான, சிறந்த பிராண்டு தூதரை மகேந்திர சிங் தோனி அவர்களிடம் இந்தியன் டெரைன் கண்டறிந்திருக்கிறது.  உலகமெங்கும் பரவியிருக்கின்ற அவரது பொதுவான ஈர்ப்பு, அவரது அலட்டிக்கொள்ளாத ஆளுமைத்தன்மை மற்றும் மற்றவர்களிடமும் தொற்றிக்கொள்கின்ற உற்சாகமான ஆற்றலோடு ஒருங்கிணைவது, இளம் நுகர்வோர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு பூர்த்தி செய்வதில் உதவும் மற்றும் இதன் மூலம் இந்த பிராண்டுக்கு இன்னும் மிகப்பெரிய நற்பெயரை பெற்றுத்தர உதவும்.  தென்னிந்திய சந்தைகளில் இந்த பிராண்டின் தலைமைத்துவ நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இந்திய சந்தைகளில் அதிவிரைவான விரிவாக்கத்திற்கும்  இந்த ஒத்துழைப்பு பெரிதும் உதவும்.  இந்த புதிய தொடக்கத்தோடு டெரைன் ஜீன்ஸ் என்பதன் கீழ் எமது தயாரிப்புகளின் அணிவரிசையை மேலும் நேர்த்தியாக்கவும் மற்றும் இளம் இந்தியர்களுக்கு ஒரு தனித்துவமான ஆடைகளின் கலெக்ஸனை உருவாக்கவும் ஆவலோடு நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார்.

ஆர்க்கா ஸபோர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. மிஹிர் திவாகர் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்துப் பேசுகையில், “விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்கள் மேலாண்மை நிறுவனமாக, எமது வீரர்களுக்காக  ஒருங்கியல் தன்மைகொண்ட ஒத்துழைப்பு உறவுகளை நாங்கள் எப்போதும் தேடி கண்டறிகிறோம்.  மகேந்திர சிங் தோனிக்கும் மற்றும் இந்தியன் டெரைன் பிராண்டுக்கும் இவையே ஒரு இயற்கையான பொருத்தம் இருக்கிறது.  இருதரப்புக்கும் பரஸ்பர ஆதாயமளிக்கக்கூடியதாக இது இருக்கும் என்பதால், இந்த சிறப்பான ஒத்துழைப்பு உறவை ஏதுவாக்கியதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்.

ALSO READ:

INDIAN TERRAIN SIGNS CELEBRATED CRICKETER MAHENDRA SINGH DHONI AS BRAND AMBASSADOR

Please follow and like us: