மனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு

மனநலம் பாதித்து சிகிச்சையால் முன்னேறிய 159 பேர் வாக்குப்பதிவு

தமிழகத்தில் முதன்முறையாக, மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தகுதியான 159 பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 900க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நிலையிலுள்ள 159 பேரை மருத்துவமனை இயக்குநர், பேராசிரியர்கள் இணைந்து தேர்வு செய்தனர். அவர்களுக்கு வாக்காளர் அட்டையாள அட்டை வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. பிறரைப் போல், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஒவ்வொருவராக வாக்களித்தனர். மனநல சிகிச்சை பெறுபவர்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து வாக்களிக்க வைத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அடுத்த முறை மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதை மேம்படுத்த திட்டமிட்டுளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: