தோசையில் உலக கின்னஸ் சாதனை 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி தோசை தயாரித்தனர்

தோசையில் உலக கின்னஸ் சாதனை* *50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி தோசை தயாரித்தனர்

உலகிலேயே முதல் முறையாக 50 சமையல் நிபுணர்கள் இணைந்து 100 அடி அளவில் மிகப் பிரமாண்டமான தோசையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தயாரித்தனர்.

டாக்டர் செஃப் வினோத் தலைமையில் சரவணபவன் சமையற்கலை வல்லுனர்கள் இணைந்து வெள்ளிக்கிழமை (ஜன.11) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள உலக கின்னஸ் சாதனை நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

7 டன் எடை கொண்ட தோசை கல்லில், 27 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தோசை 100 அடியில் தயாரிக்கப்பட்டது. பிரமாண்ட தோசையை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்தனர். கின்னஸ் புக் ஆஃப் ரெக்ர்டில் 4 நாளில் 100 அடி தோசை இடம்பெற உள்ளது.

இதற்குமுன் அஹமதாபாத்தில் உள்ள ஸங்கல்ப் ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில்
Dr. செஃப் வினோத்குமார் தலைமையில் சரவணபவ் ஓட்டல் சமையல் கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் Dr. செஃப் வினோத்குமார் CEO/Chief Trainer  Sai Institutions, திருமதி இந்திரா வினோத்குமார், திருமதி ஸ்ருதி நகுல், சரவணபவன் மனிதவள மேம்பாட்டுத்துறை திரு தாமோதரன், பொது மேலாளர் திரு மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:

Chennai bags another World Record for its favourite delight, Dr.Chef Vinoth leads the team of Saravana Bhavan Chefs

Please follow and like us: