தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை

தி ஆர்ட் மற்றும் தரன்சியா நிறுவனங்கள் இணைந்து உலக கின்னஸ் சாதனை

உலக அமைதியை வலியுறுத்தி இடைவெளி இல்லாமல் 4 மணிநேரத்தில் 950 மாணவர்களுக்கு 5 ஓவியர்கள் இணைந்து முகத்தில் ஓவியம் வரைந்து உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்படக் கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் தலைமையிலான குழு நிகழ்த்திய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இதற்குமுன் 680 பேருக்கு முக ஓவியம் வரைந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை எல்.ராமச்சந்திரன் குழுவினர் முறியடித்துள்ளனர்.

8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைபெற்ற முக ஓவியம் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் எல்.ராமச்சந்திரன், அழகேசன், ஆனந்தன், விஜயராஜ், ரசோரியோ ஜான் விக்டர் ஆகியோர் பங்கெபெற்றனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *