வாயலூர் பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை 

அணுசக்தித் துறை வழங்கும் நிதியின் மூலம் வாயலூர் பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை 

வாயலூர் பகுதியில் அமைந்த பாலாற்றின் குறுக்காக தடுப்பணை அமைத்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்தைப் பெருக்க  வேண்டும் என்ற காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது வெற்றிகரமாக நிறைவேற உள்ளது.  தமிழ்நாடு அரசின் நீர் வளத் துறை (Water Resources Department – WRD) மற்றும் பொதுப்பணி துறை (Public Works Department – PWD)  போன்றவற்றின மூலமாக முப்பத்தி இரண்டரை கோடி ரூபாய் (Rs 32.50 Crore) செலவில் கட்டப்படவுள்ள இந்த தடுப்பணை கட்டுமானப் பணிகளைத் துவக்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி 25 பிப்ரவரி 2019 அன்று காலை நடைபெற உள்ளது. பொதுப் பணிகள் நிறுவனத்தின் (General Services Organisation – DAE – Kalpakkam) மேற்பார்வையின் கீழ் நிறைவேற உள்ள இந்த திட்டத்திற்கான தொகையினை அணுசக்தித்துறை வழங்குகிறது.  கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கையில் இருந்த இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் பாலாற்றுப் படுகையில் கடல் நீர் ஊடுருவுவது தடுக்கப்படும்.  மேலும் மழைநீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்பட்டு கணிசமான அளவிற்கு குடிநீர் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.  முப்பத்தி இரண்டரை கோடி ரூபாய் செலவில் இத்திட்டமானது பாலாற்றின் முடிவுப் பகுதியில் அமைய உள்ளது.

1.190 கிலோமீட்டர் நீளம் உடைய இந்த தடுப்பணை அதிகப்படியான மழைநீர் பாலாற்றில் ஓடி கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி சேமிக்க உதவும்.  மேலும் இதன் மூலம் கூடுதலாக 1500 மில்லியன் கியூபிக் மீட்டர் நீரினை இரண்டு நீர்த்தேக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். இதுமட்டுமின்றி 330 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் நீர் ஆதாரத்தைப் பெற்று விவசாயம் செழிக்க இந்த தடுப்பணை வழிவகை செய்யும்.  தமிழ்நாடு அரசின் நீர் வளத் துறை மற்றும் பொதுப் பணிகள் துறை ஆகியவை 2015 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அதிகபட்சமாகத் தேங்கும் தண்ணீர் அளவினைக் கண்டறிந்து தடுப்பணை ஒன்றைக் கட்ட முடிவு செய்தது.   நிலமட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரமுடைய இந்த தடுப்பணையானது கடலில் கலக்கும் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கும். மேலும் பூமிக்கு அடியில் 8 மீட்டர் ஆழத்திற்கு அமைய உள்ள தடுப்புச்சுவரானது கடல் நீர் மற்றும் உப்பங்கழி நீரானது பாலாற்றுப் படுகைப் பகுதிக்கு ஊடுருவுவதைத் தடுத்து, நிலத்தடி நீர் பாழாவதைத் தடுக்கும்.  பழைய முறை மூலம் தடுப்பணை கட்டினால் அருகாமையில் கடலும் உப்பங்கழியும் அமைந்திருப்பதால் அதிக அளவிற்கு பலன் தராது.  ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நவீன முறை தடுப்பணையானது சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய நீர்த் தேவைகளை போதிய அளவிற்கு பூர்த்தி செய்யும் திறன் உடையது.  இந்த திட்டம் மார்ச் 2020 ல் பூர்த்தி அடையும் போது இதன் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரமானது இப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீர்த் தேவைகளை மிகச்சிறப்பாக பூர்த்தி செய்யும்.  

Diginitaries  present during the Bhoomi pooja of Vayalu Check Dam on 25.2.19

LIST OF OFFICIALS FROM STATE GOVERNMENT

 • Honorable Minister Shri. C.Ve. Shanmugam , Law Courts & Prison
 • Honorable Minister Shri. P. Benjamin, Minister for rural Industrial
 • Maragatham Kumaravel, (MP)
 • Arumugam (AIADMK)
 • Raji (Ex. MLA)
 • Ponnaiah, IAS, Kancheepuram District Collector.
 • Sundaramurthy, DRO, Kancheepuram.
 • Shri Thiyagarajan, Executive Engineer, WRO.
 • Radhakrishnan, AEE, WRO.
 • Sridhar , DDDRDA, Project Director.

 

LIST OF OFFICIALS FROM DAE

 • Dr A K Bhaduri Director IGCAR
  Shri M Srinivas. SD MAPS
  Dr S Velmurugan FD BARCF
 • Dr G Amarendra, Director MMG & MSG
 • Dr B Venkatraman Director HSEG & RMPAG
 • Shri V Manoharan, AD, GSO

ALSO READ:

Bhoomi Pooja for Construction of Check Dam across river at Vayalur Funded by Department of Atomic Energy

Please follow and like us: