டாக்டர் தீபா ஹரிஹரன் எழுதிய ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி”  நூல் வெளியீடு

உலக குறைமாத குழந்தை பிறப்பு தினத்தன்று, டாக்டர் தீபா ஹரிஹரன் அவர்களின் ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி” (பேரன்டிங் பிரிமீஸ்) என்ற நூல் வெளியீடு

• குறைமாதக் குழந்தை பிறப்பு என்பது, இந்தியாவில் பச்சிளம்குழந்தைகளின் இறப்புகளுக்கு முதன்மையான காரணமாகும்.
• உலகம் முழுவதும், நிகழும் பச்சிளம்குழந்தை இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது.
• குறைமாத குழந்தை பிறப்பு, அதன் காரணங்கள் மற்றும் அதை தடுத்தல், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றோர்கள் வளர்ப்பதற்குரிய பயனுள்ள உத்திகள் குறித்து இந்த நூல் விளக்குகிறது

2018, நவம்பர் 17 சென்னை : இந்தியாவில் வருடந்தோறும் குறைப்பிரசவத்தில் 3.5 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் நிலையில், உலக குறைமாத பிறப்பு குழந்தைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதிலும் பச்சிளம்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் எண்ணிக்கை 25மூ-க்கும் அதிகமாகும் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதில், பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு 57மூ-ஆக இருக்கிறது. குறைமாத குழந்தைப்பிறப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குறைமாத குழந்தை பிறப்பை தடுப்பதற்குரிய முறைகள் குறித்தும் மற்றும் பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைக்கு சிறந்த கவனிப்பு வழங்குவதற்கு அவர்களுக்கு ஆற்றல்பெறச் செய்வதற்கும் டாக்டர். தீபா ஹரிஹரன் அவர்கள் ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை வளர்ப்பது எப்படி?” (Parenting Preemies) என்ற நூலை உலக குறைமாத பிறப்பு குழந்தை தினமான நவம்பர் 17 அன்று வெளியிட்டார். இந்நூலாசிரியரான இவர், பச்சிளம் குழந்தையியல் மருத்துவத்தில் ஒரு முதுநிலை சிறப்பு மருத்துவராவார்.

கருத்தரித்ததிலிருந்து 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் எந்த குழந்தையும் குறைப்பிரசவ குழந்தை ஆகும். எனினும், முன்முதிர்வு காலஅளவும் மற்றும் நிலையும் இதில் முக்கியமானது. உரிய நாளுக்கு முன்பாக பிறக்கும் அனைத்து குறைப்பிரசவ குழந்தைகளுக்கும் கவனமான மருத்துவக்கவனிப்பு தேவைப்படும் அதேசமயம், 1 முதல் 2 மாதங்கள் முன்னதாக பிறக்கக்கூடிய ஒரு குழந்தையைவிட 3 முதல் 4 மாதங்கள் முன்னதாக பிறக்கக்கூடிய குழந்தைகள் மிகவும் அதிக ஆபத்தில் உள்ளன. கருத்தரித்து 30 வாரங்களுக்குமுன்பு பிறக்கக்கூடிய பெரும்பான்மையான குழந்தைகளுக்கு சுவாசிக்க உதவுவதற்கு ஆக்சிஜன் (பிராணவாயு), புறப்பரப்புச் செயலி கொண்டு சிகிச்சை மற்றும் இயந்திரம் சார்ந்த உதவி தேவை. இந்த நிலையில் தாய்மார்களால் பிறந்த பச்சிளம் குழந்தையை வைத்துக்கொள்ளவோ அல்லது தாய்ப்பால் கொடுக்கவோ முடியாது. குறைப்பிரசவ குழந்தை உயிர்பிழைக்குமா என்ற உறுதியற்ற தன்மையும் குடும்பத்திற்கு கவலையும், அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கக்கூடும். குறைமாத பிறப்பு பச்சிளங்குழந்தையின் இறப்பு தவிர்க்கப்பட்டாலும் கூட, குறைமாத பிறப்பு குழந்தைகள் பல சிக்கல்களையும் மற்றும் வாழ்நாள் முழுக்க பல இயலாமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

டாக்டர் ஹரிஹரன் கூறுகையில், ‘கற்றல், கருத்துப்பரிமாற்றம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக பிணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு அதிகரித்த ஆபத்தில் குறைப்பிரசவ குழந்தைகள் உள்ளனர். காதுகேட்பு அல்லது பார்வைத்திறனில் நீண்டகால பிரச்சினைகளினாலும் கற்றல் இயலாமைகளினாலும் மற்றும் இயக்க குறைபாடுகளினாலும் அவர்கள் பாதிக்கப்படலாம். வளர்ச்சி குன்றிய குறைப்பிரசவ குழந்தைகள் பின்னர் வாழ்க்கையில் நீரிழிவு நோய் அல்லது இதயப்பிரச்சினைகள் உண்டாகும் பெரும் ஆபத்தில் உள்ளனர்,” என்றார். ‘குறைமாத குழந்தை பிறப்பின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு பார்க்கையில், அதை முன்தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதே நாம் செய்யவேண்டிய முதல் நடவடிக்கையாகும். குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி? (பேரண்டிங் பிரிமீஸ்) என்ற நூல், கருத்தரிப்புக்கு முந்தைய கர்ப்ப உடல்நலம், கர்ப்பகால நீரிழிவு நோய், தாய்மையினால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவு போன்றவைகள் மீது இப்புத்தகம் பேசுகிறது. இவையனைத்துமே, குறைமாத குழந்தை பிறப்புக்கு பங்களிக்கக்கூடியவை. மேலும் ‘புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல், ஒழுங்குமுறையாக உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான அளவு உட்கொள்ளுதல் போன்ற எளிய வாழ்வியல் நடவடிக்கைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறைமாத குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்கு பெரிதும் உதவும்,” என்று அவர் கூறினார்.

ஒரு குறைமாத குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருக்கக்கூடிய உணர்வுரீதியிலான, மருத்துவம் சார்ந்த மற்றும் நிதிசார்ந்த சவால்களை சமாளித்து கடந்து செல்வது என்பது, பெரும் அச்சுறுத்தலாக தோன்றக்கூடும். பெற்றோர்கள் மிக முக்கியமான முடிவுகளை மிக விரைவாக எடுப்பதற்கு உதவ ஒரு கட்டமைப்பை வழங்குவதே ‘Parenting Preemies‘ என்ற இப்புத்தகத்தின் நோக்கமாகும். இதுகுறித்து டாக்டர். ஹரிஹரன் விளக்கமளிக்கையில் குறைப்பிரசவம் என்பது, கவலையளிக்கக்கூடிய ஒரு பொது சுகாதார பிரச்சினையாக இருக்கின்றபோதிலும், இந்திய சூழலில் இதுகுறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் 6-க்கும் குறைவாகவே இருக்கின்றன. குறைப்பிரசவத்தில் பிறந்த 75% குழந்தைகள், தாய்ப்பாலூட்டல், தொற்றுக்கட்டுப்பாடு, கங்காரு போல தாயின் அணைப்பில் இருத்தல் போன்ற எளிய, மிக குறைந்த செலவிலான இடையீட்டு நடவடிக்கைகளை பரவலாக செயல்படுத்துவதன் மூலம் உயிர் பிழைக்கலாம். எஞ்சியுள்ள 25மூ குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். தங்களது குழந்தையின் நலனுக்காக உரிய நேரத்திற்குள் சிறப்பான முடிவை அவர்கள் எடுப்பதற்கு மருத்துவம் மற்றும் நிதிசார்ந்த விளைவுகளை பெற்றோர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன்” என்று கூறினார்.

குறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்குமானால், அது பிறந்தவுடன் முதல் ஒரு மணி நேரம் என்பது மிக முக்கியமானதாகும். இது ~கோல்டன் ஹவர்| என அழைக்கப்படுகிறது. இந்த ஒரு மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சை கண்டிப்பாக அவசியமாகும். இந்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்படுகிற முறையான சிகிச்சையானது, அந்த பச்சிளம்குழந்தையின் உடல்நலத்தை மேம்படுத்தி அது உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பை பெருமளவு அதிகமாக்குகிறது. அத்துடன், அக்குழந்தை வளர்ந்தபிறகு வாழ்நாள் முழுவதும் சிறப்பான உடல்நலத்துடன் திறனோடு இருப்பதற்கும் வகை செய்கிறது. இந்த ~தங்க மணி நேரத்தில் வழங்கப்படுகிற முறையான சிகிச்சைக்கு எதிர்காலத்தில் வழங்கப்படக்கூடிய எந்த அளவிலான சிகிச்சையும் ஈடாகாது. தங்களது குழந்தைக்கு சரியான சிகிச்சை கவனிப்பை தேர்வுசெய்வதில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்கை டாக்டர். தீபா ஹரிஹரன் வலியுறுத்துகிறார்.| ~பல குறைப்பிரசவ குழந்தைகளுக்கு பச்சிளம்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் (Nஐஊரு) பராமரிப்பும் சிகிச்சையும் அவசியமாகும். இந்த Nஐஊரு பிரிவானது, நவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பச்சிளம்குழந்தைக்கான மருத்துவ நிபுணர்கள், சிறப்பு செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் சிறப்பு வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு முழுமையான மருத்துவக்குழுவையும் கொண்டிருக்க வேண்டும். இக்குழுவானது, அவர்களுக்கிடையே முழு ஒத்திசைவோடு செயல்படுவதும் பெற்றோர்களோடு ஒருங்கிணைந்து இயங்குவதும் அவசியமாகும்.|

டாக்டர். தீபா, அவரது இப்புத்தகத்தை, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அர்ப்;பணித்திருக்கிறார். ‘தங்களது குழந்தை உயிர் பிழைப்பதற்காக அனைத்து சிக்கல்கள், பிரச்சினைகளுக்கும் எதிராக துணிவுடன் போராடுகிற பெற்றோர்களை நான் அடிக்கடி சந்திக்கிறேன். இந்த விஷயமானது, இன்னும் அடிக்கடி நிகழுமாறு ஆக்குவதற்கு அவர்களுக்கு திறனை வழங்குவதற்கான ஒரு மேற்கோள் ஆதாரமாக இப்புத்தகம் இருக்கிறது,” என்று டாக்டர். தீபா குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:

On World Prematurity Day, Dr. DeepaHariharan unveils her book “Parenting Preemies”

 

Please follow and like us: