தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி  போர்டிஸ் மலர் மருத்துவமனை வழங்கியது

தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி  போர்டிஸ் மலர் மருத்துவமனை வழங்கியது

சென்னை, 17 மே, 2019: உலக உயர் ரத்த அழுத்த நாளாக மே 17-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியை போர்டிஸ் மலர் மருத்துவமனை இன்று நடத்தியது.

உலக உயர் ரத்த நாளையொட்டி நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு மன இறுக்கமான சூழ்நிலையில் உற்சாகமாக செயல்படுவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை கிண்டி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அதிகாரி செல்வம் மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனை உளவியல் ஆலோசகர் சினேகா ஜார்ஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியின்போது தீயணைப்பு மீட்புத்துறை வளாகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு மருத்துவ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சினேகா பேசுகையில், கோபம், பதட்டம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் மன அழுத்தம் ஏற்படுவதால் அது உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்பட வழி வகுக்கிறது. நீங்கள் உணர்ச்சி வசப்படும் சமயங்களில் உங்கள் ரத்த குழாய் பாதிப்பு அடையும். இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படும். ஆரோக்கியமற்றவற்றை புரிந்து கொண்டு விழிப்புடன் இருப்பது என்பது உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கான முதல் நிலையாகும் என்றார்.

மேலும் அவர், ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் ரத்த அழுத்தம் உடல் நலத்தை பாதிக்காமல் இருப்பதற்காக அதன் அறிகுறிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதை நிர்வகித்தல் ஆகியவை குறித்தும் பேசினார். மேலும் இந்த நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் உதவி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இதில் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் ஒரு நிகழ்ச்சியான, உங்களது பலூனில் என்ன இருக்கிறது? என்னும் நிகழ்ச்சியில் உங்களின் மன அழுத்தம் முழுவதையும் ஊதி பலூனில் உட்செலுத்துங்கள்; பின்னர் அந்த பலூனை எப்படி கையாள்வது என்பது குறித்து கண்காணியுங்கள்; இதேபோல் ஒவ்வொரு நபரின் பொறுமையை சோதித்தல் மற்றும் மேம்படுத்தும் விதமாக நூல் பந்து விளையாட்டு ஆகியவை நடத்தப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் தனி நபர்கள்  தங்கள் மன நலத்திற்கு ஏற்ப தங்கள் பணியிட நிலைமைகளை புரிந்து கொண்டு செயல்படுவதற்கு உதவும். இந்த நடவடிக்கைகள் மூலம் பங்கேற்பாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான காரணங்கள், மற்றும் அந்த சூழ்நிலையில் அதை கையாள்வது, உதவிகள் பெறுவது குறித்து விளக்கி கூறப்பட்டது.

ALSO READ:

Fortis Malar Educates Fire and Rescue Services Departmenton Stress Management 

Please follow and like us: