4 நபர்களில் 1 நபர் மட்டுமே நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டுள்ளனர் – மேக்ஸ் லைஃப் கணக்கெடுப்புத் தகவல்

தேசிய சராசரியைக் காட்டிலும் சென்னையின் இந்தியா புரொடெக்ஷன் குவோஷன்டான 42 புள்ளிகள் அதிகமாக இருப்பினும், 4 நபர்களில் 1 நபர் மட்டுமே நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டுள்ளனர் – மேக்ஸ் லைஃப் கணக்கெடுப்புத் தகவல்

• 86% ஆயுள் காப்பீட்டு உரிமைத்தன்மையைக் கொண்டிருப்பதன் வழியாக நாட்;டிலேயே முதன்மையாக இருப்பினும், 4-ல் 1 நபரே நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டுள்ளனர்
• இந்நகரக்கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் வெறும் 28% மட்டுமே நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டுள்ளனர்
• இறப்பு மற்றும் பெரிய அளவிலான உடல்நலக்குறைபாடுகள் போன்ற எதிர்கால நிச்சயமற்றதன்மைகளை எதிர்கொள்ள 55% மக்கள் தயாராக இல்லை

சென்னை, மே 2019: இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், சென்னை மக்களில் 86மூ ஆயுள் காப்பீட்டினைக் கொண்டுள்ளதையும் மற்றும் நாட்டிலேயே உச்சபட்ச ஆயுள் காப்பீடு கொண்ட நகரமாக சென்னை திகழ்வதையும் இன்று அறிவித்துள்ளது. மேக்ஸ் லைஃப் மற்றும் கன்தார் ஐஆசுடீ நடத்திய ‘இந்தியா புரோடெக்ஷன் குவோஷென்ட்’ கணக்கெடுப்பின் படி, சென்னை நகரம் 100 – க்கு 42 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இது நகர்புற இந்தியாவின் சராசரியான 35 புள்ளிகளைக் காட்டிலும் அதிகமாகும். இந்த முப்பரிமான கணக்கெடுப்பு,வாடிக்கையாளர்களின் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கான நிதியியல் தயார்நிலையை, அவர்களது ஆயுள் மற்றும் நீள்காலக் காப்பீடு விழிப்பணர்வு, உரிமைதன்மை மற்றும் பாலிசியை வாங்குகையில் அவர்களது முதன்மை அச்சங்கள், விருப்பங்கள் மற்றும் தூண்டிகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், துணை மேலாண்மை இயக்குனர் திரு.ஏ.விஸ்வானந்த் அவர்கள்,“இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை, ஆயுள் காப்பீடு பாதுகாப்பு மற்றும் அறிவுக் குறியீட்டில், எங்களது “இந்தியா புரொடெக்ஷன் குவோஷென்ட்” கணக்கெடுப்பில் உச்சபட்ச நிலையில் வீற்றிருக்கிறது. பிற முன்னணி நகரங்களுடன் ஒப்பிடுகையில், ஆயுள் காப்பீட்டு உரிமையாளர்கள் எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் இருப்பினும், நீள்காலக் காப்பீட்டில் சற்று பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நீள்காலக் காப்பீடு ஒரு மலிவான மற்றும் நிதியியல் பாதுகாப்பின் மிக அடிப்படை அம்சமாகத் திகழ்கிறது. ஒருவரது குடும்பத்தை வாழ்வின் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து பாதுகாப்பதன் உண்’மையான மதிப்பை புரிந்துகொண்டு, ஆயுள் காப்பீடு மீதான அணுகுமுறையை குடிமக்கள் மறு ஒருங்கமைப்பு செய்ய வேண்டும். இக்கணக்கெடுப்பின் உறுதியான கண்டுபிடிப்புகள் ஆயுள் காப்பீடு குறித்த மக்களின் அடிப்படை மனப்பான்மைகள் மற்றும் நடத்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”என்று கூறினார்.

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு மற்றும் அறிவுக் குறியீட்டில் பல்வேறு நகரங்கள் மத்தியில் சென்னை உச்சபட்ச ரேங்கிங்கை பெற்றுள்ளது.

நகர்புற இந்தியர்களின் புரொடெக்ஷன் குவொஷன்ட் (ஒரு பாதுகாப்பாகவும் மற்றும் எதிர்கால நிச்சயமற்ற தன்மைக்கு மனரீதியில் தயாராவதையும் அடிப்படையாகக் கொண்ட 0-100 வரையிலான புள்ளிகள் உடைய அளவீனம்) வேறும் 35 ஆகத் திகழ்கிகையில், தென்னிந்தியாவின் புள்ளிகளாக 38 அவற்றைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக அஹமதாபாத், பெங்களுரூ, மும்பை, லக்னோ,விசாகபட்டிணம், கொல்கத்தா போன்ற பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை புரொடெக்ஷன் குவொஷென்ட்டானது உச்சபட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, 47 என்னும் ஒரு அறிவுக் குறியிடு புள்ளியுடன், சென்னை குடிமக்கள் இந்தியாவிலேயே (அறிவுப் புள்ளி குறியீடு 39) காப்பீடு குறித்த அதிக விழிப்புணர்வு மற்றும் புரிதல் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.

மோசமான நீள்காலக் காப்பீடு உரிமைதன்மையாக 28மூ சதவிகிதம் திகழ்கிறது. நகரின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி நபர்கள் அதன் பலன்கள் குறித்து அறியாமல் உள்ளனர்.

ஆயுள் காப்பீட்டு உரிமைதன்மையின் தேசிய சராசரியான 65% உடன் ஒப்பிடுகையில், தென்னிந்தியா அதிகப்படியான ஆயுள் மற்றும் நீள்காலக் காப்பீட்டை (முறையே 74% மற்றும் 24%) கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் இது கிழக்கில் 72% மற்றும் 24% ஆகவும், மேற்கில் 57% மற்றும் 16%ஆகவும், வடக்கில் 59% மற்றும் 22%ஆகவும் மற்றும் தேசிய அளவில் 65% மற்றும் 21% ஆகவும் திகழ்கிறது.

சென்னை மக்களில் 86% மக்கள் ஆயுள் காப்பீட்டினைக் கொண்டுள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகமாகும். எனினும் நீள்காலக் காப்பீடானது வெறும் 28% ஆகத்திகழ்வது, நிச்சயமற்ற எதிர்காலத்தன்மைகளை சந்திக்க இந்நகரம் மிகக்குறைவாகவே தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், நீள்காலக் காப்பீடு தொடர்பான விழிப்பணர்வான பிற இந்திய நகரங்களின் 47% – ஐ காட்டிலும்,51மூ ஆக அதிகமாகத் திகழ்வது, பெறும் வழியில் தடைகற்கள் இருப்பதை உறுதி செய்கின்றன.

திடீர் பெரும் உடல்நலக் குறைபாடுகளை சந்திக்க நகரம் நிதியியல் ரீதியில் தயாராக இல்லை அதிகப்படியான ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு மற்றும் உரிமை தன்மையைக் கொண்டுள்ள போதிலும், பிற இந்திய நகரங்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் சேமிப்பு நீடித்து நிலைக்கும் என்று நம்புகின்றனர். திடீர் பெரும் உடல்நலக்குறைபாடுகளுக்கான செலவீனங்கள் குறித்து சென்னை குறைவான மதிப்பீட்டினைக் கொண்டுள்ளதும் மற்றும் அத்தகைய அரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்துப் போரிட முழுவதும் தயாராக இல்லை என்றும் இக்கணக்கெடுப்பின் வழியாக தெரியவந்துள்ளது.

திடீர் பெரும் உடல்நலக்குறைபாடு கண்டறியப்பட்டால், தங்களது குடும்பத்திற்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என நகர மக்கள்தொகையில் 39% மக்கள் நம்புகின்றனர்.90% மக்கள் நோய்களுக்கான சிகிச்சை செலவீனங்கள் குறித்த விழிபணர்வு இன்றி இருக்கின்றனர். வெறும் 4மூ மக்கள் மட்டுமே திடீர் உடல்நலக்குறைபாடுகள் தங்களது குடும்பத்தை பாதிக்கும் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். எனினும், 54% மக்கள் அது குறித்து சிந்திக்கவில்லை என்பதே நிஜமாகும்.

திடீர் உடல்நலக்குறைபாடுகள் அல்லது இறப்பு ஏற்பட்டால், தங்களது சேமிப்புகளால் ஒரு ஆண்டிற்கும் குறைவான கால அளவே சமாளிக்க முடியும் என்று 28% சென்னைவாசிகள் நினைக்கின்றனர்.

தென்னிந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான காப்பீடு மற்றும் சேமிப்புகள் இடைவெளி தொடர்ந்து குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது
நகர்புற இந்தியாவில், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் ஆயுள் காப்பீடு மற்றும் நீள்காலக் காப்பீடு உரிமைதன்மை மிகவும் குறைவாக உள்ளது. நகர்புற இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டிருக்கும் ஆண்களின் அளவு 68மூ ஆகவும் பெண்களின் அளவு 59% ஆகவும் திகழ்கிறது. நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டிருக்கும் ஆண்களின் அளவு 22மூ ஆகவும் பெண்களின் அளவு 19% ஆகவும் திகழ்கிறது.

மேலும் இக்கணககெடுப்பில், தென்னிந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் இடையில் ஒரு மிகப்பெரிய ஆயுள் காப்பீடு இடைவெளி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டிருக்கும் ஆண்களின் அளவு 79% ஆகவும் பெண்களின் அளவு 64% ஆகவும் திகழ்கிறது. நீள்காலக் காப்பீட்டினைக் கொண்டிருக்கும் ஆண்களின் அளவு 25% ஆகவும் பெண்களின் அளவு 22% ஆகவும் திகழ்கிறது.

அதே போல் தென்னிந்தியாவில் பெண்களின் வருவாயில் 40% அடிப்படை செலவுகளுக்கு பயன்படும் அதே நேரத்தில் ஆண்களில் வருவாயில் 37% மட்டுமே அடிப்படை செலவுகளுக்கு பயன்படுவதால், ஒப்பீட்டளவில் பெண்களுக்கு சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இப்பிராந்தியத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் சேமிப்புகளிலும் பெரும் இடைவெளி காணப்படுகின்றன. குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பெண்கள் 75% மற்றும் ஆண்கள் வெறும் 46% சேமிக்கின்றனர்

தென்னிந்திய மில்லீனியல்கள் மத்தியில், நிதியியல் எதிர்காலம்,வயதாவதற்குப் பிந்தைய பாதுகாப்பு ஆகியவைகள் முன்னுரிமை பெறவில்லை
இக்கணக்கெடுப்பில், 25-35 வயதிற்குட்பட்ட நகர்புற இந்திய மில்லீனயல்கள் மத்தியில், பயணம், சொகுசு ஆகியவற்றின் மீதான விருப்பமே அதிகமாக இருப்பதும் மற்றும் 43% தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கக்கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. வெறும் 44% இளைஞர்கள் மட்டுமே நீள்காலக் காப்பீடு குறித்த விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களில் வெறும் 17% மட்டுமே அவற்றை வாங்கியுள்ளனர். தாங்கள் மேற்கொண்டுள்ள பிற முதலீடுகள் காரணமாக, ஆயுள் காப்பீடு வாங்குவது குறித்து 22% நகர்புற இந்திய இளைஞர்கள் சிந்திக்கக்கூட இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயமாகும்.

தென்னிந்தியாவிலும் இளைஞர்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காத போக்கே காணப்படுகிறது. இப்பிராந்தியத்திலுள்ள மல்லீனியல்கள் ஓய்வுகால, வயதானகாலத்திற்கான பாதுகாப்பு (44%), மருத்துவ அவசர நிலைகள் அல்லது பொருளீட்டுபவரின் இறப்பு (முறையே 22% மற்றும் 33%) ஆகிவற்றைக் காட்டிலும்,வீடு வாங்குதல்(53%) போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். 43% மில்லீனியல்கள்; மட்டுமே நீள்காலக் காப்பீடு குறித்த விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களில் வெறும் 22% மட்டுமே அவற்றை வாங்கியுள்ளனர்.

தென்னிந்தியர்களை நீள்காலக் காப்பீடு நோக்கி சிந்திக்கத் தூண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக, நடப்பு வாழ்க்கை முறை மீதான தாக்கம் மற்றும் குழந்தைகளுக்கான செலவீனங்கள் திகழ்கின்றன இக்கணக்கெடுப்பில், 50% – க்கு மேற்பட்ட நகர்புற இந்தியர்களின் சம்பாதிக்கும் நபர் இறத்தல் தொடர்பான மிகப்பெரிய அச்சுறுத்தல்களாகத் திகழ்பவை நிதியியல் பாதுகாப்பின்மை மற்றும் நடப்பு வாழ்க்கை முறையின் மீதான தாக்கும் ஆகியவைகளாகும்.

ஒப்பீட்டளவில், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடப்பு வாழ்க்கை முறை மீதான தாக்கம் மற்றும் குழந்தைகளுக்கான செலவீனங்கள் அச்சுறுத்தல் காரணிகள் 54% ஆகத் திகழ்கிறது.

நாட்டின் தகவல்தொழில்நுட்ப மையமானது தற்போதும் நீள்காலக்காப்பீட்டினை முகவர் ஆலோசகர்கள் வழியாக வாங்குவதையே விரும்புகிறது நகர்புற இந்தியர்களில் 79% மக்கள் முகவர் ஆலோசகர்களிடமிருந்தும் மற்றொரு 15மூ மக்கள் வங்கிகளிலிருந்தும் அவர்களது நீள்காலக்காப்பீட்டினை வாங்குவதையே விரும்புகின்றனர். நாட்டின் தகவல்தொழில்நுட்ப மையமாகத் திகழும் போதும்,தென்னிந்திய மக்களில் 82% மக்கள் முகவர் ஆலோசகர்களிடமிருந்தும், 15% மக்கள் வங்கிகளிலிருந்தும் மற்றும் 3% மக்கள் ஆன்லைனிலும் தங்களது நீள்காலக்காப்பீட்டினை வாங்க விரும்புகின்றனர்.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் குறித்து (www.maxlifeinsurance.com)
இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டுதாரர்களில் ஒன்றாகத் திகழும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் மிட்சுயி சுமிடோமோ இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இடையிலான கூட்டு நிறுவனமாகும். மேக்ஸ் ஃபைனான்சியஸ் சர்வீசஸ் லிமிடெட், முன்னணி இந்திய பல்-வர்த்தக குழுமமான மேக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகவும் மற்றும் மிட்சுயி சுமிடோடோ இன்சூரன்ஸ் உலகின் முன்னணி காப்பீட்டுதாரர்களின் ஒன்றாகத் திகழும் ஆளுரூயுனு காப்பீட்டுக் குழுமத்தின் ஒரு உறுப்பினராகவும் திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் நிதியியல் எதிர்காலத்தை பாதுகாப்பதன் வழியாக, மிகவும் விரும்பப்படும் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகத் திகழும் நோக்கத்தினை மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கொண்டுள்ளது.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் முழுமையான நீண்டகால சேமிப்புகள், பாதுகாப்பு மற்றும் ஓய்வு தீர்வுகளை அதன் உயர் தரம் வாய்ந்த முகவாண்மை வினியோக மற்றும் பல்-வாயில் வினியோகக் கூட்டாளிகள் வழியாக வழங்குகிறது. ஒரு நிதியில் ரீதியில் நிலையான நிறுவனமாக 18 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உறுதியான வரலாற்றினைக் கொண்டுள்ள மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், மிகச்சிறந்த முதலீட்டு நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. தேவை அடிப்படையிலான விற்பனை மற்றும் தர சேவைகளின் மீது ஒரு உறுதியான வாடிக்கையாளரை-மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்நிறுவனம் கொண்டுள்ளது மற்றும் தரமான சேவைகளை அதன் மிகச்சிறந்த மனிதவளத்தின் வழியாக வழங்கி வருகிறது.

2017-18 நிதியாண்டில், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், ரூ.12,501 கோடிகள் மொத்த ரிட்டர்ன் ப்ரீமியம் மற்றும் ரூ.5,11,541 கோடிகள் மதிப்பிலான உத்தரவாதத் தொகையை பதிவு செய்துள்ளது. 31 மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் மேலாண்மையின் கீழுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.52,237 கோடிகளாகும் மற்றும் பதிவுகள் மற்றும் மிகைத்தொகை உட்பட்ட மூலதனப் பங்கு ரூ.2,689 கோடிகளாகும். இந்நிறுவனம் அதன் 10,226 பணியாளர்கள் மற்றம் 54,791 முகவர் ஆலோசகர்களுடன், நாடு முழுவதும் உள்ள 210 அலுவலகங்களிலிருந்து 32 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

 

ALSO READ:

Chennai’s India Protection Quotient of 42 higher than the national average but only 1 in 4 own term insurance, reveals Max Life Survey

Please follow and like us: