பில்லா பாண்டி விமர்சனம் ரேட்டிங் 2.5/5

பில்லா பாண்டி விமர்சனம்

ரேட்டிங் 2.5/5

ஜெ.கே.பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் பில்லா பாண்டி.

இதில் ஆர்.கே.சுரேஷ், மேயாத மான் சிந்துஜா, சாந்தினி, கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ் சேதுபதி.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை,திரைக்கதை, வசனம்-எம்எம்;எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு-ஜீவன்;, இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை-மேட்டூர் சௌந்தர், நடனம்-கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப்பயிற்சி-சக்தி சரவணன், பாடல்கள்-கவிக்குமார்,தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம்-தம்பி பூபதி, மக்கள் தொடர்பு – நிகில்.

அணைத்தலப்பட்டியில் அஜீத்திpன் தீவர ரசிகராக இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.கட்டிட மேஸ்திரியாக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் தன் மாமாவின் எதிர்ப்பையும் மீறி அவரது மகள் சாந்தினியை காதலிக்கிறார். இதனிடையே அடுத்த ஊரில் சங்கிலி முருகனின் சொந்தமான இடத்தில் கட்டிட வேலை செய்ய செல்கிறார் ஆர்.கே.சுரேஷ். விடுமுறைக்கு வரும் சங்கிலி முருகனின் பேத்தி மேயாத மான் சிந்துஜா ஒரு தலையாக ஆர்.கே.சுரேஷை காதலிக்க தொடங்குகிறார். சிந்துஜாவின் பெற்றோர் புது கட்டிட திறப்பு விழாவில் தன் மகளின் திருமண அறிவிப்பை வெளியிட சிந்துஜா அதை எதிர்த்து ஆர்.கே.சுரேஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். இதை சற்றும் எதிர்பாரத பெற்றோர் கோபமாக மகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்படுகிறது. இதில் சிந்துஜா மட்டும் பிழைத்துக் கொண்டாலும் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து சிறு வயது குழந்தை போல் ஆகிவிடுகிறார். ஆர்.கே.சுரேஷின் மாமாவும் சாந்தினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார். ஆர்.கே.சுரேஷ் ஆதரவற்று இருக்கும் சிந்துஜாவை காப்பாற்றி குணப்படுத்துகிறாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

வில்லன், குணச்சித்திர நடிகர், இப்பொழுது இந்தப் படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகராக வந்து அலப்பறை பண்ணும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். காதல், சண்டை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நடை, உடை, பாவனை, பேச்சில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அசர வைக்கிறார்.

மேயாத மான் சிந்துஜா முக்கியமான கதாபாத்திரத்திலும், சாந்தினி காதலியாக வந்து நிறைவாக செய்துள்ளனர். மேலும் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் கே.சி.பி.தர்மேஷ், மாஸ்டர் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் படத்திற்கு முக்கிய பங்களிப்பை தந்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூரி, விதார்த் வந்து செல்கின்றனர்.

கதை,திரைக்கதை, வசனம்-எம்எம்எஸ்.மூர்த்தி, ஒல்டு வைன் இன் நியூ பாட்டில் என்பதற்கேற்ப கதைக்களத்தை அமைத்து தந்திருக்கிறார் எம்எம்எஸ்.மூர்த்தி.
ஜீவனின் ஒளிப்பதிவும், இளையவனின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்-ராஜ்சேதுபதி. ஆர்.கே.சுரேஷிற்கு ஏற்ற கதைக்களத்தை அமைத்து, அதில் ஆக்ஷன், காதல், மோதல், குடும்ப செண்டிமென்ட் கமர்ஷியல் மசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்சேதுபதி.

மொத்தத்தில் பில்லா பாண்டி பார்க்கலாம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *