எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளை தொடக்கம்…

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் சென்னை கிளையை பிப்ரவரி 9 , 2019 அன்று எஸ்.ஆர்.எம் வடபழனி வளாகத்தில் துவக்கத்தார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . பின்னர் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் முன்னாள் மாணவர்களோடு கலந்துரையாடல் நிகழ்த்தி இந்த சென்னைக் கிளையை நல்ல செயல்படும் கிளையாக வைக்கும்படி அறிவுரை வழங்கினார். அத்துடன் முன்னாள் மாணவர்களின் வலிமையே அந்த கல்வி நிறுவனத்தின் வலிமை என்றும் கூறினார். முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் மூலம் இதர மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்றும் கூறினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எஸ்.ஆர்.எம் முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளை பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் அறிவித்தார். எஸ்.ஆர் எம் மருத்துவமனை , விடுதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி கட்டண சலுகை போன்ற சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரங்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரைத்தார். இந் நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் வெங்கட்ரமணி , வளாக இயக்குநர் டாக்டர் லீனஸ் மார்ட்டின் , வடபழனி வளாகத்தின் புலத்தலைவர் டாக்டர் துரைவேலு மற்றும் முன்னாள் மாணவர்கள் எமினென்ட் மென்பொருள் இயக்குநர் திரு ஆரோக்கிய இனியன் வரவேற்புரை வழங்கினார் விழா நிறைவாக அஞ்சனா மென்பொருள் இயக்குநர் கிரித்திக் அபிராம் நன்றியுரை வழங்கினார். விழாவில் 1989 , 90,91 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிறுவன வேந்தர் அவர்கள் தன்னுடைய பாரிவேந்தர் கவிதைகள் நூலினை பரிசாக அளித்தார்.

ALSO READ:

Chancellor of SRM Inaugurated SRM Alumni Association Chennai Chapter

Please follow and like us: