மார்பு வலிக்கு முழுமையான சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் இயங்கும் இரு சேவைகளை அறிமுகம் செய்யும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

மார்பு வலிக்கு முழுமையான சிகிச்சையளிக்க 24 மணி நேரமும் இயங்கும் இரு சேவைகளை அறிமுகம் செய்யும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

• பெரும்பாக்கத்திலுள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் 24ஓ7 மார்புவலி கிளினிக் மற்றும் இந்தியாவின் முதலாவது “பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப்”என்ற இரு புதிய சேவைகள் திட்டத்தை பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தொடங்கி வைத்தார்

• இந்த இரு புதிய சேவைகளும், மார்புவலி தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை வழங்கும்

சென்னை, 21 ஜனவரி, 2019: பார்க்வே பந்தாய் குழுமத்தின் ஒரு நிறுவனமான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் மிகப்பெரிய மருத்துவமனையான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி,24ஓ7 மார்புவலி கிளினிக் மற்றும் இந்தியாவின் முதலாவது “பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப்”என்ற இரு புதிய சேவைகள் திட்டங்களை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இச்சேவைக்கான மையமானது,கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்சின் தலைவர் டாக்டர் கே. ரவீந்திரநாத்மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் மாற்றுப்பதியம் மற்றும் இதய அறிவியல் துறையின் தலைவர் மற்றும் செயல்திட்ட இயக்குனர் டாக்டர். சந்தீப் அட்டவார், முதுநிலை இதய நுரையீரல் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். கோவினி பாலசுப்ரமணி, மற்றும் டாக்டர் ரவிக்குமார், டாக்டர் கோபு, டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன், டாக்டர் சூசன் ஜார்ஜ், டாக்டர் நரேந்திர குமார் மற்றும் டாக்டர் பரத் குமார் ஆகியோர் அடங்கிய இதயவியல் மருத்துவர்கள் முன்னிலையில் பிரபல நடிகர் தனுஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தீவிர மார்பு வலிகிளினிக், இதய செயல்பாடு சார்ந்த எந்த வகையான அவசர நிலைகளையும் கையாள்வதற்கு மிகச்சிறந்த சாதனங்கள் வசதியோடு வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரங்களும் பணியாற்றுகின்ற பிரத்யேக இடையீட்டு சிகிச்சை இதயவில் நிபுணர்களைக் கொண்டு இயங்கும். பொன்னான நேரம் எனப்படும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் நோயாளிக்குத் தேவைப்படும் சரியான சிகிச்சையை நோயாளி பெறுவதற்காக இதயம் சார்ந்த அனைத்து சேவைகளும் ஒருகூரையின் கீழ் கிடைக்குமாறு இந்த க்ளினிக் வழங்கும். மார்புவலி மற்றும் மாரடைப்பு அறிகுறிகளை மக்கள் புரிந்துகொள்ளவும் உதவி வழங்கும் இந்த க்ளினிக், மார்புவலி வராமல் தடுப்பது குறித்து சரியாக தகவலையும் வழங்கும். இம்மையத்தில் 24 மணி நேரமும், இசிஜி, எக்கோகார்டியோகிராஃபி ஸ்கிரீனிங் மற்றும் இதயம் சார்ந்த என்சைம்கள் பரிசோதனை ஆகியவைகள் செய்யப்படுகின்றன.

பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப் என்ற அமைப்பானது, இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை மூலம் குணமடைந்து உயிர் வாழ்பவர்களால் நடத்தப்படுகிறது. ஒரு நட்புறவான மற்றும் பரஸ்பர ஆதரவு வழங்கக்கூடிய சூழலில் தங்களது அனுபவங்களை இவர்கள் நோயாளிகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், ஒரே மாதிரியான இதய நோய் பாதிப்பை எதிர்கொள்கின்ற தங்களது உறுப்பினர்களுக்கு கிடைக்கக்கூடிய பிற பலன்கள் மற்றும் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முழுமையான தகவலையும் இவர்கள் வழங்குவார்கள். இதயநோய் பாதிப்புள்ள நோயாளிக்கு உணர்வு ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் சிகிச்சையளித்து குணமடையச் செய்வதற்கு நோயாளிக்கு உதவுவதே இந்த குழுவின் முதன்மையான செயல்பாடாக இருக்கிறது. இதயநோய் பாதிப்புள்ள நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனைகளை தைரியமாக சமாளிக்கவும் இக்குழுவினர் உதவுவார்கள்.

தீவிர மார்புவலி கிளினிக் (யுஉரவந ஊhநளவ Pயin ஊடiniஉ) தொடங்கப்படுவது குறித்துப் பேசியகிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்சின் தலைவர் டாக்டர் கே. ரவீந்திரநாத்;,“கடந்த சில பத்தாண்டுகளாக இதய-நாள நோய்களால் பாதிக்கப்படுகிற நபர்களின், குறிப்பாக இளவயது நபர்களின், எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக அதிகரித்து வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஏறக்குறைய 50மூ நபர்கள் உரிய சிகிச்சையைப் பெறுவதற்கான நேரத்தில் வராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். மார்புவலி ஃ மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் நோயாளி சிகிச்சை; பெறுவாரானால்,அந்த நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் இந்த ஒரு மணி நேரமே பொன்னான நேரமென அழைக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் இடைவெளியின்றி 24 மணி நேரமும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சேவையை சென்னையில் வழங்கும் முதன்மையான மருத்துவமனைகளுள் ஒன்றாக கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி திகழ்கிறது. இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள மார்புவலி க்ளினிக், இதய நோய் பாதிப்புகளால் அவதியுறுகிற நோயாளிகளுக்கு சிகிச்சைப் பெறுகின்ற நேரத்தைக் குறைப்பதன் மூலம் நோயாளிகள் நலம் பெறும் வாய்ப்பை பெரிதும் மேம்படுத்தும்” என்று கூறினார்.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் இதயவியல் நிபுணரான டாக்டர் கோபு,பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சப்போர்ட் குரூப் குறித்து பேசுகையில்,“மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையில் குணமடைந்து உயிர்வாழும் நபர்கள் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோர்,இந்த ஆதரவளிக்கும் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். மாரடைப்புக்கான அறிகுறிகள் மற்றும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வை இவர்கள் மக்கள் மத்தியில் பரப்புவார்கள். இதே போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற நபர்களோடு இது குறித்து மனம்விட்டுப் பேசுவதற்கான வாய்ப்பை இக்குழுவின் உறுப்பினர்கள் வழங்குவார்கள்,” என்று கூறினார்.

“இதய தசையின் ஒரு பகுதிக்கு செல்கின்ற இரத்தஓட்டம் கடுமையாக குறையும்போது அல்லது நின்றுவிடும்போது மாரடைப்புகள் நிகழ்கின்றன. இதய தசைக்கு இரத்தத்தை எடுத்துச்செல்கின்ற கரோனரி தமனிகளுள் ஒன்று அல்லது அதற்கும் அதிகமானவற்றில் அடைப்புகள் ஏற்படும்போது இரத்தஓட்டத் தடை நிகழ்கிறது. இத்தகைய கரோனரி இதய அடைப்புகள் பிரச்சனைக்கு முழுமையான குணமளிக்கும் சிகிச்சை முறையாக பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி இருக்கிறது. முதல்உதவி வழங்கப்படும் காலஅளவிற்குள்ளாகவே இது செய்யப்படுவதால்,பொன்னான நேரம் என அழைக்கப்படும் காலஅளவிற்குள்ளாகவே மிக முக்கியமான இதயதிசுவை உயிரிழப்பதிலிருந்து பாதுகாத்துவிடலாம்,” என்று கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் இதயவியல் நிபுணர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன் கூறினார்.

ALSO READ:

GLENEAGLES GLOBAL HEALTH CITY LAUNCHES TWO 24/7 SERVICES TO PROVIDE COMPREHENSIVE CHEST PAIN TREATMENT

 

Please follow and like us: