டம்பெல் ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019!

டம்பெல் ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019!

டற்தகுதி மற்றும் நலவாழ்விற்கான தென்னிந்தியாவின் முதல் மாபெரும் நிகழ்வு – 2019 ஏப்ரல் 6 மற்றும் 7 தேதிகளில்; டம்பெல் மற்றும் பிராண்டு அவதார் இணைந்து நடத்துகின்றன.

டம்பெல், பிராண்டு அவதார் உடன் கூட்டு சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் வகையான ஃபிட்னஸ் (உடல்தகுதி) மற்றும் வெல்னஸ் (உடல்நல) நிகழ்ச்சியை 2019, ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. டம்பெல் ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019-ல் மாநாடு, உடல்தகுதி போட்டிகள், யோகா அமர்வுகள், ஜும்பா அமர்வுகள், ஃபேஷன் ஷோ, கண்காட்சிகள் மற்றும் விருதுகள் இரவு (அவார்ட்ஸ் நைட்) ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இது, கற்றுக்கொள்ளவும்;;, பிணைப்பு ஏற்படுத்தவும்; மற்றும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதற்காகவும் உடற்;தகுதி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கு அனைத்து சென்னை குடிமக்களுக்கும் விடுக்கப்படும் ஒரு அழைப்பாகும். பொதுமக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்குமான பல்வேறு வகை தகுதி செயல்நடவடிக்கைகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துவது குஐவுருP குநுளுவு 2019-ன் நோக்கமாகும். குழந்தைகள் முதல், மூத்த குடிமக்கள் வரை அனைத்து வயது பிரிவினருக்கும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்காக அவர்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு ஒரு வழிகாட்டக்கூடிய நிகழ்வாக ஃபிட்அப் ஃபெஸ்ட் இருக்கும்.
ஃபிட்அப் ஃபெஸ்ட் ஏன் குதூகலமானதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது?
அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் 30 விளையாட்டுகள் மற்றும் உடற்தகுதி செயல் நடவடிக்கைகள் இருக்கும். நீங்கள் பங்குபெற்று ஒரு குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்திசெய்யும்போது, உங்களுக்கு ‘நானும் ஃபிட்தான்” (நானும் உடல்தகுதியுடையவன்தான்) என்ற பதக்கம் வழங்கப்படும். மேலும் வேடிக்கைக்கு சுவாரஸ்யம் சேர்க்க ஃபேஷன் ஷோ ஜொலிக்கும் விருதுகள் இரவு, கண்காட்சி மற்றும் யோகா மற்றும் ஜும்பா அமர்வுகள் என்று நீங்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதற்குரிய விதவிதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
ஃபிட்அப் ஃபெஸ்ட் ஏன் தகவல் தருவதாகவும் மற்றும் உத்வேகமாகவும் இருக்கக்கூடும்?
உடல்ரீதியான, மனரீதியான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் தங்களுடைய அனுபவங்கள், உள்ளார்ந்த விஷயங்கள் என உடல்தகுதி சார்ந்த தங்களது வாழ்க்கை நிகழ்வுகளையும், கண்ணோட்டங்களையும் உடற்தகுதி துறையைச் சேர்ந்த பல பிரபல ஆளுமைகள் பகிர்ந்துகொள்வார்கள். மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடத்தொடங்குவதற்கு அல்லது வேகமாகச் செல்வதற்கு போதிய ஊக்கம் பெறுவதற்கு ஏற்ற உத்வேகமிக்க, வாழ்வை மாற்றியமைக்கக்கூடிய பல விஷயங்கள் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும்.
ஃபிட்அப் ஃபெஸ்ட் அனைவருக்கும் ஏன்?
குழந்தைகள் முதல் வயதுவந்தவர் மற்றும் முதியவர்கள் வரை என அனைத்து வயது பிரிவினருக்கும் பங்கேற்பு செயல்நடவடிக்கைகள் இதில் இடம்பெறுகின்றன. சுவைமிக்க
உணவுகளுக்கான ஸ்டால்கள், உடற்தகுதியை ஏதுவாக்குகின்ற துணைப்பொருட்கள், தயாரிப்புகள் மற்றும் தேவைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
பிற சிறப்பம்சங்கள்
சாதனையை முறியடிக்கும் பகுதி: ஃபிட்னஸ் சாம்பியன்கள், குறிப்பிட்ட ஃபிட்னஸ் செயல்நடவடிக்கைகளில் சாதனைகள் படைக்கலாம் மற்றும் செய்த சாதனைகளை முறிக்கலாம். வெற்றிபெறுபவர்களுக்கு 2019, ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் விருதுகள் இரவில் பரிசுகள் வழங்கப்படும்.
டம்பெல் கிளாசிக் – இந்நிகழ்ச்சியில் பாடி பில்டர்கள், தங்கள் உடற்; கட்டமைப்புகளைக் காட்டி உடற்;தகுதிக்காக வழங்கப்படும் பரிசுகளைப்பெற போட்டியிடுவார்கள்.
ஃபிட்அப் விருதுகள் இரவு – ஃபிட்அப் விருதுகள், உத்வேகமுள்ளவர்கள் முதல் தொழில்முனைவோர்கள் வரை ஃபிட்னஸ்-ல் அவர்களுடைய சாதனைகள் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் ஃபிட்னஸ் சூழலமைப்பில் சிறந்தவற்றை அங்கீகரிக்கும். வெற்றியாளர்கள், ஃபிட்அப் ஃபெஸ்ட்-ன் மைய குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படுவார்கள் மற்றும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிகழ்வை தொடங்கி வைத்த பிரபல இந்திய பளுதூக்கல் வீரரும், 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான திரு. சதீஷ் சிவலிங்கம், தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த அளவிற்கு ஒரு மிகப்பெரிய நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்வதற்கு இதன் அமைப்பாளர்கள் எடுத்திருக்கிற சிறப்பு முயற்சிகளுக்கு தமது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தார். விளையாட்டு, உடற்தகுதி, நலவாழ்வு மற்றும் பேஷன் என வெவ்வேறு பிரிவுகளையும் ஒரு அமைவிடத்தின் கீழ் கொண்டு வருகின்ற இந்த நிகழ்வு வெற்றிபெற டம்பெல்; மற்றும் பிராண்டு அவதார் ஆகியவற்றின் அமைப்பு குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மிக அதிக எண்ணிக்கையில் பங்கேற்குமாறு சென்னை வாழ் பொதுமக்களை இந்த நிகழ்வு குறித்த செய்தி சென்றடையுமென்றும் மற்றும் பங்கேற்குமாறு அவர்களை ஊக்குவிக்கும் என்றும் தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். இதன் மூலம் தங்களது தினசரி நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உடற்தகுதிக்கான செயல்பாடுகளை மக்கள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
பிராண்டு அவதார் – ன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ஹேமச்சந்திரன் பேசுகையில், உடற்தகுதிக்கு அதிக கவனம் செலுத்துமாறும், உடற்தகுதி மற்றும் நலவாழ்வு திட்டங்களின் பல்வேறு வடிவங்கள் வழியாக, உண்மையிலேயே உடற்தகுதியோடு இருக்க தொடங்குமாறும் சென்னை பெருநகர் மக்களை கேட்டுக்கொண்டார். உடற்தகுதி என்பது, நாம் சென்றடையக்கூடிய ஒரு இலக்கோ, அமைவிடமோ இல்லை; அதுவொரு வாழ்க்கை வழிமுறை. என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச கால்பந்தாட்ட ஆலோசகரான டேவிட் ஆனந்த், தால்வாக்கர்ஸ் இன்ஷேப் – ன் உடற்தகுதி இயக்குனர். பிக்லீ முரளி, டம்பில்வேர் – ன் நிறுவனரும், தலைவருமான அபிஷேக் ரங்கசாமி, உடற்தகுதி தொழில்முனைவோரும், பயிற்சியாளருமான தீப்தி அக்கி, டயட்டீஷியன் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணரான ஷைனி சுரேந்திரன், 02 ஃபிட்னஸ் – ன் இயக்குனர் நீனா ரெட்டி, ராகார்த் ஹவுசிங் – ன் இயக்குனர் ஆர்த்தி ரெட்டி, பிரபல உடற்தகுதி பயிற்சியாளரான தேவிமீனா சுந்தரம், டீப்ஃபிட் ரூ யம்ஃபிட் – ன் நிறுவனர் சந்தீப் ராஜ், கிராண்டு ஸ்கொயர் – ன் இயக்குனர் ஜரூக் ஷா, மிஸர்ஸ் எர்த் இன்டர்நேஷனலின் ஆலு அலெக்ஸ், உடற்தகுதி மாடலும், நடிகருமான பரத் ராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிற பிரபல ஆளுமைகளாவர். இவர்களை நேரில் சந்திக்கவும் மற்றும் அவர்களை வாழ்த்தி கலந்துரையாடவும் சென்னை குடிமக்களுக்கு இந்த நிகழ்வு ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்கும்.
டம்பில்வேர் – ன் நிறுவனரும், தலைவருமான திரு. அபிஷேக் ரங்கசாமி, உடற்தகுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசுகையில், உடற்தகுதி மற்றும் நலவாழ்வு சமூகத்தினருக்கு கற்றுக்கொள்ளவும், வலையமைப்பை உருவாக்கவும், மேம்படுத்திக்கொள்ளவும் மற்றும்
உடற்தகுதியை ஒரு வாழ்க்கை வழிமுறையாக ஆக்கிக் கொள்வதற்கும் இந்நிகழ்வானது ஒரு உகந்த செயல்தளமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். “உலகெங்கிலும் உடற்தகுதி என்பதன் மீதான உணர்வும், அக்கறையும் வெகு வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. தங்களது உடல்நலத்தின் மீது ஏராளமான மக்கள் அக்கறை கொண்டு நேரத்தையும், பணத்தையும், முயற்சிகளையும் முதலீடாக செய்து வருகின்றனர். தென்னிந்தியாவின் முதல் மாபெரும் உடற்தகுதி திருவிழாவில் சென்னைக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்று திரு. அபிஷேக் மேலும் கூறினார்.
உடற்தகுதி மற்றும் நலவாழ்விற்காக இப்போதே றறற.கவைரிகநளவ.உழஅ – ல் பதிவு செய்யுங்கள். மார்ச் 16 ஆம் தேதிவரை பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக நுழைவுக் கட்டணம் ரூ.99 மட்டுமே. அதற்குப் பிறகு நுழைவு கட்டணமானது ரூ.249 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
லிட்டில்; மிஸ் மற்றும் மாஸ்டர் எர்த் – இந்தியா போட்டி:
லிட்டில் மற்று; மாஸ்டர் எர்த் என்ற விருதுகளுக்கான உலகளாவிய போட்டியின் இந்திய சுற்றும், மாபெரும் நிகழ்வான ஃபிட்அப் ஃபெஸ்ட் 2019 – ல் ஒரு அங்கமாக இடம் பெறுகிறது. 1000-க்கும் அதிகமான உற்சாகம் மிக்க சிறார்கள், இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் லிட்டில் மிஸ் மற்றும் மாஸ்டர் எர்த் – இந்தியா விருது பெறுபவர்கள், 2019 ஜுலை மாதத்தில் லாஸ் வேகாஸ் – ல் நடைபெறவுள்ள லிட்டில் மிஸ் மற்றும் மாஸ்டர் எர்த் இன்டர்நேஷனல் திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இது, பிராண்டு அவதார் நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் சக்சஸ் – ன் ஒரு முனைப்புத்திட்டமாகும்.
இது ஒரு அழகுப் போட்டியல்ல. குழந்தைகள் அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அந்த நிலையிலேயே அழகானவர்களாகவும், அற்புதமானவர்களாகவும் இருக்கிறார்கள். தனிச்சிறப்பான யோசனைகள், நம்பிக்கை மற்றும் தகவல்தொழில்நுட்ப திறன்களை கொண்டிருக்கும் குழந்தைகளின் அடையாளம் கண்டு அங்கீகரிப்பதே லிட்டில் மிஸ் மற்றும் மாஸ்டர் எர்த் நிகழ்வின் நோக்கமாகும். ‘ஃபிட் இந்தியா’ என்ற மைய கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் கீழ்க்கண்ட சுற்றுகள் நடைபெறும்:
சுற்று 1: இந்தியாவை கூடுதல் உடற்தகுதி உள்ளதாக ஆக்குவது எப்படி? ஒரு நிமிட பிரசன்டேஷன் போட்டி
சுற்று 2: உடற்தகுதி சவால் (மனநலதகுதி அல்லது உடல்சார் தகுதி)
சுற்று 3: உடற்தகுதி ரேம்ப் வாக்
வயது: 3-18 (வெவ்வேறு பேட்ச்கள்) தேதி: ஏப்ரல் 6 மற்றும் 7, நடைபெறும் இடம்: ஒய்எம்சிஏ விங்ஸ்
கட்டணம்: ஒரு குழந்தைக்கு ரூ.1500ஃ- + ஜிஎஸ்டி
www.schoolofsuccess.co.in
+91-9789906146

Please follow and like us: