இவர் தான் என் வருங்கால மனைவி – நடிகர் விஷால்

இவர் தான் என் வருங்கால மனைவி – நடிகர் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார்.

அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது.

எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

அதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அனிஷா ஆல்லா ரெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்திருக்கிறார்.அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

திருமணம் எப்போது என்று அறிவிக்கவில்லை. ஆனால், நிச்சயதார்த்தம் வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

 

ALSO READ:

WEDDING BELLS RING FOR VISHAL-ANISHA ALLA

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *