எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள் கொண்டாடப்பட்டது.

காட்டாங்குலத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் யுனெஸ்கோவின் இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை உலக பயோ எதிக்ஸ் நாளான நேற்று தொடங்கியது.பயோ எதிக்ஸ் என்பது உயிரியல் மற்றும் மருந்து பற்றி புது முயற்சிகள் அதன் நவீனத்துவம் பற்றி அறிவதாகும்.இத்தைகய முயற்சி நோயாளிக்கும் மருத்துவர்களுமான உறவை மேம்படுத்த உதவும்.

இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை இத்தகைய சிறப்பான நாளில் தொடங்கப்பட்டதே பல்வேறு தொழில்நுட்ப துறையை சார்ந்த மாணவர்கள் அனைவரும் பயன்பெறவே. இந்த மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி ஆவார் , இந்த யுனிட்டின் தலைவர் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் அ.சுந்தரம் மற்றும் இதன் செயலாளர் துணை முதல்வர் மருத்துவர் கே.கிரிஷ் மற்றும் மையத்தின் உலகலாவிய தலைவராக ஆசிய பசுபிக் இயக்குநர் பேராசிரியர் ரூஸ்வெல் பிரான்ஸ்கோ ஆகியோர் இதன் அலுவலக உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் மருத்துவர் அ.சுந்தரம் , பேராசிரியர் ரூஸ்வெல் ஃபிரான்ஸ்கோ , டாக்டர் எம்ஜிஆர் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பதிவாளர் நா. சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தீப் சன்செட்டி பேசுகையில் “பொறியாளர்கள் எப்படி எந்திரங்கள் உடன் உள்ளனரோ மருத்துவர்கள் மனித உடலுடன் உள்ளனர்” பயோ எதிக்ஸ் எல்லா மருத்துவர்களும் முக்கியம் என்பதை அறிவுரைத்தார். டாக்டர் கீதா லஷ்மி பேசுகையில் “மருத்துவம் பயிலும் மாணவர்கள் உறுதி தன்மை மற்றும் நியாயமான வழி முறைகளை கையாள வேண்டும் . எல்லா மருத்துவர்களும் மனிதநேயத்துடன் உலக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று பேசினார். பேராசிரியர் ரூஸ்வெல் பிரான்ஸ்கோ மருத்துவ தர்மத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.நிறைவாக பதிவாளர் நா. சேதுராமன் வருகை தந்த அனைத்து விருந்தினர்களையும் வாழ்த்தி பேசினார்.

இந்த நிகழ்வில் பல்வேறு மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை காட்சிப்படுத்தினர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் கிரிஷ் நன்றியுரை வழங்கினார்.

ALSO READ:

SRMIST celebrated World Bioethics Day 2018 with the theme Solidarity and Cooperation

 

Please follow and like us: