நாவை சொடுக்கெடுக்கும் சுவைக்கு தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி

நாவை சொடுக்கெடுக்கும் சுவை

நாவை நடனமாட வைக்கும் சுவைக்கு புகழ்பெற்ற தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி கடையை சென்னை வளசரவாக்கத்தில் பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் நளபாக சக்கரவர்த்தி செஃப் தாமு இருவரும் ஞாயிறு (9.12.2018) அன்று துவக்கி வைத்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவையும் சொடுக்கெடுக்கும் அசைவ உணவுகளின் அணிவகுப்பு, தரத்திலோ முதல் வகுப்பு என்பது தஞ்சை தேவர்’ஸ் பிரியாணின் தாரக மந்திரம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டார். கடையை திறந்து வைத்து பேசிய செஃப் தாமு தஞ்சை பிரியாணியே… ஒருபிடி பிடிக்க வைத்துவிட்டாய், என்னையே… என்று நகைச்சுவைக்கு சுவை ஊட்டினார்.

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கும் தஞ்சை தேவர் பிரியாணி கடை சென்னையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வீட்டு முறை கைப்பக்குவத்தில் அம்மியில் அரைக்கப்பட்ட வாசனை நிறைந்த மசாலா சேர்க்கப்பட்டு, சீரகச்சம்பா, பாசுமதி அரிசியில் தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி சமைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான தண்ணீர், செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி என்பதால் சுவையைப் பற்றி சொல்ல சுவைப்பவரே திக்குமுக்காடிப் போகின்றனர்.

தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி கடையின் சிறப்பு அம்சமாக 260 ரூபாயில் அன்லிமிடெட் பிரியாணியை சுவைக்கலாம். ஒரே விலையில் சிக்கன், மட்டன், வான்கோழி பிரியாணி வகைகளை சுவைக்கும் வாய்ப்பு வரலாற்றில் இதுவே முதல் வாய்ப்பாக்க வழங்கப்படுகிறது.

ALSO READ:

Authentic Thanjai Devar’s Biryani – Grand Opening @ valasaravakkam

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *