M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் “Control Z”

M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம் “Control Z”

விவேக் கதாநாயகன் ஆக வெளி வந்த ‘பாலக்காட்டு மாதவன்’ பட இயக்குனர் M.சந்திரமோஹன் அவர்களின் அடுத்து இயக்கும் திரைப்படம்
” Control Z ” (செய்யாதே)

Ctrl Z என்பது கணினி மொழியில் செய்த தவறை அழித்துவிட்டு மீண்டும் புதிதாக செய்வது ஆனால் ஒவ்வொருவரின் வாழ்விழும் எல்லா நிகழ்வுகளும் ஒரு முறைதான் நடக்கும் இரண்டாவது முறை கிடையாது கணினி போல Ctrl Z கொடுத்து வாழ்வியல் நிகழ்ச்சிகளை அழித்துவிட்டு மீண்டும் புதியதாக ஆரம்பிக்க முடியாது. பிறப்பும் இறப்பும் காதலும் கல்யாணமும் எல்லாமே வாழ்க்கையில் ஒரு முறைதான் அதை உணர்த்தவதற்காகவே Ctrl Z (செய்யாதே)

இப்படத்தினை சினேஹம் சினிமாஸ் நிருவனம் தயாரிக்கிறது . இணை தய்யாரிப்பு M எழுமலை (DN films) இப்படத்தின் ஒளிப்பதிவு உன்னி K. மேனன், தயாரிப்பு நிர்வாகம் L.P.சதீஸ், வசனம் விஜய் கந்தசாமி, புது முகங்கள் அறிமுகமாகிறார்கள் ஸ்ரீஹரி,ராஜேஷ் தலாகாதீவி, சினேஹ சித்திராய், ரெஜீஷ்,சனா,மகேஷ்ராஜ்,பாவிகா,சுமேஷ் தச்சனாடன் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மய்யமாக கொண்டும் காதலுக்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் காதலின் உண்மையான உணர்வுகளின் வலி வேதனை ஏமாற்றம் போன்ற எல்லா படி நிலைகளை உணர்த்தும் திரைப்படம். படம் வருகின்ற பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *