ஜே.கே. ரித்திஷ் மறைவு: தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

ஜே.கே. ரித்திஷ் மறைவு: தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

“நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான திரு. ஜெ.கே.ரித்தீஷ் ( எ ) சிவகுமார் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர். ஜெ.கே.ரித்தீஷ் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டபடுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும்.அவரது இழப்பால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம் ”

-தென்னிந்திய நடிகர் சங்கம்

M.நாசர்
(தலைவர்)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *