எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு

எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு!

நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாட்டை இந்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்தியது.

நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. “சுவஸ்த் பாரத் யாத்ரா” என்கிற பான் இந்திய சைக்கிலோத்தான் இந்த இயக்கம் தொடங்க முக்கிய காரணமாக அமைந்தது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விருப்பத்திற்கிணங்க மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தின் வழியை பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுவஸ்த் பாரத் யாத்ரா அக்டோபர் 16,2018 உலக உணவு நாள் அன்று ஆறு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொண்டாடப்பட்டு நிறைவாக தலைநகர் டெல்லியில் ஜனவரி 27,2019 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த இயக்கம் 150 தன்னார்வல சைக்கிளிஸ்கள் ,நல்லதை சாப்பிடும் இந்தியா சிறப்பு கால்வாய் மற்றும் சிறிய உணவு சோதனை வாகனங்களுடன் நாட்டின் 2000 முக்கிய நகரங்களில் 100 நாட்கள் பயணிக்க உள்ளது. இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்வின் முழு பொறுப்புகளையும் எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை எடுத்து கொண்டு அந்த நிகழ்வை முனைவர் தி.பொ.கணேசன் கலையரங்கில் நடத்தியது. இந்நிகழ்வின் தொடக்கமாக மாணவர்களின் நடைபயண பேரணி கூடுவாஞ்சேரியில் தொடங்கி எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூரில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் மாணவர்கள் உணவுப் பாதுகாப்பு திட்டம் குறித்து வாசகங்களை ஏந்தி வந்தனர். இந்த பேரணியில் எஸ்.ஆர்.எம் மாணவர்களோடு, லயோலா, சிஎஸ்ஐ எவார்ட் உடன் உணவு பாதுகாப்பு துறை இயக்குநர்கள் , ஊழியர்கள் பல்வேறு பள்ளி மாணவர்கள், செவிலியர் கல்லூரி மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மரகதம் குமரவேல் , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா ஆகியோர் உடன் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளர் நா.சேது ராமன் மற்றும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் டாக்டர் அசோக் ஆன்டெனி ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சோனா அருணா வரவேற்புரை வழங்கினார் அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ள சிங்கப்பூர் உணவக கலைஞர்கள் சிமோன் பிராடர்நேல் மற்றும் சேப் சோபிடேல் தங்கள் செய் முறை விளக்கங்களை வழங்கினர்.பிறகு சின்னத்திரை கலைஞர் திரு டில்லி கணேஷ் உணவு அறிவியல் பற்றிய தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்தார்.அதை தொடர்ந்து மருத்துவர் சிவராமன் ஆரோக்கியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினார்.
மதிய உணவு இடைவேளையின் முன்பு சமையல் கலைஞர் தாமோதரன் அவர்கள் சில சமையல் செயல்முறைகளை செய்து காட்டினார்.பிறகு பாரம்பரிய பழங்கள் கொண்டு பழக்கலவை செய்து காட்சிப்படுத்தப் பட்டது.
நிறைவாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக பதிவாளர் நா.சேதுராமன் அவர்களும் உணவக மேலாண்மை கல்லூரி இயக்குநர் டாக்டர் அசோக் ஆன்டெனி அவர்களும் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.

ALSO READ:

Govt of Tamilnadu and SRM conducted Eat Right India Convention

 

Please follow and like us: