ஆசிய வாலிபால் போட்டியில் பங்கேற்கிறது சென்னை ஸ்பார்டன்ஸ் அணி

ஆசிய வாலிபால் போட்டியில் பங்கேற்கிறது சென்னை ஸ்பார்டன்ஸ் அணி

புரோ வாலிபால் போட்டியில் அடுத்த ஆண்டுமுதல் 2 புதிய அணிகள்
பெண்கள் புரோ வாலிபால் போட்டி நடத்த திட்டம்
இந்திய வாலிபால் சம்மேளனம் அறிவிப்பு
6 அணிகளுடன் நடைபெற்ற புரோ வாலிபால் லீக் போட்டியில் அடுத்த ஆண்டு புதிதாக மேலும் இரண்டு அணிகள் இணைய இருப்பதாக இந்திய வாலிபால் சம்மேளன செயல் அலுவலர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
புரோ வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் புரோ வாலிபால் லீக் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

இந்திய வாலிபால் சம்மேளனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து வாலிபால் ரசிகர்களுக்காக மிகப்பிரமாண்டமாக ரூபே ப்ரோ-வாலிபால் போட்டியை நடத்தி முடித்திருக்கிறது. 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன. பான்ஹோமி விளையாட்டு நிகழ்ச்சி நிறுவனத்தின் அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணி, பீகான் விளையாட்டு நிறுனத்துக்கு சொந்தமான காலிகட் ஹீரோஸ் அணி, சென்னை ஸ்பார்டன்ஸ் விளையாட்டு நிறுவத்தின் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, யு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு மும்பை வாலி அணி, அகில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ப்ளாக் ஹாக்ஸ் ஹைதராபாத் அணி, கொச்சி ப்ளூ ஸ்பைக்கெர்ஸ் அணிகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியை 3-0 (15-11, 15-12, 16-14) என்ற நேர் செட் கணக்கில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் FIVB ஆசிய போட்டிக்கு சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. ஆசிய ஆண்கள் கிளப் வாலிபால் போட்டிக்காக திறமை மிக்க வீரர்கள் 6 அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மாபெரும் வெற்றியை ஈட்டிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. அணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நிகழ்ச்சியில் இதயபூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது. மனதை ஒருநிலைப்படுத்தி விளையாடியதே சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் தனித்துவமான வெற்றிக்கு காரணம். சென்னை அணி வெற்றிக்காக உழைத்தவர்கள் அணியின் இணை உரிமையாளர்கள், பேஸ்லைன் வென்சர்ஸ், VFI விளையாட்டு உபகரணங்கள் பார்ட்னர் (Spartans), பிராண்டிங் பார்ட்னர்(Arrit Events), ஸ்ட்ராட்டஜிக் பிஸினஸ் பார்ட்னர்ஸ்(First Feet), சோசியல் மீடியா பார்ட்னர் (E21 Designs) மற்றும் விளையாட்டு வீரர்கள்.

FIVB ஆசிய ஆண்கள் கிளப் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் வீரர்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய FIVB போட்டியின் லெவல் 3 பயிற்சியாளர் டாக்டர் MH குமாரா, “சென்னை அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் பாடுபட்டு இருப்பதாகக் கூறினார். நம்மிடம் ஒரு கதாநாயகன் இல்லை. இது கதாநாயகர்களின் விளையாட்டு என்று வர்ணித்தார். எந்த காயங்களும் இன்றி சென்னை அணி வீரர்கள் இறுதி போட்டிக்கு நுழைந்தார்கள். ஆனால், இறுதி போட்டிக்கு வர பல்வே சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொருமுறை நான் வீரர்களை சந்திக்கும்போதும் அவர்கள் போடிக்காக தயாராகவே இருந்தார்கள். சென்னை மக்கள்தான் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.

“விளையாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல சென்னை ஸ்பார்டன்ஸ் புதிய பாதையை திறந்து இருப்பதாக” சென்னௌ ஸ்பார்டன்ஸ் அணியின் தலைவர் திரு ராஜசேகரன் கூறினார்.

“முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கடைசிவரை ஸ்பார்டன்ஸ் கடைசிவரை தக்கவைத்துக்கொண்டார்கள். அதுவே மிக உயர்ந்த இடத்தை பிடிப்பதற்கான வழிகாக அமைந்தது. ஒழுங்கம், கட்டுப்பாடு இரண்டும் வெற்றிக்கான சக்திகளாக நினைக்கிறோம். சென்னை மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அது வாலிபால் வரலாற்றில் ஒரு சிம்மசொப்பனமாக திகழும்” என்று சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் வியாபாரக்குழு தலைவர் டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன் தெரிவித்துள்ளார்.

“சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இதை செய்துகாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது” என்று சென்னை ஸ்பார்டன்ஸ் அணி விவகாரங்கள் தலைவர் திரு சம்பத் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

“சென்னை ஸ்பார்டன்ஸ் அணியோடு இணைந்து பணியாற்றியது எங்களுடைய கனவு நிறைவேறியதைப் போல் இருக்கிறது” என்று சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் பார்ட்னர்கள் திரு சீனா ஹனிமி ரெட்டி பனேம், திரு கிரண் குமார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளாக கால்ஸ் நிறுவத்தின் மரபணுவாக வாலிபால் திகழ்ந்து வருகிறது. விளையாட்டுத் துறையில் வாலிபால் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் கால்ஸ் குழுமம் செயல்பட்டுவருகிறது.

ALSO READ:

Chennai Spartans Volleyball team participating in FIVB Asia Men’s Club Volleyball championship

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *