எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன்

எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன்

எஸ்.ஆர்.எம்.கல்விநிறுவனத்தின் சிறப்புப் பட்டமளிப்பு விழா 02/12/2018 அன்று தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பட்டமளிப்பு விழாச் சிறப்புரையில் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் அவர்கள் “ கற்றல் என்பது தொடர்நிலை. அதற்கு முடிவென்பதே இல்லை. பட்டம் பெறுவது என்பது இந்த சவால்கள் நிறைந்த பயணத்தின் ஒரு தொடக்கம் மட்டுமே. ஆசிரியர்கள் என்பவர் வழிகாட்டிகள் மட்டுமே. அவர்கள் அமைத்துக் கொடுக்கும் வழிப்பாதையில் சென்று இவ்வுலகை மேலும் சிறப்பான ஒன்றாக மாற்றும் உன்னத நோக்கத்துடன் செயல்படும் பொறுப்பு மாணவர்களுடையதே. மனித நேயத்தை மறக்காமல் சமுதாயச் சிந்தனையுடன் செயல்படும் கல்வியினை மாணவர்களுக்குத் தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு என்பதை தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் கல்வித்துறையும் சட்டசபையும் இணைந்து செயல்படும் சிந்தனையை உருவாக்க வேண்டும் என்றும் அதற்காகவே மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் (இண்டெர்ஷிப்) பாராளுமன்றத்தில் நடத்தப்படுகிறது என்றும் அதில் பங்கேற்க மாணவர்களை பல்கலைக்கழகங்களும் பேராசிரியர்களும் ஊக்குவிக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் மாணவர்கள் நாளைய உலகின் தலைவர்களாக உருவாக, சவால்களை சந்திக்க தேவையான படைப்பாற்றல், ஆராய்ச்சி உயர்சிந்தனை, புத்தாக்கம், அறக்கோட்பாடுகள் ஆகியவற்றை கல்வித்துறையில் எல்லாவகையிலும் செயல்படுத்த வேண்டும்” என்றும் அவர் தனது சிறப்புரையில் கூறினார்.
பொறியியல் மற்றும் தகவல்தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல், அறிவியல் மற்றும் கலையியல் மற்றும் மேலாண்மையியல் முதலிய புலங்களில் பட்டவகுப்பு, முதுநிலைபட்டவகுப்பு, முனைவர்பட்ட ஆய்வு பயின்ற ஏறத்தாழ 6000 மாணவர்கள் பட்டம்பெற்றனர். இது தவிர தத்தம் துறைகளில் சிறப்புத்தகுதி உடைய 140 மாணவர்கள் தங்கப்பதக்கங்களையும் 41 ஆய்வு மாணவர்கள் முனைவர்பட்டமும் பெற்றனர்.
இப்பட்டமளிப்பு விழாவில் சென்னை காது மூக்கு தொண்டை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் மோகன் காமேஷ்வரன் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. டாக்டர் மோகன் காமேஷ்வரன் அவர்கள் “மாணவர்களின் வாழ்வின் இத்தருணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் காலமாக இருப்பதுடன் வாழ்க்கையில் சில உயர் நோக்கங்களை அமைத்தும் கொள்ளும் நேரமும் இதுவே என்று தனது வாழ்க்கை அனுபவங்களோடு ஒப்பிட்டு மாணவர்களுக்கான அறிவுரையைத் தமது ஏற்புரையில் வழங்கினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தமது வரவேற்புரையில் “மாணவர்கள் அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொண்டு இன்றைய காலத்தின் சவால்களை எதிர்கொள்ள பழகவேண்டும் என்று குறிப்பிட்டார். எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்ஷெட்டி அவர்கள் ஆண்டறிக்கையினை வாசித்தார். அதில் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனம் தேசியதர மதீப்பீட்டுக்குழுவின் தரமதிப்பீட்டில் முதல்நிலையைப் பெற்றதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ALSO READ:

Build Special capacities in education system to nurture students said Smt. Sumitra Mahajan in SRMIST’s Special Convocation 2018

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *