தளபதி 63 படத்தில் விஜய் ஜோடி யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 63 படத்தில் விஜய் ஜோடி யார்?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரசியல் சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், அட்லி, நெல்சன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் தீபாவளிக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா வீட்டில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் அதன்மூலம் பல்வேறு வதந்திகளும் வெளிவந்தன.

இந்த நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே நேரத்தில் விஜய் ஜோடியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கிய தெறி, மெர்சல் படங்களில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *