தில்லுக்கு துட்டு 2 சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5

தில்லுக்கு துட்டு 2 சினிமா விமர்சனம்

ரேட்டிங் 3.5/5

ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் நடிகர் என்;;.சந்தானம் தயாரித்து டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் வெளியிட தில்லுக்கு துட்டு 2 படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராம்பாலா.
இதில் சந்தானம், ஷிர்தா சிவதாஸ், ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர் மாஸ்டர், டைரக்டர் மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவிதனசேகர், ஜெயபிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பி;ரசாந்த் ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷபீர், ஒளிப்பதிவு-தீபக்குமார்பதி, பாடல்கள்-கானாவினோத், அனுபாரதி, எடிட்டர்-மாதவன், கலை-ஏ.ஆர்.மோகன், சண்டை-ஹரிதினேஷ், நடனம்-சாண்டி, உடை-ஆர்.பிரவீன்ராஜ், ஸ்டில்ஸ்-கே.ராஜ், விஎஃப்எக்ஸ்-ஹரிஹரசுதன், ஒப்பனை-கே.புஜ்ஜிபாவு, ஆர்.பிரபாகரன், தயாரிப்பு மேற்பார்வை- வள்ளல் டி.வெங்கடேஷ், தயாரிப்பு நிர்வாகி-எம்.செந்தில், இணை தயாரிப்பு-சி.ரமேஷ்குமார், பிஆர்ஒ-ஜான்சன்.

ஆட்டோ ஒட்டும் சந்தானம் தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் கூட்டுச்சேர்ந்து இரவு வேளைகளில் குடித்துவிட்டு அந்த ஏரியாவாசிகளை தூங்க விடாமல் டார்ச்சர் செய்கிறார். சந்தானத்தை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட ஏரியாவாசிகள் தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் டாக்டர் ஷிர்த்தாவிடம் ஐ லவ் யூ சொல்லும் நபர்கள் அனைவரையும் பேயால் அடித்து நொறுக்கப் ;படுகிறார்கள். இந்த பேய் அடியை வாங்கி தப்பிக்கும் டாக்டர் கார்த்திக், சந்தானத்தை ஷிர்த்தாவை காதலிக்க வைக்கிறார். சந்தானத்திற்கு ஷிர்த்தாவின் தந்தை மந்திரவாதி என்பதும் அவர் தான் பேயை அனுப்பி மகளை காதலிப்பவர்களை அடித்து நொறுக்கிறார் என்பதையறிந்து கேரளாவில் இருக்கும் மந்திரவாதி மாமனாரை பார்க்கச் செல்கிறார். அங்கே எதிர்பாராத திருப்பம் ஏற்பட, பேயிடம் சந்தானமும், மொட்டை ராஜேந்திரனும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் பேயிடமிருந்து தப்பித்தார்களா? ஷிர்த்தாவை பின்தொடரும் பேய் யார்? சந்தானம்-ஷிர்த்தா காதல் கை கூடியதா? என்பதே மரணஅடி காமெடி கலாட்டாவில் முடியும் க்ளைமேக்ஸ்.

சந்தானம் வேலவிஜியாக படம் முழுவதும் அடிக்கும் லூட்டிகள், ஒன்லைன் பஞ்ச வசனங்கள், கவுண்டர் காமெடி அலப்பறைகள், படம் முழுவதும் மொட்டை ராஜேந்திரனையும், பேய்களையும் கலாய்த்து வரித்தெடுத்து விடுவதில் சிரிப்புக்கு பஞ்ச மில்லாமல் பார்த்துக் கொள்கிறார். இந்த மாடுலேஷனில் சந்தானத்தை பார்த்து வெகு நாட்களாகிவிட்டது, அதை ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் வைத்து நகைச்சுவையில் வெச்சு செஞ்சிருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்களை கண்டும் காணாத வகையில் வசனங்களில் நுழைத்து கலகலவென்று படத்தை நகர்த்தி செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் சந்தானம். வெல்டன் மனம் விட்டு சிரிக்க வைத்தது போல் அடுத்து வரும் படங்களில் இதே மாதிரி தேர்ந்தெடுத்து நடித்தார் என்றால் வெற்றி நிச்சயம்.

மொட்டை ராஜேந்திரன் சந்தானத்தின் மாமாவாக அதகளம் பண்ணுவதிலும், முக்கியமான கதாபாத்திரமாக படம் முழுவதும் நிறைவாகவும், காமெடியிலும் அப்ளாஸ் அள்ளுகிறார். பேர் சொல்லும் படமாக இந்தப்படம் மொட்டை ராஜேந்திரனுக்கு அமைந்திருக்கிறது.ஐயப்ப பக்தராக, பேயுடன் கிஸ் மீ பாடல் பாடி அடி வாங்குவதும், மந்திரவாதியுடன் சேர்ந்து கதவை மூடி திறப்பது, சந்தானத்திற்கு ஈடு கொடுத்து நடித்து அசத்தியிருக்கிறார்.

மாயாவாக ஷிர்த்தா சிவதாஸ் படம் முழுவதும் இல்லை என்றாலும் இவரைச் சுற்றித்தான் கதை நகர்வதால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

முதலில் தெய்வீக் சாமியராக தோன்றும் ஊர்வசியும், பயமுறுத்தும் மந்திரவாதியாக தோன்றும் மாமனார் பிபின் பின்னர் சந்தானத்திடம் மாட்டிக் கொண்டு பித்தாலாட்டங்கள் வெளி வருவதும், இவர்கள் இருவரும் பேயிடமிருந்து தப்பிக்க பேயாக வேஷம் போட்டு பேயிடம் அடி வாங்கும் காட்சிகள் என்று திறம்பட நடித்திருக்கிறார்கள்.

ஏரியாவாசிகளாக சிவசங்கர் மாஸ்டர், டைரக்டர் மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயபிரகாஷ், டாக்டராக சி.கம்.கார்த்திக் ஆகியோருடன் பிரசாந்த் ராஜ் கஞ்ச குட்டாவாக வந்து கவனிக்க தக்க வகையில் சிறு வேடம் என்றாலும் அசத்தல் நடிப்பால் கவர்கிறார்.

ஷபீரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவில் பேய் படத்திற்;;கான அத்தனை அம்சங்களையும் அச்சு அசலாக கொடுத்து பயமுறுத்தியும், சிரிக்க வைத்தும் காட்சிக் கோணங்களில் ஆச்சர்ய பட வைத்து விடுகிறார்.

திரைக்கதை, வசனம், இயக்கம்-ராம்பாலா. தில்லுக்கு துட்டு முதல் பட வெற்றியை தக்க வைத்து அதைப்போல் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தையும் வெற்றியடைய செய்வதில் இயக்குனர் ராம்பாலா காட்டிய ஈடுபாடு படத்தில் தெரிகிறது. பேய்,திகில் கலந்த காமெடி ஜர்னரில் இரண்டாம் பாகம் எப்பொழுதுமே வெற்றி பெறுமா? என்ற ஐயப்பாட்டை இந்தப் படம் தகர்ந்தெரிந்திருக்கிறது என்றே சொல்லலாம். பெரிய இடைவெளிக்குப் பிறகு அனைவரையும் கவர்ந்து தியேட்டருக்கு வரவழைக்கும் அளவிற்கு சந்தானம்-மொட்டை ராஜேந்திரன் மெகா காமெடி கூட்டணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. முதல் பாதி காதல், பேய் என்று அனைவரையும் பயமுறுத்த, இரண்டாம் பாதி பேயை சந்தானம் பயமுறுத்தும் அளவிற்கு படத்தை பல திருப்பங்களோடு எடுத்துச் சென்று பேயை எவ்வளவு அசால்டாக டீல் பண்ணி விரட்டுகிறார் என்பதை அசத்தலோடு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்பாலா. எந்தப் படமாக இருந்தாலும் திறமையான திரைக்கதை இருந்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு தில்லுக்குதுட்டு-2.

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு-2 சிரிப்புக்கு கியாரண்டி.

Please follow and like us: