ஓம் சாந்தி என்ற பெயரில் பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்கள் தமிழகத்தில் சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம்

ஓம் சாந்தி என்ற பெயரில் பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்கள் தமிழகத்தில் சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம்

* விளக்கேற்ற திரியுடன் கூடிய சுத்தமான பசு நெய் தீபம்
* சந்தன் டிகா எனும் சுத்தமான சந்தன பவுடர்
* 5 எண்ணெய்களை கொண்ட விளக்கேற்றும் எண்ணெய்

சென்னை, அக். 26,2018: உலக அளவில் ஊதுபத்தி தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாக திகழும் என்ஆர் குழுமத்தின் சைக்கிள் பியூர் அகர்பத்தி பூஜைக்கேற்ற 3 புதிய பொருட்களை ஓம்சாந்தி என்ற பெயரில் தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. ஓம்சாந்தி தியா என்னும் பெயரில் சுத்தமான பசு நெய் மற்றும் திரியுடன் கூடிய நெய் தீபம், ஓம்சாந்தி சந்தன் டிகா என்ற பெயரில் சுத்தமான குழைத்த சந்தனம் மற்றும் ஓம்சாந்தி என்ற பெயரில் சுத்தமான விளக்கேற்றும் எண்ணெய் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சைக்கிள் பியூர் அகர்த்தியின் நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா மற்றும் தென் மண்டலத்திற்கான பிராண்ட் அம்பாசிடர் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் இந்த 3 புதிய பொருட்களை அறிமுகம் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களை மனதில் வைத்து அவர்கள் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் கார்பன் சமநிலை சான்றிதழ் பெற்ற அகர்பத்தி உற்பத்தியாளர்களான சைக்கிள் பியூர் அகர்பத்தி இந்த 3 புதிய சுத்தமான பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பொருட்கள் தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற அனைத்து விழாக்களையும் பூர்த்தி செய்யும்.

புதிய பொருட்கள் குறித்து சைக்கிள் பியூர் அகர்பத்தி நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், இந்த தீபாவளி பூஜை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் எங்கள் புதிய பொருட்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் எங்கள் பொருட்களை தயாரித்துள்ளோம். சுத்தமான எங்கள் பொருட்கள் பூஜையின்போது ஒரு நல்ல நறுமண சூழலையும் முழுமையான அனுபவத்தையும் அளிக்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், புதிய பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வசதிகளை வழங்கும் அதே சமயம் பூஜை அனுபவத்தையும் மேம்படுத்தும். முதலாவது தயாரிப்பு ஓம் சாந்தி தியா என்னும் பெயரில் சுத்தமான பசு நெய்யால் தயாரிக்கப்பட்ட நெய் தீபம் ஆகும். இதை எளிமையாக பயன்படுத்தலாம். இது சுத்தமான நெய்யால் தயாரிக்கப்படுகிறது. இது சான்றளிக்கப்பட்ட சப்ளையர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இது எரியும்போது இதிலிருந்து நல்ல மணமுள்ள மல்லிகை வாசம் வரும். இதில் இருந்து எந்தவித நச்சு பொருளும் வெளிவராது. இது 30 மற்றும் 100 எண்ணிக்கையில் பாக்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

2வது பொருளான பூஜைக்கு மிகவும் முக்கியமான சந்தனம் `சந்தன் டிகா’ என்ற பெயரில் வந்துள்ளது. இது 100 சதவீதம் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். இது இந்திய அரசால் சான்றளிக்கப்பட்ட ஆயுஷ் டிபார்ட்மெண்ட் மற்றும் சுத்தமான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த சந்தனம் 40 மற்றும் 80 கிராம் பாக்கெட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3வதாக ஓம்சாந்தி விளக்கேற்றும் எண்ணெய் ஆகும். இந்த விளக்கேற்றும் எண்ணெய் 5 எண்ணெய்களின் கலவையாகும். இதில் தேங்காய் எண்ணெய், தவிடு எண்ணெய், எள் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் ஆகியவை உள்ளது. இது பூஜையில் அழகிய ஒளியையும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியையும் தரும். இந்த எண்ணெய் 500 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் பாட்டில்களில் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்து சைக்கிள் பியூர் அகர்பத்தி தென் மண்டல பிராண்ட் அம்பாசிடர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில், இந்த பொருட்கள் இந்த பிராண்டின் மிகவும் அற்புதமான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களை இந்நிறுவனம் கடந்து வருகிறது. சைக்கிள் பியூர் அகர்பத்திகள் ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் அவர்களின் பிரார்த்தனைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பூஜை பொருட்களை நாம் எளிமையாக பயன்படுத்தலாம். இது அடுத்த தலைமுறைக்கு நமது கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல உதவுகிறது.

எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிராண்டின் புதிய பொருட்கள் அனைவரின் வீடுகளிலும் பிரார்த்தனைக்கு உகந்ததாக இருக்கும். இந்த புதிய பொருட்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து பூஜை தேவைகளை பூர்த்தி செய்வதோடு தூய நறுமண அனுபவத்தையும் அவர்களுக்கு அளிக்கும் என்றார்.

இந்த பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அது பற்றி விவரங்களை https://www.cycle.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ:

Cycle Pure Agarbathies unveils 3 special products for puja in Tamil Nadu

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *