ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரில் “கண் நோய் பகுப்பாய்வு சேவைகள்” துவக்கம்

ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரில் “கண் நோய் பகுப்பாய்வு சேவைகள்” துவக்கம்

ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரில்,  இங்கிலாந்தின் விஸலிடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து , செயற்கை நுண்ணறிவு சார்ந்த ” கண் நோய் பகுப்பாய்வு சேவைகள் துவக்கப்பட்டது .
இந்த தொழில்நுட்பம் கண்கள் சம்பந்தமான நோய்களை கண்டறிவதில் ஒரு மைல் கல்லாகும் . இந்தியாவில் கண்பார்வையில்லாத சமூகம் இல்லை என்று சொல்லும் விதமாக கண் நோய்களை மிகத் துல்லியமாக , தனித்துவமாக கண்டறியும் மிக முன்னோடியான பகுப்பாய்வு செய்து , அதற்கான சரியான சிகிச்சையை பெற இந்த தொழில் நுட்பம் உதவும் .
இதனை இங்கிலாந்து துணைத் தூதர் , மேற்கு ஜெரிமி பில்மோரெ துவக்கி வைத்தார் . விழாவில் தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,  ஐஏஎஸ் கலந்து கொண்டு , சிறப்புரையாற்றினார் . உடல் நலத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து செந்தில் கணேசன் எடுத்துரைத்தார் .
ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரின் மருத்துவ இயக்குனரும் , தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் எஸ்பி கணேசன் கூறியதாவது : – ஹைடெக் டயக்னோஸ்டிக்ஸ் சென்டர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ பகுப்பாய்வு ஆய்வகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது . கோபாஸ் e801 உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு வசதிகளை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது . மேலும் சமீபத்தில் “ ஆன்கோ டெக் கேன்சர் பகுப்பாய்வு வசதியை துவக்கி , அதன் மூலம் கேன்சரை மிகத்துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை பெறும் தொழில்நுட்பத்தை துவக்கியுள்ளது .
ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டருக்கு சென்னை , திருவள்ளூர் , வேலூர் , சேலம் , ஈரோடு , திருநெல்வேலி , தஞ்சாவூர் உள்பட பல்வேறு இடங்களில் 75 கிளைகள் உள்ளன . மேலும் கர்நாடகா , ஆந்திரா,  கேரளா மாநிலங்களிலும் ஹைடெக்கின் கிளைகள் உள்ளன . இந்த வருடத்தில் மேலும் கிளைகளை துவக்கி , 100 கிளைகளாக மாற்ற வேண்டும் என்று ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரின் மருத்துவ இயக்க டாக்டர் எஸ்பி கணேசன் தெரிவித்தார் .
விழாவில் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்ததிருந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
Please follow and like us: