தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நந்தினி பால் அறிமுகம்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நந்தினி பால் அறிமுகம்

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் மிகச்சிறிய திட்டமான ஆபரேஷன் ஃபிளட் II என்பதன் கீழ் 1975 ஆம் ஆண்டின்போது கர்நாடகா மில்க் ஃபெடரேஷனின் ஒரு பிரிவாக தி பெங்களுரு கோ-ஆபரேட்டிவ் மில்க் யூனியன் லிமிடெட் (BAMUL) நிறுவப்பட்டது. கர்நாடகா மாநிலத்தின் பெங்களுரு நகர்ப்புற, பெங்களுரு ஊரக மற்றும் ராமநகர மாவட்டங்களிலிருந்து பால்கொள்முதல் செய்யும் இந்த யூனியன், பெங்களுருவில் பால் மற்றும் பால்பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது. தொடங்கப்பட்ட நாளிலிருந்தே இந்த யூனியன், பால்பொருட்கள் துறையின் மேலதிக முன்னேற்றத்திற்காகவும் மற்றும் அவற்றின் சந்தையாக்கல் நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இத்துறையில் இடைத்தரகர்களை அகற்றுவதும் மற்றும் பால் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான மற்றும் அவர்களால் நிர்வகிக்கப்படுகிற சங்கங்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குவதும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்ச ஆதாயம் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் அவர்களது செயல்பாட்டு அளவை விரிவாக்குவதும் இந்த யூனியனின் நோக்கமாகும். அதே நேரத்தில், ஊட்டச்சத்துகள் அடங்கிய, தரமான பால் மற்றும் பால் தயாரிப்புகளை நியாயமான விலையில் நுகர்வோர்களுக்கு கிடைக்குமாறு செய்வதும் இதன் நோக்கமாக இருக்கிறது.

பாமுல்; நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடப்பரப்பிற்குள் 4167 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன. இன்றைய நாள் வரை, மேற்குறிப்பிடப்பட்ட மூன்று மாவட்டங்களில் 3217 கிராமங்களில், 2160 பால் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு சங்கங்களை (MPCS) இந்த யூனியன் நிறுவியிருக்கிறது. இந்த MPCSகளில் 3,49,168 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்திருக்கின்றனர். இவர்களுள் 1,24,568 உறுப்பினர்கள் பெண்கள் என்பதும் மற்றும் 56,219 உறுப்பினர்கள் பட்டியல் ஜாதி மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த யூனியனின் தயாரிப்புகளான பால் மற்றும் பால் பொருட்கள், “நந்தினி” என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெங்களுருவில் 1954 சில்லறை விற்பனையாளர்கள், 81 ஃபிரான்சைஸ் விற்பனையகங்கள், 49 மில்க் பார்லர்கள், 330 வினியோக வழித்தடங்கள் வழியாக விற்பனை செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையே பராமரிக்கப்படுகின்ற மிக குறுகிய லாப வரம்பிற்குள் திறம்பட செயல்படுவதே, இச்சந்தையில் முதன்மையிடத்தை பாமுல் கைவசப்படுத்தியிருப்பதற்கான முக்கியமான வெற்றி காரணியாக இருக்கிறது. பால் மற்றும் பால்பொருட்கள், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்பவுடர், பன்னீர், இனிப்புகள், பிஸ்கட்டுகள் ஆகியவை உட்பட, 60-க்கும் அதிகமான தயாரிப்பு பொருட்களை இது கொண்டிருக்கிறது. இதன் தரமான, சுவையான தயாரிப்புகள் அனைத்தும் நுகர்வோர்களால் பெரும் வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றவையாகும்.

பெங்களுரு டெய்ரி, தரமேலாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பு துறைகளுக்காக FSSC சான்றிதழ் பெற்ற தொழிலகமாகும். இதன் பால் மற்றும் பொருட்களின் தரத்திற்காக இந்த பால் பண்ணைக்கு “தர முத்திரை” வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சாதனைகளின் காரணமாக இந்திய அரசின் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (NPC) “சிறந்த உற்பத்தி திறன் விருது” என்ற கௌரவத்தை ஐந்து முறைகள் இதற்கு வழங்கியிருக்கிறது. ஆற்றல் செயல்திறன் அமைப்பால் (BEE), “ஆற்றல் சேமிப்பு விருது” வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், 2016-17 ஆம் ஆண்டிற்கான “மேலாண்மை உயர்நேர்த்தி விருது” என்ற கௌரவத்தையும் இது பெற்றிருக்கிறது.

சமீபத்தில் பெங்களுரு அருகே ஒரு மிகப்பெரிய பால்பொருட்கள் தயாரிப்பு தொழிலகத்தை பாமுல் நிறுவி அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. 600 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டிருக்கும் இதில் பல்வேறு வகைகளிலான பாலாடைக்கட்டி (சீஸ்) தெளிந்த மோர், SMP, WMP யோகர்ட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிற தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படும். தனது தயாரிப்புகளை இந்தியா முழுவதிலும் மற்றும் சர்வதேச சந்தைகளிலும் விற்பனை செய்கிறவாறு தனது செயற்பரப்பை விரிவாக்குவதற்காக, நந்தினி பிராண்டின் கீழ், தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய, வினியோகிக்க மற்றும் சந்தையாக்கல் செய்வதற்கான மிகப்பெரிய திட்டத்தை பாமுல் செயல்படுத்தி வருகிறது.

தற்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில்  எங்களது பால், தயிர் மற்றும் பிற தயாரிப்புகளை இணை பேக்கிங் செய்யவும் மற்றும் சந்தைப்படுத்தவும் சென்னையைச் சேர்ந்த சுமுசு டெய்ரி பிரைவேட் லிமிடெட் உடன் ஒரு ஒப்பந்தத்தில் நந்தினி பிராண்டு கையெழுத்திட்டிருக்கிறது.

ALSO READ:

“Nandini Milk & Milk products” first time in Tamil Nadu

Please follow and like us: