சென்னையில் உலக கின்னஸ் சாதனை: 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி தோசை தயாரிக்கிறார்கள்

சென்னையில் உலக கின்னஸ் சாதனை: 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி தோசை தயாரிக்கிறார்கள்

உலகிலேயே முதல் முறையாக 50 சமையல் நிபுணர்கள் இணைந்து 100 அடி அளவில் மிகப் பிரமாண்ட தோசையை சென்னையில் தயாரிக்க உள்ளனர்.

டாக்டர் செஃப் வினோத் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வரும் 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள உலக கின்னஸ் சாதனை நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

கின்னஸ் குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்று எவ்வளவு நேரத்தில், எத்தனை பேர் இணைந்து, எவ்வளவு எடை உடைய பொருட்கள் கொண்டு தோசை தயாரிக்கப்படுகிறது என்பதை கணித்து விருது வழங்க உள்ளனர்.

இதற்குமுன் ஹைதராபாத்தில் உள்ள ஸங்கல்ப் ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில்
செஃப் வினோத் தலைமையிலான குழுவினர் 100 அடி தோசையை தயாரிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஸ்ருதி நகுல், நடிகர் மா.கா.பா.ஆனந்த், சரவணபவன் பொது மேலாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:

Guinness Record attempt to make the largest dosa in the world

 

Please follow and like us: