காயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5

காயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம்

ரேட்டிங் 4/5

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, பிரியா ஆனந்த் நடித்துள்ள மலையாள படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. கோகுலம் கோபாலன் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘உதயநாணு தாரம்”, ‘மும்பை போலீஸ்”, ‘ஹவ் ஓல்ட் ஆர் யு” உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். பினோத் பிரதான் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். பி.ஆh.ஓ. சுரேஷ்சந்திரா.

கி.பி. 1830 காலகட்டத்தில் நடப்பது போல் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது ‘காயம்குளம் கொச்சுண்ணி’. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தையும், கேரளாவில் வசித்த உயர் சாதி பிரிவினரின் துவேஷத்தையும் எதிர்த்துப் போராடிய, நிஜமான ஒரு ஹீரோ காயம்குளம் கொச்சுண்ணியின் வரலாற்று கதை.

காயங்குளத்தில் உணவு திருடியதற்காக ஆடை அவிழ்த்து அசிங்கப்படுத்தப்படுகிறார் கொச்சுண்ணியின் தந்தை. அங்கிருந்து வெளியேறி, பிழைக்க வேறு ஊருக்கு வருகிறான் கொச்சுண்ணி. தன் அடையாளங்களை அவன் மறைத்தாலும், அவன் குடும்பத் தொழிலைச் சொல்லி அவன் சில விஷயங்களுக்குப் புறக்கணிக்கப்படுகிறான். பின்பு வேறொரு சூழலில், அவன் விரும்பாததைச் செய்யச்சொல்லி நிர்பந்திக்கப்படுகிறான். அவன் வாழ்வு சிதைகிறது. செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்குகிறான். ஆதனால் பல விளைவுகளை சந்திக்கிறான்.நலிந்த மக்களுக்கு கடவுளாகவும், செல்வந்தர்களுக்கு திருடனாகவும் தெரியும் கொச்சுண்ணிக்கு இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் காயங்குளம் கொச்சுண்ணி படத்தின் கதை.

வரலாறு பதிவு செய்த உண்மைகளையும், வாழ்க்கை பிரதிபலிக்கும் உண்மைகளையும் அதிரடி சண்டை, அதிக கற்பனை என்ற கலவை இல்லாமல், யதார்த்தமான சினிமாவை பலரின் மனதுக்கு நெருக்கமானதாக தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தன் ஸ்ரீகோகுலம் மூவிஸ் ‘காயம்குளம் கொச்சுண்ணி”யை கொடுத்திருக்கிறார்.

கொச்சுண்ணியாக நிவின் பாலி. நடை,உடை, பாவனையால் தனித்து நின்று தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். அழகாகவே இருக்கிறார் ப்ரியா ஆனந்த். கிடைத்த வாய்ப்பில் இரண்டு விதமான நடிப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால், இதிக்கரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார்.

கேஷவனாக வரும் சன்னி வெய்னும், மணிகண்ட ஆசாரியும், தங்கலாக வரும் பாபுவும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

களரி மாதிரியான பாரம்பர்யக்கலையின் பயிற்சியும் அதை அடிப்படையாகக் கொண்ட சண்டைக் காட்சிகளும் சிறப்பாக ஹாலிவுட் தரத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள் வினோத் பிரதான், நீரவ்ஷா, சுதீர் பல்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்கள்.

மிரட்டளான பின்னணி இசையுடன் கவனத்தை ஈர்க்கும் பாடல்களை கொடுத்துள்ளார் கோபி சுந்தர்.

காயம்குளம் கொச்சுண்ணி 1830ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழந்த பழம்பெரும் திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி கடவுளாக போற்றப்பட்டவரைப் பற்றிய உண்மைக்கதையை திரைக்கதையாக்கி சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரு. படத்தில் வரும் வசனங்கள் பல கை தட்டல் பெறுகிறது. சூத்திரப் பெண்ணைக் காதலிக்கும் முஸ்லிம், தீட்டுப்பட்ட கிணற்றை மூடுவது, கசையடி, புத்தகங்களை வைத்து தண்டனை கொடுப்பது போன்ற பல அடக்குமுறைகளை படம் தோலுரித்துக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினால் கொச்சுண்ணியைப் பிடிக்கும் வியூகமும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகச் செல்லும் கதை, இறுதி கட்டத்தில் கோச்சுண்ணிக்குள்ளும் இருக்கும் வீரத்தையும், தப்பிக்க பல வியூகங்களை கையாண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் துணையோடு தப்பிக்கும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொச்சுண்ணி மனதை அள்ளுகிறார். கொச்சுண்ணி சிறையில் இருக்க ஃபிளாஷ்பேக்கில் ஆரம்பிக்கும் கதையை தங்கு தடையில்லாமல் ஒரே நேர்க்கோட்டில் சொல்லிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரு, பாராட்டுக்குரியவர்.

மொத்தத்தில் அனைவரும் கண்டு ரசிக்கக்கூடிய காயம்குளம் கொச்சுண்ணி வரலாற்றுக் கதையின் உயிரோட்டமான காட்சிகள் படத்தின் வெற்றிக்கு சாட்சி..

Please follow and like us: