பொதுநலன்கருதி சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

பொதுநலன்கருதி சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

ஏவிஆர் புரொடக்ஷன்ஸ் அன்புவேல்ராஜனின்; தயாரிப்பில் பொதுநலன் கருதி திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சீயோன்.
கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராமன், அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா, சுப்பிரமணியபுரம் ராஜா ஆகியோர் நடிக்க படத்தை வெளியிடுகிறார் தயாரிப்பாளர், இயக்குனர், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார்.
தொழில் நுட்ப கலைஞர்;கள்:- இசை – ஹரி கணேஷ், ஒளிப்பதிவு – சுவாமிநாதன், கலை இயக்கம் – கோபி ஆனந்த், இணை தயாரிப்பு – விஜய் ஆனந்த், பிஆர்ஒ – ராஜ்குமார்.
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் யோக் ஜேபி மற்றும் பாபு ஜெயன் ஆகிய இருவருக்கும் தொழில் போட்டி. யோக் ஜேபியின் அடியாளாக சந்தோஷ். காணாமல் போன அண்ணனை தேடும் கருணாகரன், காதலிக்காக வண்டி வாங்கி கொடுத்து கடனில் மாட்டிக் கொள்ளும் அருண் ஆதித் ஆகிய மூவருக்குள்ளும் நடக்கும் சம்பவங்கள், பிரச்னைகளைப் பற்றிச் சொல்லும் கதையில் பாபு ஜெயின் தன் பரம எதிரியாக கருதும் யோக் ஜெபியை எப்படி பழி வாங்க கொல்லத் துடிக்கிறார் என்பதே க்ளைமேக்ஸ்.
இதில் நடித்துள்ள கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராமன், அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா, சுப்பிரமணியபுரம் ராஜா ஆகிய அனைவரும் நிறைவான நடிப்பை தந்துள்ளார்கள்.
ஹரி கணேசின் இசையில், சுவாமிநாதனின் ஒளிப்பதிவில் வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீயோன். கந்துவட்டி கொடுமை, பரிதவிக்கும் குடும்பங்கள், பந்தாடும் கந்து வட்டிகாரர்கள் இவர்கள் பிடிpயிலிருந்து மீளா முடியாமல் மரணத்தை தழுவும் ஏழை வர்க்கத்தின் அவலங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர் சீயோன். தலைப்பும், பிரபலப்படுத்திய விதமும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படத்தின் அம்சங்கள் பலவித கோணங்களில் பயணிப்பதால் தட்டு தடுமாறியிருக்கிறது எனலாம். அனைத்து சம்பவங்களையும் ஒரு நேர் கோட்டில் இணைக்க படாதபாடு பட்டிருக்கிறார் இயக்குனர் சீயோன். பொதுநலன் கருதி எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அதற்கான தீர்வும், வழிகாட்டுதலும் இல்லை எனலாம்.

மொத்தத்தில் பொதுநலன் கருதி ரசிக்கலாம், ஒருமுறை பார்க்கலாம்.

Please follow and like us: