குஜராத்தில் 597 அடி உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

The Prime Minister, Shri Narendra Modi and other dignitaries witness fly-past by the Indian Air Force, at the dedication ceremony of the ‘Statue of Unity’ to the Nation, on the occasion of the Rashtriya Ekta Diwas, at Kevadiya, in Narmada District of Gujarat on October 31, 2018.

குஜராத்தில் 597 அடி உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அகமதாபாத்,நவம்பர் 01–

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 597 அடி உயர உருவ சிலையை பிரதமர், நரேந்திர மோடி திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை இதற்கு கிடைத்து உள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றபின் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என அழைக்கப்படுகிறார்.

The Prime Minister, Shri Narendra Modi at the dedication of the ‘Statue of Unity’ to the Nation, on the occasion of the Rashtriya Ekta Diwas, at Kevadiya, in Narmada District of Gujarat on October 31, 2018.

597 அடி உயரம்

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 ல் நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில் சர்தார் சரோவர் அணை அருகில் 597 அடி உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. சிலை அமைக்கும் பணிகள் 2,300 கோடி ரூபாய் செலவில் முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று அவரது சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது ‘ஒற்றுமை சிலை’ என அழைக்கப்படுகிறது.

சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை குஜராத் மாநில அரசு பிரமாண்டமாக செய்திருந்தது. தற்போது உலகின் மிக உயரமான சிலையாக சீனாவில் உள்ள 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.

ஒற்றுமை சிலை

‘ஒற்றுமை சிலை’ என அழைக்கப்படும் சர்தார் வல்ல பாய் படேல் சிலை, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் நர்மதா நதியின் நடுவில் அமைந்துள்ள, ‘சாது பேட்’ எனப்படும் தீவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இந்த தீவுக்கு செல்ல 250 மீட்டர் நீள இணைப்பு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் இருந்து விவசாய கருவிகள் சேகரிக்கப்பட்டு அதில் இருந்த இரும்புகள் எடுக்கப்பட்டு சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் இரும்பு நன்கொடை

மொத்தத்தில், 135 டன் இரும்பை விவசாயிகள் நன்கொடை அளித்துள்ளனர். சிலை உள்ள பகுதியில் 52 அறைகள் உள்ள கட்டடம், மூன்று நட்சத்திர ஓட்டல், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்தார் படேலின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையிலான பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. சிலையின் மேற்பகுதியில் 200 பேர் நின்று பார்க்கும் வசதி உள்ளது. இங்கிருந்து சர்தார் சரோவர் அணை மற்றும் விந்திய சாத்பூரா மலைப்பகுதிகளை 200 கி.மீ. துாரம் பார்க்கலாம். 182 மீட்டர் உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படும் இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இந்த சிலையை உருவாக்க மொத்தம் 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.

ஒற்றுமை சிலை

மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன.பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் சிலையின் அடியில் மோடி சம்பிரதாய பூஜைகளை நடத்தினார்.

அப்போது, மி-க் 17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன. சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

குஜராத்தில் நடைபெற்ற படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

Please follow and like us: