ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோவுக்கு பிரதமர், துணை ஜனாதிபதி பாராட்டு

ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோவுக்கு பிரதமர், துணை ஜனாதிபதி பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிபன் கூறுகையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மொடி டுவிட்டரில் கூறுகையில், ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இரட்டிப்பு வெற்றி என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்ரும் வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *