தொழுகை நடந்ததால் பிரச்சாரத்தை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி

தொழுகை நடந்ததால் பிரச்சாரத்தை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி

சேலம், மார்.23– சேலம் கருமந்துறையில் பிரச்சாரத்தை துவக்கிய எடப்பாடி பழனிசாமி வாழப்பாடிக்கு மதியம் 12 மணி அளவில் வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது அங்குள்ள பகுதியில் தொழுகை ஆரம்பித்தது. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை அப்படியே நிறுத்தி விட்டு தொழுகை முடியும் வரை அங்கேயே இருந்து, தொழுகை முடிந்ததும் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அங்கிருந்த மக்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள்.

பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் தெரு ஓரம் டீக்கடையை பார்த்தார். உடனே அங்கே சென்று அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தார். அவருடன் வேட்பாளர்கள் சுதீஷ், சரவணன் ஆகியோரும் அமர்ந்து டீ குடித்தார்கள்.

அந்த டீக்கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த எளிமையான செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டினார்கள்.

ஆம்புலன்சுக்கு வழி

அதேபோன்று ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்த போது கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. உடனே பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ‘மைக்’கிலேயே ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள் என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டுக் கொண்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் சென்ற பின்னர் பிரச்சாரத்தை துவக்கினார்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *