விளையாட்டு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஏப்ரல் 13, 2019

இளம்  விளையாட்டு வீர்ர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் திறமை மிக்கவர்களை, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களை  ஊக்குவித்து, அவர்களது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் விதமாக, இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டலப் பிரிவு உதவித்தொகை வழங்க உள்ளது.  அதன்படி 2019 – 2020 ஆம் ஆண்டுக்கு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களும், 18 முதல் 24 வயது வரை உள்ள கிராமப்புற / நகர்ப்புற மாணவர் / மாணவர் அல்லாதோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும் விளையாட்டு பிரிவுகளில் திறமை மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுப் பிரிவுகள் :

1)      கால்பந்து (ஆண்கள்)

2)      ஹாக்கி (ஆண்கள்)

3)      கிரிக்கெட் (ஆண்கள்)

4)      டேபிள் டென்னிஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

5)   பேட்மிண்டன் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

6)   பளு தூக்குதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

7)   தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்)  பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2019
மேலும் விவரங்களுக்கு www.fci.gov.in என்ற இணைய தளத்தைக் காணவும்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *