SRMIST முதுநிலை மேலாண்மையியல் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் குறித்து பயிலரங்கம்

SRMIST முதுநிலை மேலாண்மையியல் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் குறித்து பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் முதுநிலை மேலாண்மையியல் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் குறித்து பயிலரங்கை நடத்தியது.
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை வழங்கிவருகிறது.காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மேலாண்மைப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் குறித்து பயிலரங்கினை நிதி, விற்பனை யுக்தி, செயல்பாடு, தொழில் வழிமுறைகள் மற்றும் மனித வளம் ஆகிய தலைப்புகளில் பயிலரங்குகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பற்றியும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. மண்டோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் திரு சுந்தர்ராஜன் நிதி பற்றிய பயிலரங்கத்திற்கு தலைமை வகித்தார். மேலும் ஜிடிபி மற்றும் அமெரிக்க இந்திய நாணயங்கள் மதிப்பீடு பற்றி எடுத்துரைத்தார்.அதை தொடர்ந்து மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கினர். சோகா நிறுவனத்தின் விற்பனை மற்றும் வியாபார மேம்பாட்டு அலுவலர் திரு அரவிந்த் நடராஜன் செயல்பாட்டு வழிமுறைகள் பற்றி டேட்டா பேஸ் மேலாண்மை பற்றியும் பேசினார்.டைலமர்இ ரெனால்ட் நிசான் மற்றும் ரென் பிரேக்ஸ் ஆகிய நிறுவனங்களின் செயற் மேலாளர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் சிறப்புரையை வழங்கினர். ப்ரோஸ்டு ரூ சுவிலின் நிறுவனத்தின் வியாபார ஆராய்ச்சி தலைவர் திரு ஸ்ரீ காந்த் விற்பனை யுக்தி பற்றி பேசினார். ஹ்ன்டாய் நிறுவனத்தின் மனித வள பிரிவின் அலுவலர் திருமதி பியர்லினா பரத் குமார் மனித வளம் துறையில் உள்ள சவால்கள் குறித்து மாணவர் மத்தியில் பேசினார்.
நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற மனித வள மேம்பாட்டு நிபுணர் திரு ஸ்டான்லி ஜார்ஜ் மற்றும் திரு முரளி ஆகியோர் கலந்து கொண்டு மேலாண்மை துறையின் எதிர்காலம் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் பேசினர். திரு ராஜன் அவர்கள் மேலாண்மைத் துறைக் குறித்த அண்மை செய்திகளை பகிர்ந்தார். விழா நிறைவாக மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

ALSO READ:

SRMIST organized Campus 2 Corporate workshop for Management Students

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *