எழுமின் விமர்சனம் ரேட்டிங் 3/5

எழுமின் விமர்சனம்

ரேட்டிங் 3/5

வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்”.

விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேமகுமார், ரிஷி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்-பா.விஜய், ஏ.எஸ்.தமிழனங்கு, மோகன் ராஜா, நடிகர் விவேக், எடிட்டர் – கார்த்திக் ராம், கலை-எஸ்.ராம், சண்டை- மிராக்கல் மைக்கேல் ராஜ், பிஆர்ஓ. – குமரேசன்.

தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி.

மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது. தற்காப்புக் கலையையும் கற்க வேண்டும். தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதை.

விவேக் – தேவயானி தம்பதிக்கு ஒரு மகன் அர்ஜீன் (சுகேஷ்). படிப்பு மட்டும் இன்றி பாக்ஸிங்கிலும் அசத்தும் அச்சிறுவனைப் போல, பல சிறுவர்கள் தற்காப்பு கலை மீது ஆர்வமாக இருக்க, அவர்களை விவேக் ஊக்கப்படுத்தி வருகிறார். விவேக் வசதியானவராக இருந்தாலும், சில ஏழை மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.நல்ல திறமை இருந்தும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக ஏழை மாணவர்களை விளையாட்டு அழகம் பெருமாள் நடத்தும் அகடாமியில் இருந்து வெளியேற்றுவதுடன், அவர்களை தேசிய அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ளாதபடியும் செய்கிறார்கள். இந்நிலையில் அர்ஜீன் பாக்ஸிங்கில் நேஷ்னல் லெவலுக்கு செல்க்ட் ஆகிறார். அந்த போட்டியில் ஜெயித்த சந்தோஷத்தில், மிகுந்த உற்சாகத்தில் இவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த நிமிடமே இறக்கிறார். இதனால் தன் மகனின் ஆசைப்படியும்,நினைவாகவும் ஒரு ஸ்போர்ட்ஸ் அகடாமி ஆரம்பித்து அர்ஜீனின் 5 நண்பர்களுக்கும் மற்றும் ஏழை மாணவர்களுக்கும் இலவச பயிற்சி கொடுக்கிறார் விவேக். இதனால் விவேக்கிற்கும் அழகம் பெருமாளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. விவேக் தன் அகாடமி மூலம் திறமையுள்ள ஏழை சிறுவர்களை தயார் படுத்தி, போட்டியில் வெற்றி பெற செய்ய, தன் பண பலத்தாலும் அதிகார வர்க்கத்தாலும் விவேக்கின் மாணவர்களை அழகம் பெருமாள் தடுக்க நினைக்கிறார். சிறுவர்கள் விவேக்கின் உதவியுடன் போட்டியில் மட்டும் அல்லாமல், தங்களுக்கு நிஜ வாழ்க்கையில் வரும் சோதனையிலும் போராடி எப்படி வெற்றி பெறுகிறார்கள், என்பது தான் ‘எழுமின்” படத்தின் மீதிகதை.

‘எழுமின்” தமிழில் வரும் முதல் தற்காப்பு கலை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்தும் இருக்கிறார்கள்.

தற்காப்புக் கலைகளை மாணவர்கள் அவசியமாகக் கற்கவேண்டும். அதை இந்தப் படத்தில் விவேக்; முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர நடிகராக அசத்தியுள்ளார். அவரது மனைவி வேடத்தில் நடித்திருக்கும் தேவயானியும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

அழகம்பெருமாள், பிரேம், ஜெயச்சந்திரன், ரிஷி. நல்ல தேர்வு. அனைவரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். செல் முருகன் நம்மை அவ்வபோது சிரிக்க வைத்துவிடுகிறார்.

பிரவீன், ஸ்ரீஜித், வினீத், சுகேஷ், கிருத்திகா, தீபிகா இவர்கள் சிலம்பம், பாக்ஸிங், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என ஒவ்வொருவரும் நம்மை மிரள வைத்துள்ளனர்.

இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரின் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு ப்ளஸ். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்;. ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கில் மைக்கல் ராஜின் மிரட்டலான இறுதிகட்ட சண்டைகாட்சிகள் பாராட்டியாக வேண்டும்.

குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை தரக்கூடிய தற்காப்பு கலைகளை இன்றைய சமூகம் கற்றுக் கொடுக்க தவறி வருகிறது அதனால் அழிந்தும் வருகிறது. அபாயகரமான சூழ்நிலையில் அவர்களை தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்துவிட்டால் நாட்டில் குற்றங்கள் தடுக்கப்படும் என்ற கருத்தை மையமாக கதையமைத்து, ஹீரோயிஸம் துளியும் இல்லாத திரைக்கதை அமைத்து, Arise Awake Achieve  என்கிற தாரக மந்திரத்தை எடுத்து சொல்ல அருமையான தேர்வாக விவேக்கை தேர்ந்தெடுத்ததுக்காக இயக்குனர் விஜியை பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கையாக எழுமின் வீறுநடை போடும்.

Please follow and like us: