தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு – அதிகபட்சமாக நாமக்கல்லில் 79 சதவீதம்

தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு – அதிகபட்சமாக நாமக்கல்லில் 79 சதவீதம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இதற்கிடையே, மாலை 6 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

“ 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் முழுமையான தகவல் பிறகு அறிவிக்கப்படும். தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. வாக்குச்சாவடியை கைப்பற்றிய சம்பவங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற்றது” என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *