எம்பிரான் சினிமா விமர்சனம்

எம்பிரான் சினிமா விமர்சனம்

ரேட்டிங் 2.5/5

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம், சுமலதா தயாரிப்பில் வெளிவந்துள்ள எம்பிரான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணபாண்டி.
இந்த படத்தில் ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி, சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை- பிரசன்னா, பாடல்கள் -கபிலன் வைரமுத்து, ஒளிப்பதிவு-எம்.புகழேந்தி, எடிட்டர் -மனோஜ், கலை-மாயவன், நடனம்-தீனா, விஜி சதீஷ், சண்டை-டான் அசோக், உடை-ஜெய், சிறப்பு சப்தம்-சேது, புகைப்படம்-மூர்த்தி, டிசைன்ஸ்-ஜெகன், சதீஷ், தயாரிப்பு நிர்வாகம்-கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா.
தாத்தா மௌலியுடன் வசிக்கும் ராதிகா ப்ரீத்தி டாக்டரான ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார். ரெஜித் செல்லும் இடங்களுக்குகெல்லாம் சென்று காதலுடன் ரசிக்கும் ராதிகா ப்ரீத்தியைப் பற்றி ரெஜித்திற்கு ஒன்றுமே தெரியாது. தன் காதலை சொல்ல துடிக்கும் ராதிகா ப்ரீத்திற்கு சந்தர்ப்பம் கை கொடுக்காமல் போகிறது. இறுதியில் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் காட்டி க்ளினிகிற்கு செல்லும் ராதிகா அங்கு ரெஜித் இல்லாமல் வீடு திரும்புகிறார். வீட்டில் உடல் நிலை மோசமாக தாத்தா மௌலி விசாரிக்க, டாக்டர் ரெஜித்துடன் ஒரு தலை காதல் பற்றி சொல்ல தாத்தா உடனே ராதிகாவை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் க்ளினிக்கிற்கு செல்கிறார். வழியில் விபத்து ஏற்பட்டு தாத்தா உயிரிழக்க, ராதிகா சுயநினைவை இழந்து நடைப்பிணமாக உணர்வு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த நிலையில் ரெஜித் மேனன் ராதிகாவை எப்படி தெரிந்து கொள்கிறார்? தெரியப்படுத்துவது யார்? அதன் பின் ரெஜித் ராதிகாவை கண்டுபிடித்து காப்பாற்றுகிறாரா? காதல் கை கூடியதா? என்பதே சிறப்பான காதல் கதை.
டாக்டர் பிரியனாக ரெஜித் மேனன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி காதலியை கண்டு பிடித்தவுடன் உடல் நிலையை சரி செய்து குணப்படுத்தி அதன் பின் காதலிக்க தொடங்குவதில் மனதில நிற்கிறார்.
கன்னட நடிகையான ராதிகா ப்ரித்தி இந்தப் படத்தில் ஜெயாவாக குறும்புக்கார பெண்ணாகவும், தாத்தாவின் அன்பு பேத்தியாகவும், ரெஜித்தை தூரத்திலிருந்தே பார்த்து ரசிக்கும் விதமும், உடலை வறுத்திக் கொள்வதும், விபத்து எற்பட்ட பிறகு கண்கள் அசையாமல் அனைத்து காட்சிகளிலும் நடித்த விதம் அருமை, இவரின் அழகும் இயல்பான நடிப்பும் கச்சிதம்.
தாத்தாவாக சந்திரமௌலி பேத்தியின் காதலை நிறைவேற்றும் பாசமிகு தாத்தாவாக டாக்டர் ரெஜித்தை பயமுறுத்தாமல் கனவிலே பேத்தியின் ஆசையை சொல்லி உணர்த்தும் விதம் புதுமை.
இவர்களுடன் ரெஜித்தின் அம்மாவாக கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கபிலன் வைரமுத்துவின் பாடல் வரிகளில் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் கனவையும், நிஜத்தையும் வேறுபடுத்தி புரிதலுடன், ஒருங்கிணைத்து சிறப்பாக கொடுத்துள்ளார்.
எழுத்து, இயக்கம்-கிருஷ்ணபாண்டி. ஒரு அழகான காதல் கதையை நவீன தொழில்நுட்பம் இருந்தும் பேசாமல், பார்க்காமல் காதலன் காதலியை கண்டுபிடிப்பதை யதார்த்தமாகவும், காட்சிகளை தோய்வில்லாமல் நகர்த்தி, அதில் ஒரு த்ரில்லரை பயமுறுத்தாமல் கொடுத்து, காதலியின் பயத்தை போக்கி நினைவுகளை வரவழைத்து புதிய இயற்கைக்கு அப்பாற்பட்ட காதல் அத்தியாயத்தை அழுத்தமாக கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணபாண்டி. கனவு பலிக்கும் என்று கூறும் வார்த்தை உண்மை தான் என்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட காதல் கதை.

மொத்தத்தில் எம்பிரான் நவீன காதல் கோட்டை.

Please follow and like us: