காற்றாலை மின் உற்பத்தி குறித்த சர்வதேச மாநாடு

காற்றாலை மின் உற்பத்தி குறித்த சர்வதேச மாநாடு

சென்னை,டிச. 11-
விவசாயப் பணிகளில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறிய காற்றாலை டர்பைன்கள் இயற்கையாகவே  பயன்படுத்தப்பட்டு வந்தன. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கிணற்றில் இருந்து எடுக்க அது பயன்படுத்தப்பட்டு வந்தது. 18வது நூற்றாண்டின் இறுதியில் தாராளமாக மின்சாரம் கிடைக்கத் தொடங்கியவுடன் 1890 முதல் 1950 ஆம் ஆண்டு வரை சிறிய காற்று டர்பைன்கள் பிரபலமாக இருந்தன. 1970களில் மீண்டும் அவை முன்னுக்கு வந்தன. கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில் அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் 10கோடி சிறு விவசாயிகள் மற்றும் பல சிறு தொழிற்சாலைகள் தற்போதும் 10 கிலோ வாட் மின்சாரத்திற்கும் குறைவாகவே நுகர்ந்து வருகின்றன. காற்று அதிகமாக வீசக்கூடிய பகுதிகளில்  ஒவ்வொறு பண்ணையிலும் சிறிய தொழிற்சாலைகளிலும் சிறிய டர்பைன்களால் செயல்படும் காற்றாடியை காணமுடியும்.எனவே  இந்தியாவில் சிறிய விவசாய நிலங்களில் லட்சக்கணக்கான சிறியரக காற்றாலை டர்பைன்களை நிறுவ முடியும். இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நீரை இறைக்கவும் மற்றும் இதர வேளாண் தொடர்பான பணிகளுக்கும் தேவைப்படும் மின்சாரத்தில் சுயசார்பை அடைய முடியும்.
நாட்டில் காற்றாலை மின்சாரத்தை  அதிகளவில் பயன்படுத்துமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்வதோடு இதற்காக பல்வேறு மேம்பாட்டுத்திட்டங்களையும் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்என்ஆர்இ) செயல்படுத்தி வருகிறது. இதற்காக 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து சிறிய காற்றாலை டர்பைன் சாதனங்களையும் சூரிய மின்சக்தி சாதனங்களையம்  பயன்படுத்துமாறு அந்த அமைச்சகம் பிரச்சாரம் செய்து வருகிறது.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  (எம்என்ஆர்இ) அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய காற்றாலை பயிற்சி நிலையம் (என்ஐடபிள்யுஇ) சிறிய காற்றாலை டர்பைன்கள் குறித்து டிச.10 முதல் 12 ஆம் தேதிவரை சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாஜ் கேட்வே ஐடி எக்ஸ்பிரஸ் ஹோட்டலில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்துகிறது.
 இந்த துறையில் தற்போது வெளிப்படையாக கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுதல்  அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல், கிராப்புறங்களுக்கு காற்று மின்சக்தியை விரிவுபடுத்த  உலகளாவிய சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளை விவாதித்தல் ஆகியவை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். காற்று மின்சக்தி டர்பைன்களை நிறுவபவர்களை இணைப்பதன் மூலம் இந்தியாவில் தொலை தூர கிராமப்புறங்களில் இது தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும். இதனால் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை காணமுடியும். மிகவும் வேகமாக வளர்ந்துவரும் இந்த துறையில் உள்ளூர் ஆய்வுகளை கொண்டு நீடித்த வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
தேசிய, சர்வதேச பார்வையாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து உலகளவில் உள்ள சிறிய காற்றாலை டர்பைன்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் அதுகுறித்து மேலும் அறிந்து கொள்ளவும் இந்த சர்வதேச மாநாடு உதவும். பல்வேறு எரிசக்தித் துறைகளின் தயாரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், நிபுணர்கள் ஒரே இடத்தில் கூடி விவாதிக்கவும் இந்த மாநாடு உதவும். 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில்  பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.இந்த துறையில்  உலகில் உள்ள சிறந்த நடைமுறைகள், உலகளவில் கிடைக்கக்கூடிய சிறியரக டர்பைன்கள் குறித்து நிபுணர்கள் படக்காட்சிகளுடன் விளக்க உள்ளனர். 500 கிலோவாட்  திறன்கொண்ட காற்றாலை டர்பைன்களை தரமாக உற்பத்தி செய்வதிலும் இந்தியாவில் வளமான ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை பெற்றதிலும் சிலர் முன்னோடியாக விளங்குகின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொழில் நுட்பங்களையும் அதற்கான தீர்வுகளையும் முதல்முறையாக இந்த மாநாட்டில் நிபுணர்களின் விளக்கங்களுடன் காணமுடியும்.
 சர்வதேச நிறுவனங்களுடன் உள்ளூர் தயாரிப்பாளர்கள் கூட்டாக  திட்டங்களை மேற்கொள்ளவும் குறைவாக காற்று வீசக்கூடிய  பகுதிகள் மற்றும் பல்வேறு தன்மைகளுடன் கூடிய நிலப்பகுதி ஆகிய இடங்களில் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு காற்று சக்தியை ஏற்படுத்த எழும் சவால்களை அடையாளம் காணவும் இந்த மாநாட்டின் அமர்வுகள் உதவும்.  உலகம் முழுவதிலும் இருந்து இந்த மாநாட்டில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மிகப்பெரிய அளவில் காற்று சக்தி டர்பைன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், டெலப்பர்ஸ், கல்வியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள், மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தேர்வுசெய்யப்பட்டிருக்கும் முன்னோடி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகளும் போஸ்டர் விளக்க நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. குறிப்பாக வளர்ந்து நாடுகளில் இந்ததுறையில் உள்ள முன்னேற்றங்கள் அனுபவங்களை இந்தியாவில் அமல்படுத்த இந்த மாநாடு பயன்படும். கல்வி, சந்தைமதிப்பீடு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவை குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளன.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணை செயலர் திரு.பானு பிரதாப் யாதவ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு டிசம்பர் 10 ஆம் தேதி  சிறிய காற்றாலை டர்பைன்கள் குறித்த சர்வதேச அமர்வை  தொடங்கிவைக்கிறார்.என்ஐடபிள்யூஇ இயக்குநர் டாக்டர் கே. பலராமன், பிரிட்டன் காற்றாலை அதிகாரமயமாக்கல் ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெசிகா ரிவாஸ் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டு அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர்.

ALSO READ:

National Institute of Wind Energy (NIWE), Chennai

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *