முத்தையா முரளிதரனுடன் சேர்ந்து சென்னையை வந்தடைந்த ஃபெரிட் கிரிக்கெட் பாஷ்

முத்தையா முரளிதரனுடன் சேர்ந்து சென்னையை வந்தடைந்த ஃபெரிட் கிரிக்கெட் பாஷ்

• தேசிய அளவில் அமெச்சூர் கிரிக்கெட் செயல்தளத்தை புரட்சிகரமாக மாற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் தலைமை ஏற்கும் இந்தியாவின் முதல் அமெச்சூர் கிரிக்கெட் லீக் – எஃப்சிபி

• இளம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒளிமயமான வாய்ப்புகளை எஃப்சிபி வழங்கும்

சென்னை, 2019 பிப்ரவரி 09: இந்நாட்டில் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் லீக்-ஆன ஃபெரிட் கிரிக்கெட் பாஷ் (குஊடீ) சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்காக அற்புதமான கிரிக்கெட் வீரர்களை வளர்த்து உருவாக்கி வழங்கிய நீண்ட வரலாறு சென்னைக்கு இருக்கிறது. 1848-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து இயங்கிவருகிற மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இதனை தொடர்ந்து நிலையாக எண்பித்து வந்திருக்கிறது. இதுவே, சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சிலரை சென்னைக்கு வந்து தேடி கண்டறிந்து சேர்த்துக் கொள்ளுமாறு எஃப்சிபி-யின் நிறுவனர்களை ஈர்த்திருக்கிறது. நாடெங்கிலும் உள்ள அமெச்சூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பளிக்கிற ஒரு கிரிக்கெட் லீக் நிகழ்வை வழங்குவதற்கு அனைத்து தடைகளையும் தவடுபடியாக்கி எஃப்சிபி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

Photo caption – (L-R) Mr. Jasmeet Bhatia , Founder FCB, Muttiah Muralitharan, International cricketer and Mentor FCB , Mr. Mitesh Sharma, Co Founder FCB.

இப்போது, இந்த விளையாட்டு மீதான தங்கள் பேரார்வத்தோடு முன்வந்து கிரிக்கெட் உலகில் சென்னையின் கவுரவத்தை இன்னும் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்வது சென்னைவாழ் மக்களை சார்ந்திருக்கிறது. இங்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் சென்னை பேட்ச் குழுவில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெறுவார்கள். வயது வரம்பு என்ற கட்டுப்பாடு இல்லாமல் உண்மையான கிரிக்கெட் ஆர்வலர்களுக்கான ஒரு தனித்துவமிக்க லீக் போட்டியாக எஃப்சிபி இருக்கிறது. பல்வேறு கடுமையான பயிற்சி போட்டிகள் மற்றும் குறும் பட்டியலில் இடம்பெறச் செய்யும் செயல்முறைகளுக்கான பல்வேறு அமர்வுகளுக்குப் பிறகு தேர்வுசெய்யப்படவுள்ள 16 குழுக்களில் ஒரு அங்கமாக இடம்பெறுவதற்கு கிரிக்கெட் ஆர்வலர்கள் போட்டியிடலாம். இந்த லீக்-க்காக ஒரு பங்கேற்பாளர் தேர்வுசெய்யப்படுவார் என்றால், அது அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு மிகப்பெரிய உயர்வையும், உந்துதலையும் வழங்கும்@ அத்துடன் அவர்களது சொந்த ஊருக்கு பெருமையையும், புகழையும் கொண்டுவரும்.

துடிப்பும், பரபரப்பும் மிக்க இந்த செயல்பாட்டின் ஒரு அங்கமாகத் திகழ 15 வயதுக்கு மேற்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த அமெச்சூர் கிரிக்கெட் ஆர்வலர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உத்வேகத்தோடு உற்சாகப்படுத்த நேர்த்தியான விளையாட்டு அரங்கில் விளையாடுகின்ற வாய்ப்பை ஆர்வமிக்க கிரிக்கெட் அமெச்சூர் வீரர்களுக்கு இந்த லீக் வழங்கவிருக்கிறது. இந்த போட்டிகள் நேரலையாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எதிர்கால கிரிக்கெட் வீரர்கள், முத்தையா முரளிதரன், கிறிஸ் கெய்ல், சாகிர் கான் மற்றும் பிரவீன் குமார் போன்ற கிரிக்கெட் உலகப்புகழ்பெற்ற பிரபலங்களால் வழிகாட்டப்படுகிற மற்றும் பயிற்சியளிக்கப்படுகிற அற்புதமான வாய்ப்பையும் பெறுவார்கள்.

எஃப்சிபி-ன் வழிகாட்டுனரும், சர்வதேச புகழ்பெற்ற வீரருமான முத்தையா முரளிதரன் இதுபற்றி பேசுகையில், ‘கிரிக்கெட்டில் மிக நேர்த்தியான திறமையாளர்களை வளர்த்து உருவாக்குகிற எதோ ஒரு திறனை இந்த நிலத்தில் இந்தியா கொண்டிருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் திறமையான வீரர்களை இந்தியா தந்திருக்கிறது மற்றும் உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாட்டை மக்கள் பார்க்கின்ற வழிமுறையையே மாற்றியிருக்கிறது. இந்நாட்டிற்காக எஃப்சிபி-ன் முனைப்பு திட்டத்தின்கீழ் இத்தேசத்தின் இளமையான கிரிக்கெட் ஆர்வலர்களையும், வீரர்களையும் வழிகாட்டுதலின் மூலம் வளர்த்து உருவாக்குவதில் நான் இப்போது பெருமகிழ்ச்சியடைகிறேன். சென்னைக்கும் மற்றும் இந்நாட்டிற்கும் ஒரு புதிய, மிகச்சிறந்த செயல்தளத்தை எஃப்சிபி இதன் மூலம் வழங்குகிறது,” என்று கூறினார்.

எஃப்சிபி-ன் நிறுவனரான ஜஸ்மீத் பாட்டியா கூறியதாவது: ‘எஃப்சிபி-ன் மூலம் எனது மிகப்பெரிய கனவு நிஜமாக்கியிருக்கிறது@ இளவயதில் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இருந்தபோது, மாநில அளவில் நான் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். அமெச்சூர் கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்கிற சூழ்நிலையை என்னால் முழுமையாக உணரவும், புரிந்துகொள்ளவும் முடியும். அறியப்படாமல் இருக்கிற கிரிக்கெட் ஆர்வலர்கள் அவர்களது திறன்களை உலகிற்கு வெளிக்காட்ட குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுவதை ஏதுவாக்குவதற்காக நாடெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு இந்த லீக் செயல்பாட்டை வெகுமதியாக வழங்க நான் விரும்பினேன். மிகச்சிறந்த திறமையாளர்கள் நிறைந்த நகரமாக சென்னை எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. எஃப்சிபிக்காக சென்னை மக்களிடமிருந்து பெரு வெள்ளமாக மக்களின் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன்.”

எஃப்சிபி-ன் இணை-நிறுவனர் திரு. மித்தேஷ் ஷர்மா பேசுகையில், ‘கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இம்மாநகரம் ஒருபோதும் ஏமாற்றம் அளிப்பதில்லை என்பதால், ஃபெரிட் கிரிக்கெட் பாஷ் உடன் வருவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். ஒரு விளையாட்டில் ஒன்றின் பிரதிநிதியாக இருப்பதன் மகிழ்ச்சி என்பது என்றும் நினைவில் நிறுத்தி மகிழக்கூடிய உணர்வாகும். உங்களது மாநிலத்தின் பிரதிநிதியாக நீங்கள் போட்டியில் பங்கேற்கும்போது அது பன்மடங்காக வளர்ச்சியடையும். இதை வேறு எதனோடும் ஒப்பிடவே இயலாது. முடிந்தவரை அதிகளவில், பேரார்வமுள்ள அமச்சூர் கிரிக்கெட் வீரர்களை இங்கு கண்டறிய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களது கனவுகளை நிஜமாக மாற்றி வாழ்வதற்கும் மற்றும் அவர்களது மனதில் குடி கொண்டிருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்களை நேரில் சந்திப்பதற்கும் ஒரு தளத்தினை இதன் மூலம் அவர்களுக்கு நாங்கள் வழங்கவிருக்கிறோம். எஃப்சிபி-ன் வழியாக இந்த வீரர்களுக்கு வாழ்நாளில் அரிதாக கிடைக்கும் அனுபவத்தையும் மற்றும் என்னாலும் நினைத்து போற்றக்கூடிய நினைவுகளையும் இவ்வீரர்களுக்கு வழங்குவதே எங்களது நோக்கமாகும்,” என்று கூறினார்.

கூடுதல் துயல் பந்து (ஸ்விங் பால்) வீசலுடன் கூடிய ஒரு ஓவருடன் மொத்தத்தில் 15 ஓவர்களை உள்ளடக்கிய ஒரு போட்டி வடிவத்தை நடத்த எஃப்சிபி திட்டமிட்டு வருகிறது. இந்த லீக் தொடர் முழுவதிலும் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர்களுக்கு பயிற்சியளிப்பார்கள் என்பதால், இந்த வீரர்களுக்கு இதுவொரு வியக்கத்தக்க பயணமாக இருக்கும். எஃப்சிபி-ன் வழியாக மிகப்பெரிய பரிச்சயமும் மற்றும் பிரபல்யமும் இவர்களுக்கு கிடைக்கும். வெற்றிபெறுகின்ற குழுவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிற ஒரு உள்ளுர் கிளப் போட்டி தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும். இதுமட்டுமன்றி, 16 அணிகளைச் சேர்ந்த ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 லட்சம் என்ற ரொக்கப் பரிசும் கிடைக்கும். வெற்றிபெறுகின்ற அணிக்கு ரூ. 31 லட்சமும் மற்றும் இரண்டாவது இடம்பிடிக்கிற அணிக்கு ரூ. 21 லட்சமும் பரிசாக கிடைக்கும்.

ஃபெரிட் கிரிக்கெட் பாஷ் நிகழ்வானது 2019 ஜூலை ஃ ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. எனினும், முதற்கட்ட நிகழ்வுக்கான முன்பதிவுகள் மற்றும் தேர்வு செயல்முறையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது. புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்று உங்களுக்கு கனவுகள் இருக்குமானால் மற்றும் உங்கள் இரத்தத்தில் கிரிக்கெட் உணர்வு கலந்திருக்குமானால் உடனடியாக hவவிள:ஃஃறறற.கநசவைஉசiஉமநவடியளா.உழஅஃ-ல் லாக்-ஆன் செய்யுங்கள் அல்லது +91-98710-63063 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு-கால் கொடுங்கள்.

ALSO READ:

The Ferit Cricket Bash has now reached Chennai with MuttiahMuralitharan

Please follow and like us: