c/o காதல் விமர்சனம்

0
345

c/o காதல் விமர்சனம்

ஸ்ரீசிருத்தி சாய் மூவிஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர், ஜீவன், கார்த்திகேயன் தயாரித்து சக்தி பிலிம் பாக்டரி வெளியீட்டில் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹேமம்பார் ஜஸ்டி.

இதில் தீப்ன், சோனியா கிரி, வெற்றி, மும்தாஜ் சர்க்கார், கார்த்திக் ரத்னம், ஐரா, நிஷேஷ், ஸ்வேதா ஆகியோர் நான்கு விதபருவ காதல் கதைக்குள் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-சுவீகர் அகஸ்தி, ஒளிப்பதிவு-குணசேகரன், எடிட்டர்-ஸ்ரீகர் பிரசாத், துணை தயாரிப்பு-மதன், வசனம்-நீலன் கே.சேகர், கதை-மகா, மக்கள் தொடர்பு-நிகில்.

பள்ளிபருவக்காதல்:-நிஷேஷ் ஒரே வகுப்பில் படிக்கும் தன் சக தோழியான ஸ்வேதாவின் பாட்டு பாடும் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார். ஸ்வேதாவின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வேதாவை படிக்க டெல்லி அனுப்பி விடுகிறார். இதனால் வெறுப்படையும் நிஷேஷ் தன் தந்தை கஷ்டப்பட்டு செய்த சாமி சிலையை உடைத்து விடுகிறார்.தன் உழைப்பு வீணானதை பார்த்து நிஷேஷின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் நிஷேஷின் நிலைமை என்ன ஆனது? படிப்பு நின்று போனதா?இது முதல் பள்ளிபருவக்காதல்.

பதின்ப வயது காதல்:-அடியாளாக வேலை செய்யும் கார்த்திக் ரத் னத்தை மோதலில் சந்திக்கும் ஐரா பின்னர் காதலிக்க தொடங்குகிறார். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்களின் காதல் தொடர, ஐராவின் அப்பா இதனை பார்த்து கோபமாகிறார். கார்த்திக் ரத்னம் நல்ல வேலையை தேடி வெளியூருக்கு செல்ல அந்த நேரத்தில் ஐராவின் தந்தை மகளை மிரட்டி பணிய வைத்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.  இதனையறியாத கார்த்திக் ரத்னம் சம்பாதித்து திரும்பி வர ஐராவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதையறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். அதன் பின் கார்த்திக் ரத்னம் என்னவானார்? இது பதின்ப வயது காதல்.
இளமைக்காதல்- மதுபானக் கடையில் வேலை செய்யும் வெற்றிக்கு அங்கு தினசரி மது வாங்க வரும் மும்தாஜ் சர்க்கார் மீது ஈர்ப்பு ஏற்பட, நாளடைவில் காதலாக மாறுகிறது. மும்தாஜ் பாலியியல் தொழிலாளி என்பதையறிந்து முதலில் தடுமாறினாலும் பின்னர் காதலில் உறுதியாக இருக்கிறார். இருவரின் திருமணத்திற்கு முந்தைய நாள் மும்தாஜிற்கு நடந்தது என்ன? வெற்றிக்கு நேர்ந்த பேரடி என்ன? இது இளமைக்காதல்.

40 வயதை கடந்த காதல்:- 49 வயதிலும் திருமணம் ஆகாமல் இருக்கும் தீபனுக்கு தன் அலுவலகத்தில் புதிதாக சேரும் விதவை கேரள பெண் ஆபிசர் சோனியா கிரி நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒன்றாக பழகி உதவிகள் செய்கின்றனர். சோனியாவிற்கு மகள் இருக்கிறார். மகளிடம் சம்மதம் பெற்று தீபனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட, சோனியாவின் தம்பி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களின் காதலுக்கு மகள் எவ்வாறு உதவி செய்கிறார்? காதல் கைகூடியதா? திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை. இது 40 வயது காதல்கதை.

ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காதல் பருவத்திற்குகேற்ற பங்களிப்பை சிறப்பாக கொடுத்து நான்கு விதமான பருவ நிலை இறுதியில் ஒரே நேர்கோட்டில் இணைவதை சிறப்பாக கொடுத்து நடிப்பில் முத்திரை பதித்திருக்கின்றனர்.

இசை-சுவீகர் அகஸ்தி, ஒளிப்பதிவு-குணசேகரன் இருவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

எடிட்டர்-ஸ்ரீகர் பிரசாத் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சம்பவங்களை அழகாக எடிட் செய்து அனைவருக்கும் புரியும்படி தெளிவாக கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.

திரைக்கதை, இயக்கம்- ஹேமம்பார் ஜஸ்டி.தெலுங்கு மொழியில் 2018-ஆம் ஆண்டு வெளியான ஊஃழு. கஞ்சரபாலம் படத்தின் ரீமேக் தமிழ் கதைக்களத்திற்கேற்றவாறு கொஞ்சம் மாற்றியமைத்து, கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹேமம்பார் ஜஸ்டி. நான்கு கதைகளுக்கும் இணைப்பு பாலமாக தீபன் கதாபாத்திரத்தை கொடுத்து இறுதியில் எந்த வயதில் காதல் வெற்றி பெற்றது என்பதை காமெடி கலந்து இயல்பாக கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஹேமம்பார் ஜஸ்டி.வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் c/o காதல் வித்தியாசமான கதைக்கும், காதலுக்கும் உத்திரவாதம்.