சகா சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

சகா சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5

செல்லி சினிமாஸ் சார்பில் ஆர்.செல்வகுமார், ராம்பிரசாத் இணைந்து தயாரித்திருக்கும் சகா படத்தை இயக்கியிருக்கிறார் முருகேஷ்.
இதில் சரண், பிரித்வி, கிஷோர், ஸ்ரீராம், பாண்டி,ஆய்ரா, நீரஜா, தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:-இசை,பாடல்கள்-ஷபீர், ஒளிப்;;;;;பதிவு-நிரன்சந்தர், எடிட்டிங்-ஹரிஹரன், சண்டை-கோட்டி, நடனம்-சதீஷ், சாண்டி, ஷெரீஃப், கலை-ராஜு, பிஆர்ஒ-நிகில்.
வளர்ப்பு அம்மாவை கொன்றவர்களை கொலை செய்து விட்டு சரண், பாண்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கே பிரித்வியிடம் பகை ஏற்பட பாண்டியை கொன்று விட்டு விடுதலையாகி சென்று விடுகிறார் பிரித்வி. தன் நண்பனை கொன்ற பிரித்வியை பழி வாங்க துடிக்கும் சரண் தப்பிக்க திட்டம் தீட்ட அவருடன் சேர்ந்து வெவ்வேறு காரணங்களுக்காக கிஷோர், ஸ்ரீராம் ஆகிய இரு கைதிகளும் தப்பிக்கின்றனர். மூவரின் பழி வாங்கும் திட்டம் நிறைவேறியதா? இவர்களை தேடும் சிறைக் காவலர்களிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.
சரண், கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஆகிய நால்வரும் டீன்ஏஜ் குற்றம் புரிந்தவர்களாகவும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் இவர்களுடன் pபிரித்விராஜ் வில்லனாக சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் சிறைக்காவலராக மிரட்டும் தீனா, கதாநாயகிகளாக ஆய்ரா, நீரஜா ஆகியோரும் கவனிக்கதக்க வகையில் வந்து போகின்றனர்.
ஷபீரின் பாடல்கள், இசையும் முணுமுணுக்க வைக்கிறது.
துரத்தல் சண்டை காட்சிகள் நிறைந்த நிரன்சந்தர் ஒளிப்பதிவு ஒகே ரகம் தான்.
இயக்கம்-முருகேஷ். சிறையில் அடைக்கப்படும் டீன்ஏஜ் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களைப் பற்றிய படத்தில் சிறையில் நடக்கும் சண்டையுடன் பழி வாங்குதலையும் நட்பு, காதல் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் முருகேஷ். முதல் பாதி சிறையில் நடக்கும் சம்பவங்களோடு கதை நகர்வதும் பின்னர் சிறைக்கு வெளியே தப்பித்துச் செல்லும் போது தான் தடம் மாறுகிறது, திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் படம் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இயக்குனர் முருகேஷின் முதல் முயற்சிக்கும் உழைப்பிற்கும் பாராட்டலாம்.

மொத்தத்தில் டீன்ஏஜ் குற்றவாளிகளைப்பற்றி விரிவாக சொல்லும் படம் சகா.

Please follow and like us: