அவதார வேட்டை சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

அவதார வேட்டை சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

அவதார வேட்டை படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறார் இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன்.
இதில் வி.ஆர்.விநாயக், மீரா நாயர், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா,மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- வசனம் சரவணன், ஒளிப்பதிவு-ஏ..காசி விஷ்வா, இசை – மைக்கேல், படத்தொகுப்பு – கேசவன் சாரி, பாடல்கள் -வி.பி.காவியன், நடனம் – அசோக் ராஜா, ராதிகா, ஆக்ஷன் – எஸ்.ஆர்.முருகன், கலை – பத்து, நிர்வாக தயாரிப்பு – கந்தவேல், பிஆர்ஒ-கோபி.
விநாயக் புதிய போலீஸ் அதிகாரியாக நடித்து ஊர் பெரிய மனிதராக இருக்கும் ராதாரவியிடம் பணத்தை ஏமாற்றி கொள்ளையடித்து சென்று விடுகிறார்;.பின்னர் பக்கத்து ஊருக்கு செல்லும் விநாயக் தொழிலதிபராக பவனி வரும் சோனாவிடம் டிரைவராக சேர்ந்து நடித்து ஏமாற்றி பணம், நகை அனைத்தையும் சுருட்டிக்கொண்டு சென்று விடுகிறார். விநாயக்கை போலீஸ் அதிகாரியாக இருக்கும் மீரா நாயரிடம் கண்டு பிடித்து கொடுக்குமாறு ராதாரவி சொல்கிறார். மீரா நாயர் விநாயக்கை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம் குழந்தைகளை கடத்தி உடல் உறுப்புகளை திருடிச் செல்லும் கும்பலால் கிராமத்து மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்கு காராணமானவர்கள் யார்? விநாயக் யார்? எதற்காக பணத்தை கொள்ளையடித்தார்? ராதாரவி, சோனா கூட்டாக சேர்ந்து என்ன தொழில் செய்தனர்? கடத்தல் கும்பல் பிடிபட்டதா? என்பதே மீதிக்கதை.
வி.ஆர்.விநாயக் கதாநாயகனாக காதல், நடனம், சண்டை, பஞ்ச் வசனம் என்று முடிந்தவரை தன்னை படத்தில் உயர்த்தி பேசுமாறு பார்த்துக் கொள்கிறார்.
காதலியாக மீரா நாயர், வில்லத்தனத்திற்காக ராதாரவி, சோனா, மகாநதி சங்கர், அறுவை காமெடிக்காக பவர் ஸ்டார் சீனிவாசன், போலீஸ் அதிகாரியாக ரியாஸ்கான் என்று அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு முழு பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
காசி விஷ்வாவின் ஒளிப்பதிவு, மைக்கேலின் இசையும் பராவாயில்லை.
கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு-ஸ்டார் குஞ்சுமோன். குழந்தை கடத்தல், உடல் உறுப்புகள் திருட்டை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை தான் அவதார வேட்டை. ஆனால் அழுத்தம் இல்லாத திரைக்கதையால் பல இடங்களில் சம்பவங்கள் ஒன்றிற்கு பின் முரணாகவும், கோர்வையில்லாத சம்பவங்கள், இறுதி வரை குழப்பமான பாதையிலேயே படம் முழுவதும் பயணிக்கிறது. சமூக அக்கறையோடு கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் அவதார வேட்டை ஆரவாரமில்லாத சாதாரண சேட்டை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *