எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது

எச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.

ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தரத்தை உயர்த்தும் வகையிலும், அதிகளவிலான இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும் பயிற்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சென்னை மே 15, 2019: இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து எச்சிஎல் ஸ்குவாஷ் பயிற்சித் திட்டத்தை எச்சிஎல் நிறுவனம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்று பெருமையுடன் அறிவிக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான சூழலை முற்றிலும் மேம்படுத்த முடியும். இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டு முழுவதையும் முழுமையான அளவில் மாற்றும் வகையில் அதாவது இளையோர், மூத்தோர் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தரத்தை உயர்த்திட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக எச்சிஎல் இந்தியா சுற்றுலா திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தரத்திலான பயிற்சி வாய்ப்புகளை இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முழுவதுமான எச்சிஎல் ஸ்குவாஷ் பயிற்சித் திட்டங்கள்:-

பயிற்சி முகாம்கள் மற்றும் நடுவர்களுக்கான கிளிக்குகள் – எச்சிஎல் மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு சார்பில் இந்தியாவில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு உரிய திறன்களும், தரமும் உயர்த்தப்படும். இது உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ள தரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு இரண்டாம் நிலையிலான பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 13-லிருந்து மேலும் உயர்த்தி மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நடுவர்களுக்கான கிளிக்குகளையும் ஏற்படுத்தித் தர உள்ளது. இதன் மூலம் நடுவர்களுக்கான தரத்தினை மேம்படுத்திட முடியும்.

எச்சிஎல் இந்திய சுற்றுலா – எச்சிஎல் மற்றும் ஸ்குவாஷ் கூட்டமைப்பு இணைந்து ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது. இது இந்தியாவில் உள்ள வளரும் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்துக்கு உயர்த்திட பெரிதும் வழிவகுக்கும். மேலும், பல இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச இடங்களுக்கு எந்தவித செலவும் செய்யாமல் பயணம் மேற்கொண்டு பயிற்சி பெற்றிடலாம்.

எச்சிஎல் செயல்பாட்டு முகாம்கள் – ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் என்ற அடிப்படையில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு பயிற்சிகளைக் கொண்டு பயிற்சி அளிக்க 32 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். விளையாட்டு நுணுக்கள், மனரீதியான பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு வகைகள் என பல்வேறு அம்சங்கள் கற்றுத் தரப்பட உள்ளன. ஒவ்வொரு தனித்தனி விளையாட்டு வீரரின் செயல்பாடுகள், பயிற்சி பெறும் திறன்கள் ஆகியன பட்டியலிடப்படும். இது அவர்களை எதிர்த்து விளையாடு சர்வதேச தரத்திலான வீரர்களை எதிர்கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இதுகுறித்து எச்சிஎல் கார்ப்பரேஷனின் தலைமை செயல்பாட்டு அலுவலர் திரு சுந்தர் மகாலிங்கம் கூறியதாவது:-

ஸ்குவாஷ் போட்டிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எச்சிஎல் நிறுவனம் ஆதரவு அளித்து வருகிறது. இப்போது உலகத் தரத்திலான தனிநபர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிக்கான சூழலை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. போட்டிகளை நடத்துவது, பயிற்சிகள் அளிப்பது, மன மற்றும் உடல் ரீதியாக வீரர்களை தயார் செய்வது போன்ற அம்சங்களை தனித்தனியாக மேற்கொண்டால் காலமும், முதலீடுகளும் அதிகமாக இருக்கும். இப்போதைய முயற்சிகளின் மூலமாக இந்திய ஸ்குவாஷ் விளையாட்டில் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைக் கண்டறிந்து அவர்களை சர்வதேச அரங்கில் அடையாளம் காட்ட முடியும் என்றார்.

இதுகுறித்து ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் திரு தேவேந்திரநாத் சாரங்கி கூறியதாவது:-

நமது நாட்டைச் சேர்ந்த வீரர்களான ஜோஸ்னா சின்னப்பா, செளரவ் கோஷல் ஆகியோர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை பதித்துள்ளனர். உலக அளவில் 50 வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பில் மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எனவே, அடுத்த தலைமுறையிலான புதிய வீரர்களை அடையாளம் கண்டறிய வேண்டிய அவசியமாகும். சிறப்பான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மூலமாகவே அதனை கண்டறிய முடியும். இப்போதைய முயற்சின் மூலமாக ஸ்குவாஷ் போட்டிக்கு தலைசிறந்த இடமாக இந்தியாவை உருவாக்கிட முடியும் என்றார்.

எச்சிஎல் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியானது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்குவாஷ் கூட்டமைப்புடன் இணைந்து 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சீனியர் அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

ALSO READ:

HCL and Squash Rackets Federation of IndiaPartner to Transform India’s Squash Ecosystem 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *