கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்!

ஆன்லைன் நெருக்கடியில் தியேட்டர்கள!
தியேட்டர் டிக்கெட் விற்பனையை அரசே நடத்துமா?

கேளிக்கை வரியால் தள்ளாடும் தயாரிப்பாளர்கள்!

சினிமாவில் வெளிப்படைத்தன்மைக்கு வழி ஏற்பட்டால் மட்டுமே சினிமாவில் தலைவிரித்தாடும் கருப்பு பணம் முடிவுக்கு வரும்.gst
ஏற்கனவே மல்டிப்ளக்ஸ், மால்கள், சாதாரண திரையரங்குகள் குறிப்பிட்ட அளவுதான் ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், அது சாமான்யர்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது. படத்தை தயாரித்து அதை விநியோகம் செய்து தியேட்டர் அதிபர்கள் அதை வாங்கி அனைவருக்கும் லாபம் கிடைத்தால் மட்டுமே படம் வெற்றி என்ற இலக்கை கணிக்க முடியும்.
பெரிய படங்களை பொறுத்த வரை வியாபாரம் எம்.ஜி, அட்வான்ஸ் என விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்களிடமிருந்து விநியோகஸ்தர் லாபம் பார்ப்பார்கள்.
சிறு முதலீட்டு படங்களைப் பொறுத்த வரையில் விளம்பரச் செலவு, டிஜிட்டல் ஒளிபரப்பு, போஸ்டர், பேனர் செலவு அத்தனையும் ஏற்றுக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தரிடம் முன்பணம் கொடுத்து வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சினிமாவில் ஒரு படத்துக்கு எவ்வளவு செலவு? எவ்வளவு லாபம் ? அரசாங்கத்துக்கு முறையாக வரி சென்றதா? ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது? என பல கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் இல்லை.
தியேட்டர் அதிபர்கள் சொல்லும் கணக்கு தான் விநியோகஸ்தர் செலவு கணக்கை தயாரிப்பாளருக்கு அனுப்புவார். தியேட்டர் ரெப் என்பவர் விநியோகஸ்தர் சார்பில் பிரதிநிதி இருந்தாலும் அது அடிஷனல் செலவே தவிர தியேட்டர் அதிபர்கள் கொடுப்பது தான் கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.
முன்பு விநியோகஸ்தரின் தியேட்டர் ரெப் என்று விநியோகஸ்தர் சார்பில் பிரதிநிதி டிக்கெட் விற்பனையை கணக்கெடுத்து சொல்ல அது தியேட்டர் மேனஜர் கொடுக்கும் டெய்லி கலெக்ஷன்; ரிப்போர்ட் எனும் டி.சி.ஆருடன் ஒத்து போகும்.
இப்போது டெக்னாலஜி வளர்ந்தவுடன் டிக்கெட் கணக்கெடுப்பு கூப்பன் மூலம் விற்பனை செய்யப்படுவதால் குறைந்த விலை விற்பனையை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். கணக்கு கொடுக்கக் கூட இப்பொழுது தியேட்டர் அதிபர்கள் முன் வருவதில்லை.
இதனால் வசூலின் உண்மை நிலையை அறியாத சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் எடுத்த படம் திருப்தி இல்லை, ஆர்டிஸ்ட் இல்லை என்ற காரணங்களை சொல்லி விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் தங்களுக்குள் மாற்றி மாற்றி பழி போட்டு உண்மையான வசூலை மறைப்பதால் பாதிக்கப் படுவது சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தான்.
தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட பல காரணம் இருக்கிறது என்பது போல் தியேட்டர்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கிறது என்பது இன்னொரு வாதம்.
முன்பு சினிமா மட்டுமே பொழுது போக்காக இருந்தது.ஆனால் இப்பொழுது வலைத்தளம், மொபைல்போன்,பேஸ்புக்,டிவிட்டர்,வாட்ஸ்அப் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுது போக்கு அவர்கள் நேரத்தை நிரப்பி விடுகிறது.
என்ன தான் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் தொழில் நுட்பத்தில் உருவான பெரிய படங்களை தியேட்டரில் பார்க்கும் அனுபவம் அலாதியானது என்பது சினிமா ரசிகனுக்கு மட்டும் தான் தெரியும்.இன்று செல்போன், லேப்டாப்பில் வீட்டில் அமர்ந்தப்படியோ, பயணம் செய்யும் போதோ பார்க்கும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்து விட்டது.
இதனால் தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து குறிப்பிட்ட சில சதவிதத்தினர் மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க வருகின்றனர். தியேட்டர் கட்டணத்தை விட கேன்டீன்களின் விலை, பார்க்கிங் அதை விட அதிகமாக இருப்பதும் இன்னொரு காரணம்.
மக்களின் வருகை குறைவால் இப்பொழுது இருக்கும் டிக்கெட் விலை மின் கட்டணம், பராமரிப்பு செலவுகளால் தாக்கு பிடிக்க முடியாமல்; தியேட்டர்கள் டிக்கெட் விலையை உயர்த்த போர் கொடி தூக்கியுள்ளது. அப்பொழுது தான் படத்தால் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு போக தியேட்டர்களுக்கான தொகை கிடைக்கும் என்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னர் லட்சத்தில் முடிந்த படங்கள் இப்பொழுது கோடிகளில் வியாபாரம் மாறியதால் இன்னமும் டிக்கெட் விலையை உயர்த்தாமல் படத்தை திரையிட்டால் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாக தியேட்டர் அதிபர்கள் புலம்புகின்றனர்.
1995ம் ஆண்டில் நிர்ணயித்த டிக்கெட் விலையை சில ஆண்டுகள் முன் மாற்றங்கள் கொண்டு வந்தும் லாபம் இல்லை. மின்கட்டணம், ஊழியர் சம்பளம், நவீன புரொஜக்டர்கள், ஒலி அமைப்புகள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு மற்றும் தியேட்டரில் படம் பார்க்க வருவது பாதியாக குறைந்துள்ளதால் 2500 தியேட்டர் இருந்த நிலையில் 900 தியேட்டர்களாக குறைந்து விட்டது அதை விட பரிதாபம், பல தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களாகவும், திருமண மண்டபங்களாகவும். அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டது.
இப்பொழுது இருக்கும் வியாபராம் நோக்கம் மாறிவிட்டதால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் டிரெண்டில் இருக்கிறது. 300, 400 பேர் அமரக்கூடிய தியேட்டர்கள் எல்லாம் 100, 200 பேர் அமரக்கூடிய தியேட்டர்களாக காட்சியளிக்கிறது.
வெளிநாடுகளில் படம் வெளியானதும் இன்டர்நெட் உரிமம் தரப்பட்டு நெட்டில் ரிலீஸ் செய்கிறார்கள்.இங்கு இத்தகைய தொழில் நுட்ப வளர்ச்சி நடைமுறை இல்லாததால் இன்டர்நெட்டில் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதை தடுக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்களை விட விநியோகஸ்தர்கள் ஆகிய தியேட்டர் அதிபர்களான தாங்கள் தான் என்பது இவர்களது வாதம்.
தியேட்டர் கேன்டீனில் விலையும், பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூலிப்பது இந்த செலவுகளை சமாளிக்கத்தான் என்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள்.
அது மட்டுமில்லாமல் இதே நிலை கர்நாடகாவில் உருவான போது கர்நாடக பிலிம் சேம்பர் மாநில அரசுடன் கலந்து பேசி டிக்கெட் விலையை 200 ஆக உயர்த்த அனுமதி பெற்று நிர்ணயித்தது. கர்நாடகாவில் தியேட்டர்காரர்களே கட்டணத்தை தீர்மானிக்கலாம்.
ஆந்திராவில் தியேட்டர் கட்டணத்திற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டு அரசு அதிகாரிகள் அந்த குழுவுடன் கலந்து பேசி தியேட்டர் கட்டணத்தில் மாற்றம் செய்ய இருக்கிறார்கள்.
இப்பொழுது விற்பனையில் உள்ள விலையோ ஜி.எஸ்.டி விலை என்பது தான் நிஜம். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி வருவதற்கு முன்பே தியேட்டர் உரிமையாளர்கள் மறைமுகமாகவே இந்த வகையில் விற்பனையாகும் பொருட்கள் மீது திணித்து விட்டது என்பது தான் உண்மை.
கேரளாவில் படம் வெளிவரும் போது தியேட்டர் காரர்கள் கட்டணத்தை நிர்ணயித்து கொள்வதோடு மற்ற நாட்களில் 200 ரூபாய் வரை வசூலிக்கலாம்.மற்ற மாநிலங்களிலும் தியேட்டர் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரியால் கேளிக்கை வரை இருக்காது ஆனால் திரையரங்குகளும், திரையுலகமும் பல சிக்கல்களை இந்த மாறுதலால் சந்திக்க உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தியேட்டர் கட்டணம் மல்;டிபிளக்ஸ் தியேட்டர் ரூ.250, சிங்கிள் ஸ்கிரீன் கட்டணம் ரூ.200, சாதாரண தியேட்டர் கட்டணம் ரூ.120 என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே தியேட்டர் அதிபர்களின் வேண்டுகோள். இதனால் தியேட்டர் கேன்டீன் மற்றும் பார்க்கிங் கட்டணம் மாற்றம் வரும். அதனால் தியேட்டர் டிக்கெட் விலையை உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கையை தியேட்டர் அதிபர்கள் முன் வைக்கின்றனர்.
ஆனால் ஒட்டல்களில் சாப்பிடுவோர்க்கு உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி என்று விலையை நிர்;;;;;;ணயிருக்கிறார்கள்.
இன்னொரு வழி இத்தகைய நிலை மாற வேண்டுமானால் அனைத்து தியேட்டர்களிலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனைக்கு செலவு ஒன்றும் பெரிதில்லை. பண பரிமாற்றமே டிஜிட்டல் மயமாகும் இக்காலத்தில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை என்பது சாத்தியமாகதா? துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்.
இதை நிரூபித்து காட்டியிருக்கும் கேரளாவில் அனைத்து தியேட்டர் டிக்கெட் விற்பனையும் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படையான இருப்பதால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்திலும் நவீன காலத்திற்கேற்ப அனைத்து தியேட்டர்களிலும் கணினி மயமாக்கி தியேட்டர் டிக்கெட் விற்பனை செய்ய முடிந்தால் ஸ்டார் நடிகர்கள் படம் வெளியாகும் போது அதிகப்படியாக டிக்கெட் விலை போவதை சிறப்பாக தடுக்க முடியும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது.ரூ.100 மற்றும் அதற்கும் குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கன வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. ஆனால், ரூ.100க்கும் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கூடிய விரைவில் ஆன்லைன் சினிமா டிக்கெட் செய்வதற்கான இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க இருக்கிறதாம். இந்த இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்தால் ரூ.10 மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் மூன்றாக பிரிக்கப்பட்டு, தயாரிப்பாளர், இணையதளத்தின் பராமரிப்பு மற்றும் விவசாயிகளின் நன்மைக்கு பயன்படுத்தப்படுமாம்.
ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலித்து வரும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் இந்த அறிவிப்பு பெரிய ஷாக்காகும்.
இதை நடைமுறைப்படுத்தவது என்பது கடினம் இதற்கு பதிலாக பல அதிகாரங்களை உள்ளடக்கிய மாநில அரசே இந்த டிக்கெட் விற்பனையை துணிந்து செய்யலாம்.
சினிமாத் துறையை முறைப்படுத்துவது அரசின் கடமை. தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திரையரங்கமும் அதன் வசதிகளை பொறுத்து ஒரு காட்சிக்கு, ஒவ்வொரு வகுப்புக்கும், ஒரு சீட்டுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? என்பதை அரசாங்கம் குழு அமைத்து ஆய்வு செய்து இணையதளத்தில் பட்டியல் வெளியிட வேண்டும். தமிழக அரசு சினிமாவுக்கு என பலமான சர்வர்களை கொண்டு ஒரு கணினி மையம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள குக்கிராமத்தில் இருக்கும் தியேட்டர்கள் முதற்கொண்டு அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் வெப்சைட் இருக்க வேண்டியதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.
அரசாங்கத்தின் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ளஅனைத்து திரையரங்குகளின் வெப்சைட் ;டையும் இணைக்க வேண்டும். முக்கிய அம்சம் அரசாங்கத்தின் இணையதளம் ஹேக் செய்ய முடியாதவாறு வலுவாக இருக்க வேண்டும்.
அனைத்து தியேட்டருக்கும் அரசாங்கம் வலுவான இணைய இணைப்பு தர வேண்டும்.
தமிழகத்தின் எந்த மூலையில் உள்ள தியேட்டரும் அரசாங்க வெப்சைட்டில் லாக் செய்து அதில்தான் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
இதன் மூலம் ஆன் லைனில் நேரடியாக புக் செய்தாலும் தியேட்டரில் நேராக சென்று டிக்கெட் வாங்கினாலும் அரசாங்க இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டு இருக்கும்.
தியேட்டர்கள் அரசாங்க இணையதளத்தில் புக் செய்யாமல் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாத வாறு அரசாங்கம் தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை அவசியம்.
தியேட்டரில் உள்ளவர்கள் அரசாங்க இணைய தளத்தில் புக் செய்ததற்கு கொடுக்கப்படும் கணினி மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட ரசீதை டிக்கெட் வாங்கும் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் ரசிகர்கள் நேரடியாக டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு புக்கிங் கட்டணம் உண்டு. தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுத்தால் புக்கிங் கட்டணம் கிடையாது.
இந்த ரசீதில் குறிப்பிட்ட திரையரங்குக்கு குறிப்பிட்ட வகுப்புக்கு எவ்வளவு கட்டணம்? இதில் அரசாங்கத்துக்கு எவ்வளவு ரூபாய் வரி சேருகிறது ஆகிய விவரங்கள் இருக்கும்.
இதன் மூலம் தியேட்டர்கள் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கமுடியாது. அதேசமயம், குறைவாக வசூலித்ததாக சொல்லி அரசாங்கத்தை ஏமாற்றவும் முடியாது.இந்த திட்டத்தின் மூலம் வருங்காலத்தில் எந்த ஒரு படமும் எத்தனை தியேட்டர்களில் ஓடியது? எவ்வளவு பேர் பார்த்தார்கள்? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? வரி மூலம், எவ்வளவு தொகை அரசாங்கத்துக்கு கிடைத்தது உள்ளிட்ட தகவல்கள் மக்களுக்கு எளிதாக தெரிய வரும்.சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என யாருமே இந்த முறையில் ஏமாற்ற முடியாது.
ஒவ்வொரு வருடமும் 500 முதல் 1000 கோடி அளவுக்கு கண்டிப்பாக அரசாங்கத்துக்கு வரி மூலம் வருமானம் கிடைக்கும். தியேட்டர்களில் முறையாக கட்டணம் வசூலித்தால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், திருட்டு டிவிடிகள் குறையும்.
தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டரில் கூடுதல் விலை விற்பதை கண்டுபிடிக்க அரசு மக்களுக்கு இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவித்து தகவல்கள் அடிப்படையில் அவ்வப்போது ரெய்டு நடத்தினால் தியேட்டர்களில் செய்யப்படும் முறைகேடு வெளிச்சத்துக்கு வெளியே வரும்.
படம் பார்க்க வரும் மக்கள் அரசாங்கம் விதித்த கட்டணம் பில்லில் இருக்கிறதா என செக் செய்து வாங்க வேண்டும். தியேட்டர்களில் ப்ளாக்கில் விற்பதோ, கூடுதல் விலைக்கு விற்பதோ தெரிந்தால் ரகசியமாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டு;ம். முடிந்தவரை நேரடியாகவே ஆன்லைனில் டிக்கெட் எடுத்து கொள்ளவும். இதன் மூலம் தியேட்டர்கள் முறைக்கேட்டில் ஈடுபட வாய்ப்பு குறையும்.
சினிமா தியேட்டர்களை ஒன்றிணைக்கும் இந்த திட்டம் வெற்றியடைந்தால் அடுத்ததாக பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான கோடி முறைகேட்டையும் இதே முறையில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.
கல்லூரி கட்டணம், பள்ளி கட்டணம், சினிமா கட்டணம் போன்றவற்றில் ஊழல் செய்பவர்களை தொழிநுட்பம் உதவியுடன் அழிக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை!
டெய்ல் பீஸ்:-சினிமா உலகில் திருட்டு விசிடியை பற்றி இன்றும் அனுமார் வால் போல் தொடர்ந்து நீண்டு கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதற்கு மாநில ;அரசு எவ்வளவு முயற்சி செய்தும் அதனைக் கட்டுப் படுத்த முடியவில்லை.இதனால் தயாரிப்பளர்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
எனவே இந்த திருட்டு விசிடியை ஒழித்துக் கட்ட ஒரே தீர்வு கலைஞானி கமலஹாசன் ஏற்கனவே சொன்னது போன்று தான். படம் வெளிவரும் போழுதே இணைதளத்தில் வெளியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு பணம் வரும். திருட்டு விசிடி பிரச்னை தீர்ந்து விடும் என்பது மட்டும் நிஜம்.
எனவே இந்த முறையை செயல்படுத்த விஷால் தலைமையில் இயங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் அல்லது தமிழக அரசாங்கமோ முயன்றால் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும். இந்த நிலையில் பூனைக்கு மணிகட்டுவது யார்? என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.
தற்போது தமிழ் சினிமா உலகிற்கு மேலும் நெருக்கடி வந்துள்ளது.தமிழக அரசு விதித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரி சினிமா உலகை மரணப்படுக்கையில் சிக்கித்; தடுமாறுகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விதித்துள்ள 10 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தியேட்டர்கள் மூடும் நிலையில் உள்ளது.
இதனால் வெளிவரும்புதுப்படங்கள் திக்கு திணறி திரிசங்கு நிலையில் உள்ளது. எனவே தமிழ் திரையுலகம் பாதிக்கும். இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தவிர்க்க தமிழக அரசு கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்குவது தமிழக அரசின் கடமையாகும்.

-இந்திரஜித்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *